ரொம்ப முக்கியம்

  • 30
Binth Ameen SEUSL

அன்டனி ஒபீஸும் வேலையுமாயென பிஸியாக இருப்பவர். மாஸ்க் வேறு இவரை பாடாய்படுத்தியது. “எங்க மா என் மாஸ்க்” என காலையில் தேடுவதும் மாலையில் அப்படியே கலட்டி வீசுவதுமாய் இருந்தது இவர் வாழ்க்கை.

நாட்கள் உருண்டோட தீடீரென இவருக்கு முடிவிலியாய் இருமல். மழை, பனி பழக்கப்பட்ட இவருக்கு அதனால் தொற்றிட வாய்ப்பில்லை. இதுவரை அப்படி தொற்றியதுமில்லை.

எதுக்கும்  பீசீஆர் பரிசோதனை என மனைவியின் பயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எடுத்தார் பரிசோதனை. எதிர்பார்த்தால் போல் நெகடிவ். மனைவிக்கு உள்ளார மகிழ்ச்சி நேர்தைக் கடன்களை மேலதிகமாய் கொடுத்த வண்ணம்.

ஓர் வாரம் கழித்து ஆபிஸில் வேலை செய்து கொண்டிருக்கையில் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை உணர்ந்த இவர் வீட்டுக்குச் சென்று கொஞ்சம்  நேரம் குழந்தை மனைவியுடன் கழித்துவிட்டு இறக்கலாம் என்ற மனநிலைக்கே தள்ளப்பட்டார்.

வீட்டுக்குள் நேரகாலத்துடன் அப்பா நுழைவதை கண்ட மகன் சந்தோசத்தில் சத்தம் கேட்டு ஓடி வந்து முத்தமிட நினைத்திடவே மாஸ்க் பெறும் திரையாய் இருந்திட்டு.

“அப்பா! இதுவா உங்க மாஸ்க் கழுவியதே இல்லயோ. இவ்வளவு ஊத்த இனி தும்மல் வராமலா இருக்கும் தும்மல்  போய் போயே மூக்கு பிஞ்சியிருக்கனுமே இந்நேரம்” என தனக்கு பட்டதை உடனடியாக உலரிவிட்டான்

“என்னடா! அப்பாவுக்கு வந்தொன்ன டிஸ்டப் பண்ணா புடிக்காது. அவர் ரெஸ்ட் எல்லாம் எடுத்து அர மணி நேரம் கப்புறம் தானே நம்மல்டயே பேசுவார். அடிவாங்கப் போற கத்தாதடா” அம்மாவோ அங்கலாய்க்க,

“இல்லடா அவன்  கரக்ட் இவ்ளோ நாள் யோசிச்சன் புரியல ஏன் தும்மல் னு. மாஸ்க்ல இருக்குற டஸ்ட் எல்லாம் தான் உள்ள போக  தும்மல் வருதுன்னு இப்பான் மா புரியுது. அதான் போய் போய் மூக்கே பிஞ்சிட்டு இரத்தம் வருது. ஊத்தயெல்லாம் சேர்ந்து சுவாசப்பையே சீரில்லாம போயிடும். இனியாச்சும் டய்லி கழுவனும் மாஸ்க். இப்பான் மண்டக்கி படுது ஏன்  இவ்ளோ தும்மல் னு. அப்பாவுக்கு நீயும் ஹெல்ப் பண்ணு கழுவ ஞாபகம் காட்டு சரியா. பிஸி என்டாலும் இதான்  இப்பநிய் நோமல் லைப்ல ரொம்ப முக்கியம்.

Binth Ameen SEUSL அன்டனி ஒபீஸும் வேலையுமாயென பிஸியாக இருப்பவர். மாஸ்க் வேறு இவரை பாடாய்படுத்தியது. “எங்க மா என் மாஸ்க்” என காலையில் தேடுவதும் மாலையில் அப்படியே கலட்டி வீசுவதுமாய் இருந்தது இவர்…

Binth Ameen SEUSL அன்டனி ஒபீஸும் வேலையுமாயென பிஸியாக இருப்பவர். மாஸ்க் வேறு இவரை பாடாய்படுத்தியது. “எங்க மா என் மாஸ்க்” என காலையில் தேடுவதும் மாலையில் அப்படியே கலட்டி வீசுவதுமாய் இருந்தது இவர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *