பெண்மையை மதித்திடுவோம்

  • 15

பெண்ணென்ற நாமம் தாங்கி
மென்மைப் பூக்களாய்
மண்ணில் உதிக்கும் மங்கைகளை
கண்ணெனக் காத்திட
வையகமே திரண்டெழுவாய்!

நாணம் பூணும் நங்கையவள்
மானமதைக் காத்திங்கு
மாதர் குலம் போற்றிட
மானிடமே துவண்டெழுவாய்!

வீரியம் மிக்க விடலையே – நீர்
விளக்கென்றால் திரியாகி
இருளென்றால் மதியாகி
விண்ணென்றால் உடுவாகி
மண்ணென்றால் மலராகி
உம் வாழ்வினை வனப்பாக்கிடும்
உன்னத பிறவியினை
உயிராய் மதித்திடுவீர்!

தாயாய்ப் பாலூட்டி
தாரமாய் கைகோர்த்து
தமக்கையாய் சீராட்டி
தங்கையாய் உறவாடி
வாழ்விற்கு உரமூட்டிய
வானவனளித்த வரங்களை
தேன் சுமக்கும்
பூவாய் தாங்கிடுவீர்!

பூவுலகப் பூவையவள்
பிணி தொற்றி
மேனி தளர்ந்தாலும்
பணியதனை பக்குவமாய் ஆற்றியே
அன்னத்தை அறுசுவையாக்கி
கிண்ணத்தில் படைத்திடுவாள்.

அவளில்லா வாசம்
குடியில்லா தேசம்
அவள் கொள்ளும் நேசம்
தேமதுரக் கனியாகும்

அவள் மேன்மை அழித்திட
வன்மைப் பாணம் எய்திடாது
பெண்மையை மதித்து
கண்ணியம் காத்திடுவோம் என்றே
திக்கெட்டும் குரலெழுப்பிடுவோம்!

ILMA ANEES
(WELIGAMA)
3RD YEAR
SEUSL

பெண்ணென்ற நாமம் தாங்கி மென்மைப் பூக்களாய் மண்ணில் உதிக்கும் மங்கைகளை கண்ணெனக் காத்திட வையகமே திரண்டெழுவாய்! நாணம் பூணும் நங்கையவள் மானமதைக் காத்திங்கு மாதர் குலம் போற்றிட மானிடமே துவண்டெழுவாய்! வீரியம் மிக்க விடலையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *