சோதனைகள் புதிதல்ல

  • 10

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் சோதனைகள் ஒன்றும் புதிதல்ல. ஆதிபிதா ஆதம்நபி முதல் இறுதித் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் வரை அனைவரும் சோதனைகளால் பீடிக்கப்பட்டோர்தான்.

பொறுமை எனும் பணிவும், இறைநம்பிக்கை எனும் துணிவும். சோதனைகளிளில் எல்லாம் துணையாய் இஸ்லாமிய வரலாற்றிலே இதயங்கள் எல்லாம் ஈமானிய பலத்தால் இரும்பாகியிருந்தன.

பாராங்கல் கொண்டு அழுத்திய போதும் பிலால் (ரழி) பயந்துவிடவில்லை. தீயால் சுட்டு வருத்திய போதும் ஹப்பாப் (ரழி) ஈமான் இழக்கவில்லை. சிலுவையில் ஏற்றிய போதும் அபூகுபைப் (ரழி) இறை நிராகரிக்கவில்லை. இஸ்லாமிய வரலாற்றிலே இதயங்கள் ஈமானிய பலத்தால் இரும்பாகியிருந்தன.

போர்முனையில் குற்றுயிராய்த் தாகித்திருந்த போதும், தண்ணீரை அடுத்தவர்க்காய் கொடுக்கத் துணிந்த பரிசுத்த சுஹதாக்களின் தியாகத்தில் வளர்ந்த மார்க்கம் இது.

காபிர்களின் கொடுமையெல்லாம் பொறுமையுடன் சகித்திருந்து எங்கள் தாஹா நபி தந்த சத்திய மார்க்கம் இது. தாயிப் நகர்தனிலே தூதர் மேனியதிலே வடிந்தோடிய குருதியெல்லாம் பொறுத்தாரே எம் பூமான் நபியவர்கள்.

தங்கமகள் சுமையாவை அம்பு கிழித்த வரலாறும் இமாமுனா ஹஸன் ஹுஸைனவரின் வீர மரணங்களும் தீன்மார்க்கம் வளர்த்திடவே. சிறிய தந்தை ஹம்சாவைக் கொலை செய்தோனையும் உயிர்பிரிந்த அவ்வுடலை துண்டாடி மகிழ்ந்த பெண்ணவளையும் மன்னித்த மா கருணை
மாநபி சமாதானம் நிலைப்பதற்கே.

சோதனைகள் ஒன்றும் புதிதல்ல, வரலாற்றுத் தடமெல்லாம் ரணமான தடயங்கள் தான். ஈமானை இரும்பாக்க சோதனையும் காரணம்தான்.

சுவனத்தை சுவைத்திடவே சுமையெல்லாம் பொறுப்போமே நிலையற்ற இவ்வுலகின் முறையற்ற நிகழ்வுகளால் நெறி தவறிப் போகாமல் மறை வழியில் வாழ்வோமே. இறை நேசம் பெறுவோமே.

மக்கொனையூராள்

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் சோதனைகள் ஒன்றும் புதிதல்ல. ஆதிபிதா ஆதம்நபி முதல் இறுதித் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் வரை அனைவரும் சோதனைகளால் பீடிக்கப்பட்டோர்தான். பொறுமை எனும் பணிவும், இறைநம்பிக்கை எனும் துணிவும். சோதனைகளிளில்…

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் சோதனைகள் ஒன்றும் புதிதல்ல. ஆதிபிதா ஆதம்நபி முதல் இறுதித் தூதர் முஹம்மது நபி ﷺ அவர்கள் வரை அனைவரும் சோதனைகளால் பீடிக்கப்பட்டோர்தான். பொறுமை எனும் பணிவும், இறைநம்பிக்கை எனும் துணிவும். சோதனைகளிளில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *