முஃமினான பெண்களே, சற்று சிந்திப்போம்.

  • 10

அல்லாஹ்வின் பெயரால்…. காலத்தின் தேவை கருதி, சமூக சீர்திருத்தத்தை நோக்காகக் கொண்டு இவ்வாக்கம் எழுதப்படுகிறது. எம் இறுதித் தூதரின் வருகைக்கு முன் அறியாமையில் மூழ்கியிருந்த அக் காலத்தில் பெண்கள் கீழ்த்தரமாக நோக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டன. இஸ்லாத்தின் தோற்றத்திற்குப் பின் பெண்களுக்கு அவர்களது உரிமைகள் வழங்கப்பட்டு அவர்கள் கண்ணியமானவர்களாக நடத்தப்பட்டனர்.

பெண் என்பவள் ‘சிப்பிக்குள் இருக்கும் முத்து’ போன்றவள். அவள் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் இருக்கும் போது தான் கற்புள்ள பெண் என்ற அந்தஸ்தைப் பெறுகிறாள். இவ்வகையில் பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் தான் இறைவனின் திருமறையூடாகவும், எம் இறுதித் தூதர் தம் அருள் வாக்கின் ஊடாகவும் பெண்களின் கண்ணியத்தைப் பேணக்கூடிய ஆடை வரையறையைக் கற்றுத்தரப்பட்டிருக்கின்றது. இவ்விதம் கண்ணியம் பேணுவதற்காக வரையறை செய்யப்பட்ட ஆடை விடயத்தில் நம் சமூகத்தில் பெண்களின் அக்கறை தான் என்ன?

தம் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எம் வாழ்வு பற்றி சற்று சிந்திக்க வேண்டும். கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அழகை எல்லா ஆண்களுக்கும் காட்டி, விபச்சாரிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் எம்மை நாம் எப்போது மாற்றிக் கொள்வது? முஸ்லிம் என்ற பெயரில் பல ஆண்களைக் கெட்ட சிந்தனையின் பால் தூண்டக் கூடிய விபச்சாரிகளை நம் அன்றாட வாழ்வில் கண்கூடாகக் காண்கிறோம். இத்தகைய பெண்களுக்கு அவர்களது மானக்கேடான விடயத்தைச் சுட்டிக்காட்டினாலும் அவர்களை விமர்சித்து தனக்கென ஓர் மறுமை வாழ்வு உண்டென்பதை மறந்து வாழ்ந்து கொண்டிருப்பது கவலைக்கிடமான விடயமே. அதிலும் விசேடமாக ஆண், பெண் இருபாலரும் இணைந்து கற்கக் கூடிய பல்கலைக்கழகங்களில் சில பெண்கள், தம்மைக் கண்காணிப்பதற்கு எவரும் இல்லை என நினைத்துக் கொண்டு இஸ்லாம் அனுமதிக்காத, தாம் விரும்பிய விதத்தில் ஆடை அணிந்து நாள்தோரும் பல ஆண்களை வழிகெடுத்துக்கொண்டிருக்கின்றனர். தமது அனைத்து செயல்பாடுகளையும் இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்தவர்களாய், தம் மனோ இச்சையை நேசித்தவர்களாய் சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய ஆலிமாக்களும், பல்கலைக்கழக சகோதரிகளும் செயற்படுகின்றனர்.

இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியத்தின் உச்சகட்டமாகவே அவர்களின் உடலை மறைக்கும் ஆடை வரையறை காணப்படுகிறது. ஆனால் இன்று இதனைப் பெண்கள் ஒரு நாகரிகமாகப் பார்க்கிறார்களே தவிர, இதனை இஸ்லாமிய ஆடையாகப் பார்ப்பதில்லை. இஸ்லாமிய ஆடை எனும் பெயரில் ஹபாயாவை இறுக்கமாகவும், உடம்பின் மறைக்க வேண்டிய அனைத்துப் பகுதிகளையும் வெளிப்படுத்தக் கூடியதாகவும் அணிகின்றனர். உடலை மறைப்பதற்காக அணியப்பட வேண்டிய ஆடைகள், உடலை வெளிப்படுத்தக்கூடியதாக காணப்படுகின்றன. அதிலும் இறுக்கமான ஹபாயாவை அணிந்து தூக்குத் தண்டனைக் கைதிகளைப் போல் தலையை மாத்திரம் ஒரு துணித் துண்டால் சுற்றி, ஏனைய பகுதிகளை வெளிக்காட்டியவர்களாய் அலைந்து திரிகின்றனர்.

يٰۤـاَيُّهَا النَّبِىُّ قُلْ لِّاَزْوَاجِكَ وَبَنٰتِكَ وَنِسَآءِ الْمُؤْمِنِيْنَ يُدْنِيْنَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيْبِهِنَّ ذٰ لِكَ اَدْنٰٓى اَنْ يُّعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا‏

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல்குர்ஆன் : 33:59)

நபி ( ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாதிகள் ஆவர். அவர்களை நான் கண்டதில்லை. (அவர்களுள்) ஒரு சாரார் மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்திருப்பர். அவற்றைக் கொண்டு மக்களை அவர்கள் அடிப்பர். மறுசாரார் உடை அணிந்த நிலையில் நிர்வாணமாக இருக்கும் பெண்களாவர். அவர்கள் (தீய வழியில்) செல்வதுடன் (பிறரையும்) தீய வழியில் செலுத்துவர். அவர்களின் தலைகள் ஆடி அசையும் ஒட்டகங்களின் திமில்களைப் போன்று காணப்படும். இத்தகையவர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள். அதன் வாடையைக் கூட நுகரமாட்டார்கள்.’ (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்3971)

அதேவேளை, வெளியே செல்லும் போது நறுமணம் பேசுவது, காலணிகள் மூலம் ஒலியெழுப்பி ஆண்களின் கவனத்தை ஈர்ப்பதும் பெண்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது. இறுக்கமற்றதாகவும், கனமானதாகவும், முகம் மற்றும் கைகளின் மணிக்கட்டு தவிர ஏனைய அனைத்துப் பகுதிகளையும் மறைக்கக் கூடியதாகவும், மனமற்றதாகவும், ஆண்களது ஆடைகளுக்கு ஒப்பற்றதாகவும், எளிமையானதாகவும் பெண்களின் ஆடை காணப்பட வேண்டும்.

ஈமானினதும், தக்வாவினதும் வெளிப்பாடாகிய இஸ்லாமிய ஆடை வரையறைகளைப் பேணி ஈருலகிலும் கண்ணியமிக்க பெண்களாக மாறுவோம்.

Aaqila Binth Nawas
uthaymeeniya.
2nd year.
South Eastern University of Sri Lanka.
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அல்லாஹ்வின் பெயரால்…. காலத்தின் தேவை கருதி, சமூக சீர்திருத்தத்தை நோக்காகக் கொண்டு இவ்வாக்கம் எழுதப்படுகிறது. எம் இறுதித் தூதரின் வருகைக்கு முன் அறியாமையில் மூழ்கியிருந்த அக் காலத்தில் பெண்கள் கீழ்த்தரமாக நோக்கப்பட்டு அவர்களது உரிமைகள்…

அல்லாஹ்வின் பெயரால்…. காலத்தின் தேவை கருதி, சமூக சீர்திருத்தத்தை நோக்காகக் கொண்டு இவ்வாக்கம் எழுதப்படுகிறது. எம் இறுதித் தூதரின் வருகைக்கு முன் அறியாமையில் மூழ்கியிருந்த அக் காலத்தில் பெண்கள் கீழ்த்தரமாக நோக்கப்பட்டு அவர்களது உரிமைகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *