பல்கலைக்கழகங்களும் பகிடிவதையும்

  • 144

பகிடிவதை என்பது (Raging) பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் புதிதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற, மாணவர்களை நல்வழிப் படுத்தி அவர்களின் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளை செய்து கொடுத்து அவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கான சிறந்ததோர் நெறிப்படுத்தலேயே பகிடிவதை என்போம்.

இதுவே பகிடிவதை என்பதற்கான சரியான வரைவிலக்கணம் ஆகும். இதுவல்லாமல் இன்று நடைமுறையில் பகிடிவதை என்ற சொற்பிரயோகம் பல தவறான வழிமுறைகளில் பிரயோகிக்கப்படுகின்றது.

அதாவது புதிதாக பல்கலைக்கழகங்களுக்கோ கல்லூரிகளுக்கோ இணைத்துக் கொள்ளப்படுகின்றவர்களை உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் துன்புறுத்தி அவர்களின் உயர் கல்வி நிலையை பாழாக்கும் ஒரு செயல்முறையாகவே இந்த பகிடிவதை எனும் சொல் நடைமுறையில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் அவதானிக்கலாம்.

பகிடிவதை என்னும் சொல்லைச் சொல்லி இஸ்லாமிய அடிப்படையில் உதாரணங்களுடன் அலசிப்பார்த்தால் ஆரம்ப காலகட்டத்தில் இந்த பகிடிவதை என்ற சொல் சிறந்த ஒரு சொல்லாக விளங்கினாலும் பிற்காலத்தில் இந்த சொல், அதன் செய்முறையை வடிவங்கள் அது ஆரம்பிக்கப்பட்ட உண்மை தன்மையை விட்டும் விலகி ஓர் கெடுதியான சூழ்நிலையை உருவாகியுள்ளது. இதன் விபரீதங்களை நாம் அறிகின்ற பொழுது இஸ்லாமிய விழுமியங்களுக்கு மாற்றமாகவே காணப்படுகின்றன.

ஒரு முஸ்லிமின் கண்ணியம் உயிர் உடமைகள் புனிதமானவை. ஒரு முஸ்லிமுடைய கண்ணியம் அவனுடய இரத்தம் அவனுடைய சொத்து-செல்வங்கள் மற்ற முஸ்லிம்களுக்கு ஹராமாகும். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 1652)

இஸ்லாம் ஒரு மனிதனுடைய சொத்து, இரத்தம், மானம் இவ்வாறு மற்றவர்களுக்கு ஹராம் என்று உயர்நிலை படுத்தி பேசுகின்றது. ஆனால் இந்த வழிகாட்டலுக்கு புறம்பான செய்முறையை இலகுவாக மேற்கொள்ளும் ஒரு நடைமுறையாகவே இன்று இந்த பகிடிவதை என்ற சொல் நடைமுறையில் காணப்படுகின்றது. எனவே இஸ்லாமிய கோட்பாட்டில் இல்லாத ஒரு விடயத்தை செய்வதிலிருந்து நாம் விலகிக் கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

பகிடிவதை இலங்கைக்கு வந்த வரலாறு

இலங்கையின் ஆரம்ப கல்வி முறைகளிலும் கல்வி நிலையங்களிலும் இந்த பகிடிவதை காணப்பட வில்லை அதற்கான எந்தப் பதிவுகளும் காணப்படவில்லை. இலங்கையின் பகிடிவதையானது “பிரிதானியா ” ஆதிக்கத்தின் போது தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னரான காலப் பகுதியிலேயே அதிகமாக இச்சொல் பிரபலப்படுத்தப்பட்டது. இதுவே பகிடிவதை இலங்கைக்கு வந்த விதமாகும்.

பகிடிவதை பொதுவாக மூன்று வகைப்படுகின்றது.

  1. பேச்சு ரீதியான உளத் துன்புறுத்தல்.
  2. உடல் ரீதியான துன்புறுத்தல்.
  3. பாலியல் ரீதியான துன்புறுத்தல்.

இந்த மூன்று முறைகளும் மிகவும் ஆபத்தானவையாகவே காணப்படுகின்றன. இதன் விபரீதமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதையும் பல ஆய்வுகள் எமக்கு சுட்டிக்காட்டுகின்றது. அதேபோல் பல மாணவர்கள் தற்கொலையின் விளிம்பிற்கு சென்று திரும்பி வந்த வரலாற்றையும் நாம் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. அதேபோல் தமது உயர்கல்வியைத் தொடராத ஆயிரக்கணக்கான மாணவர்களும் இச்சமூகத்தில் உள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் பகடிவதையின் தற்போதைய நிலை

இலங்கையில் பகடிவதைக்கு எதிரான சட்டங்கள் இருந்தாலும், தற்போதும் பல பல்கலைக்கழகங்களில் பகிடிவதை இடம்பெற்று வருகின்றது. பொதுவாக, புதுமுக மாணவர்கள், “பகிடிவதைக் காலம்” என அழைக்கப்படும் காலப்பகுதியில் மேனிலை மாணவர்களால் பகிடிவதைக்குள்ளாக்கப்படுகின்றனர். இது பொதுவாக ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.

அறிமுகம் தொடர்பாக பகிடிவதையின் போது, மேனிலை மாணவர்களுக்கும் புதுமுக மாணவர்களுக்குமிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக, அறிமுக நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு.

உடைக் குறி முறையைப் பகிடிவதை தொடர்பாக பகிடிவதைக் காலத்தின்போது, புதுமுக மாணவர்கள் குறித்த உடைக் குறிமுறையைப் பின்பற்றும்படி மேனிலை மாணவர்களால் வற்புறுத்தப்படுவதுண்டு. கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மேனிலை மாணவர்கள் விதித்த உடைக் குறிமுறைப்படி, பாவாடை (Skirt) அணிய மறுத்த மாணவிகள் சிலர், மேனிலை மாணவர்களால் அறையப்பட்ட நிகழ்வை உடைக் குறிமுறைப் பகடிவதைக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பாலியல் வசைச் சொற்களால் திட்டுதல், அவற்றைக் கூறும்படி வற்புறுத்துதல், ஆடைகளைக் களையும்படி வற்புறுத்துதல் போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் பகிடிவதையில் மேற்கொள்ளப்படுகின்றன.

உடலியல் துன்புறுத்தல் தொடர்பாக அதிகப்படியான உடற்பயிற்சிகளைச் செய்ய வற்புறுத்துதல், தோப்புக்கரணம் போடச் செய்தல், மின்னேற்றுதல், தாக்குதல் போன்ற உடலியல் துன்புறுத்தல்கள் பகிடிவதையில் மேற்கொள்ளப்படுகின்றன.

பகிடிவதைக்கு எதிரான சட்டம்

இலங்கையில், 1998ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, கல்வி நிறுவனங்களில் பகிடிவதை மற்றும் ஏனைய வடிவங்களிலான வன்முறைகளைத் தடைசெய்யும் சட்டத்தின்படி, பகிடிவதை ஒரு குற்றச்செயல் ஆகும்.

பகிடிவதை எதிர்ப்பு குழு

இலங்கையிலுள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை எதிர்ப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 919ஆம் இலக்கச் சுற்றறிக்கைப்படி, உயர்கல்வி நிறுவனங்களிற்கு அனுமதி பெறும் மாணவர் ஒவ்வொருவரும் பகிடிவதையைத் தொடங்கவோ, தூண்டவோ, செய்யவோ மாட்டேன் எனவும், பகிடிவதைக்கு உதவமாட்டேன் எனவும், கட்டாயம் கையொப்பமிடவேண்டும்.

எனவே இஸ்லாமிய சட்ட யாப்பின்படியும், இலங்கை சட்ட யாப்பின்படியும் ஓர் மனிதனின் உயிர், சொத்து, மானம் என்பவற்றில் இன்னொரு மனிதன் கை வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான சட்டங்களை கருத்திற்கொண்டும் எமது பல்கலைக்கழக வாழ்க்கையையும், கல்லூரி வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முயற்சி செய்வதோடு, பல்கலைக்கழகங்களையும் கல்லூரிகளையும் சிறந்த முறையில் பயன்படுத்தி நாளை தலைமுறையின் சிறந்த வெற்றியாளராக மாற்றுவதற்கு முன்வர வேண்டும்.

NAFEES NALEER
(SEUSL)
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

பகிடிவதை என்பது (Raging) பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் புதிதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற, மாணவர்களை நல்வழிப் படுத்தி அவர்களின் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளை செய்து கொடுத்து அவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கான சிறந்ததோர் நெறிப்படுத்தலேயே பகிடிவதை என்போம்.…

பகிடிவதை என்பது (Raging) பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் புதிதாக ஏற்றுக் கொள்ளப்படுகின்ற, மாணவர்களை நல்வழிப் படுத்தி அவர்களின் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகளை செய்து கொடுத்து அவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கான சிறந்ததோர் நெறிப்படுத்தலேயே பகிடிவதை என்போம்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *