பல்கலைக்கழக பகிடிவதைக்கு மாற்றுத் தீர்வுகள்

  • 94

எத்தனை எத்தனை கனவுகளோடு- பாடசாலையில் போரிட்டு போட்டி போட்டு அன்புப் பெற்றோர்களின் தியாக உழைப்போடு பெற்றெடுக்கிறோம். பல்கலைக்கழக நுழைவு சீட்டை

கவலை என்ன தெரியுமா..?? களைத் தெறிய்யப்பட்ட கனவுகளுடன் – மார்க்கம் போற்றும் மானத்துடன் விளையாடுகிறது RAGGING என்ற பெயரில் சிலர்கள்.

இலங்கையில் காணப்படும் 15 பல்கலைக்கழகங்களிலும் முஸ்லிம்களுக்கு என்று ஒரு தனியான இடம் உண்டு அதிலும் தென்கிழக்கு என்றால் சொல்ல தேவையில்லை. பொதுவாக எமது முஸ்லிம் சகோதர சகோதரிகள் எப்பல்கலைக்கழகத்தில் கற்றாலும் இஸ்லாம் கூறும் உயரிய பண்பாடுகளோடு பயணிப்பது கடமையும் காத்திரமுமாகும்.

அண்மைக்காலமாக சூடுபிடித்த பேசுபொருள் தான் பல்கலைக்கழக பகிடிவதை என்பது நாம் அறிந்த விடயமே! பல்கலைக்கழக சமூகத்தில் கல்வியின் ஓர் உயர் பீட இடமாகக் கருதப் படுகிறது (Ragging) என்ற போர்வையில் சிலர்களில் அநாகரீகச் செயல் சமூகத்திற்கு சேறுபூசி இஸ்லாத்தின் கண்ணியத்திற்கு கலங்கத்தை ஏற்படுத்துகிறது.

RAGGING செய்யும் முதுகெலும்பில்லாதவர்களின் பதில் என்ன தெரியுமா? University mean (all kind of think are university for all ) எல்லோருக்கும் எல்லா சட்டமும் பொதுவானது எனவே RAGGING இருக்கத்தான் செய்யும் அடுத்த வருடம் நீங்களும் செய்ய வேண்டும்.

இவர்களிடம் நாங்கள் கேட்கும் முதல் கேள்வி பகிடிவதை செய்வது சட்டமா? இதை எந்த அரசு சட்டமாக அனுமதி கொடுத்தது அல்லது மாணவர்கள் அதை தமக்கு சட்டமாக எடுத்துக் கொண்டார்களா..??

பல்கலைக்கழக அனுமதி பத்திரத்தில் நான் பகிடிவதையில் ஈடுபடமாட்டேன்; அதற்கு காரணமாகவும் இருக்க மாட்டேன்; என சுய நினைவோடு உறுதிமொழி விட்டுத்தானே உள்ளே நுழைகிறோம். இப்படி இருக்க சத்தியத்தை முறித்து அமானித மோசடி செய்து அதனை சட்டமாக எப்படி கையில் எடுக்க முடியும்?

இதை எல்லாம் தாண்டி இந்த முதுகெலும்பற்றவர்களை அல்குர்ஆனின் 49 வது அத்தியாயம் 11வது வசனம் உரசிப்பார்க்கிறது.

“விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை பரிகசிக்க வேண்டாம். (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம்”.

இஸ்லாத்தோடு அலசிப் பார்க்கும்போது இந்த பகிடிவதை ஹராமாக்கப்பட்ட பாவமாகும். என் தலைவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மரணத்திற்கு முன்னரான அவரது ஹஜ் பேருரையில் பின்வருமாறு வலியுறுத்தி கூறி எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

“இந்த மாதம், இந்த நகரம், இந்த நாள் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் மானம், உயிர் ,உடமைகள் இன்னெரு முஸ்லிம்களுக்கு ஹராமாகும்.” (அறிவிப்பாளர் -இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் புகாரி 1652)

மனிதனின் மானம், கண்ணியம் மக்கா நகரின் புனித்துடன் இணைத்துப் பேசப்படுவது என்பது அது எவ்வளவு பெறுமானம் மிக்கது என்பதையே காட்டுகிறது.

மாற்றீடுகளால் வெற்றி நிச்சயம் பகிடிவதை என்ற தொற்று நோய்க்கு தண்டனைகள் மருந்தாக்கப்பட வேண்டும். இதற்கு மாற்றீடாக எத்தனையோ ஆரோக்கியமான நடைமுறைகளை அறிமுகப்படுத்த முடியும்.

    1. Timely prayer :- எம்மீது கடமையாக்கப்பட்ட தொழுகையை தொழ திராணியற்றவர்களாக எத்தனையோ நபர்கள் வலம் வருவதைக் காண்கின்றோம். பள்ளிவாசல்கள் வெறுமையால் நிரப்பப்படுகின்றது. எனவே உரிய நேரத்தில் பள்ளியில் இருக்க வேண்டும் எனும் திட்டத்தை அமல்படுத்தலாம்.
    2. Social work:- (Leader ship programme) தலைமைத்துவ வழிகாட்டல், (Blood donation) இரத்த தான முகாம், (Identification of the trustee) வறிய மாணவர்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவுதல்.
    3. Compilation of the document:- ஆவணத்தொகுப்பு முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் மார்க்கத் தீர்ப்புகள் போன்றவற்றை சிறிய தலைப்புகளின் ஊடாக ஆவண ரீதியாக சமர்ப்பிக்க உதவுதல் வழிகாட்டல்.
    4. எவ்வளவு விடயங்களையும் மனனமாக வைக்கிறோம் அதேவேளை சில முக்கியமான துஆக்கள் மனனம் இட வைக்கலாம்.

    இதைப் போன்ற பல செயற்பாடுகளை புதிய அதாவது முதலாம் வருட மாணவர்களுக்கும் முந்திய மாணவர்கள் (Senior Batch) மேற்கொண்டால் மிகப்பெரும் அடைவுகளை மற்றும் அபிவிருத்திகளை எமது சமூகம் கண்டு கொள்ள ஏதுவாக அமையும். அத்தோடு ஒரு சாரார் மேற்கொள்ளும் இழி செயல் நையாண்டி பழிவாங்கும் மனோநிலை ஒளிந்து மறைந்து போகும் சூழல் உருவாகும்.

    “ஒரு முஸ்லிம் தனது நாவாலும் கரத்தாலும் அடுத்தவர் பாதுகாப்பு பெறும் வரை முஸ்லிம் ஆகிவிட முடியாது”

    முபாரிஸ் முஆத்
    முதலாம் வருடம்
    SEUSL

எத்தனை எத்தனை கனவுகளோடு- பாடசாலையில் போரிட்டு போட்டி போட்டு அன்புப் பெற்றோர்களின் தியாக உழைப்போடு பெற்றெடுக்கிறோம். பல்கலைக்கழக நுழைவு சீட்டை கவலை என்ன தெரியுமா..?? களைத் தெறிய்யப்பட்ட கனவுகளுடன் – மார்க்கம் போற்றும் மானத்துடன்…

எத்தனை எத்தனை கனவுகளோடு- பாடசாலையில் போரிட்டு போட்டி போட்டு அன்புப் பெற்றோர்களின் தியாக உழைப்போடு பெற்றெடுக்கிறோம். பல்கலைக்கழக நுழைவு சீட்டை கவலை என்ன தெரியுமா..?? களைத் தெறிய்யப்பட்ட கனவுகளுடன் – மார்க்கம் போற்றும் மானத்துடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *