விடியலை நோக்கி

  • 6

வழமை போல் கடிகார முள் நேரம் நான்கை காட்டியது. அம்னா சுறுசுறுப்பாக எழுந்து தனது அன்றாட வேலைகளை முடித்தவளாய்¸ தந்தை வந்து அழைக்கும் வரை தனது பாடங்களை மீட்டினாள். தந்தை கதவு தட்டும் சத்தத்துக்கு விறைந்தவளாய் “வாப்பா¸ எத்தனை மணிக்கு ஹாஸ்பிடல் போற?” என்று அமைதியாக கேட்டாள். “இன்னும் கொஞ்சத்துல போவோம் மகள்¸ ரெடி ஆகுங்க நான் தேநீர் கொஞ்சம் ஊத்திக்கொண்டு வாறன் “என்று கூறிவிட்டு சமயலறைக்குள் நுழைந்தார் தந்தை. சிறிது நேரத்தில் தந்தை அழைக்கவே¸ அம்னாவும் மிக வேகமாக அணிந்துக்கொண்டு தந்தையின் கையை பிடித்தவளாய் இறைவனிடம் துஆகேட்டுக்கொன்டே வைத்தியசாலையை நோக்கி விரைந்தாள்.

வார்டினுள் நுழைந்த சாலிம் வைத்தியரிடம் விரைகிறார். சாலிமை கண்ட வைத்தியர் “அஸ்ஸலாமு அலைக்கும்¸ இப்பயா வந்தீங்க ஹாஜி?” என்று கேட்டவாறு அவரது அறையில் நுழைகிறார். சாலிமும் பின்தொடர¸ “இரிங்க சாலிம் ஹாஜி¸ நாங்க அல்லாஹ்வ நம்பினவங்க¸ எல்லாம் அல்லாஹ் நலவுக்கு தான் நாடுவான். எங்களால முடியுமானளவு முயற்சி செய்தும் பயனளிக்காம போனது கவலை தான். அல்லாஹ் ஒங்களுக்கு நல்லதையே நாடுவான்” என்று கூறிவிட்டு மெல்ல நகர்ந்தார்.

“அம்னா¸ உம்மாக்கு துஆ செய்ங்க¸ நல்ல படிங்க¸ ஒழுக்கமா உம்மா சொல்லி தந்த மாதிரி பணிவா இருக்க வேணும்¸ வாப்பாக்கு ஒருநாளும் ஒண்டும் சொல்ல வானம்¸ நான் என்ன சரி செஞ்சிருந்தா ரெண்டு பேரும் மன்னிச்சிக்கோங்க” என்று மெதுவாக கூறியவள் மீண்டும் மௌனிக்கிறாள்.

காலம் கடக்கிறது. அம்னாவுக்கு உலகமே என்னவென்று தெரியவில்லை. புலமை பரிசில் பரீட்சையில் மாகாணத்தில் முதலாவது இடத்தில் சித்தியடைகிறாள். ஆனால்¸ அவளால் அதை நினைத்து சந்தோஷமடைய முடியவில்லை. தந்தையின் இரண்டாவது மனைவி சாரா அவளை முத்தமிட்டு அணைக்கிறாள். ஆனால்¸ தனது தாய் இருந்தால் எப்படி இருக்கும்¸ என்று ஏங்குகிறாள். நாட்கள் உருண்டோட அம்னா படிப்பை தொடர்வதற்காக ஒரு ஹாஸ்டலில் சேர்கிறாள். சாராவும் அவளை உம்மாவைப் போல் அரவணைக்க தவறி விட்டால். சாலிம் ஹாஜிக்கும் ஒன்றும் புரியவில்லை.

அம்னா சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறையில் சித்தி அடைகிறாள். தனது நண்பிகளுடன் தன் சந்தோசத்தை பகிர்ந்துக்கொள்கிறாள். உயர்தர விஞ்ஞான பிரிவில் சித்தியடைந்து பல்கலைகழகத்துக்கு தெரிவாகிறாள். சாலிம் மகளை பாராட்டுகிறார்.” மகள் ஒங்களுக்கு என்ன வேணுமெண்டாலும் அல்லாஹ்வுக்கு பிறகு நான் இருக்கிறன்¸ நீங்க நல்ல படிக்கணும்” என்று ஊக்கமளிக்கிறார்.

நாட்கள் நகர¸ நண்பிகளுடன் பல்கலைக்கழகம் நுழைகிறாள். அவளது நண்பிகளுடன் தனது தந்தையின் வேனில் வந்திறங்கினாள். தந்தை நிறைய புத்திமதி கூறுகிறார்.” வாப்பா¸ நான் சிறந்த புற்று நோய் வைத்தியராகி¸ எனது தாயின் முடிவு யாருக்கும் வராமல் இருக்க சேவை செய்வேன்” என்று தன் தாயை நினைத்து அழுத்தவளாய் வாக்களித்தாள்.

பல்கலைக்கழகத்தில் நடந்த முதல் நாள் கொடுமைகளை அவளால் ஒரு ஒழுக்கமான பெண் என்ற ரீதியில் பொறுக்கவே முடியவில்லை. அதற்காக தப்பான முடிவுகளை எடுக்கவுமில்லை. நண்பிகளுக்கு ஆறுதல் கூறியவள் சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தாள்.

ஒரு வருடத்தின் பின்¸ புதிய மாணவர்கள் வரும் நாளும் நெருங்கியது. அம்னா முஸ்லிம் மஜ்லிஸ் அங்கத்தவர் என்ற வகையில் தனது முதல் நாட்களின் அனுபவங்களை இனி எவரும் அனுபவிக்கக் கூடாது¸ அவ்வாறு நடைபெறாமல்¸ அவற்றை தடுத்து¸ அதற்கான சில மாற்று வழிகளை கையாலுவது சிறந்த வழியாகும் என்ற கருத்தை முன்வைக்கிறாள்.

முஸ்லிம் மஜ்லிஸ் அங்கத்தவர்கள் அனைவரும் தமது அறிவுப்பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பகிடிவதைகளுக்காக சில தண்டனைகளை நடை முறைப் படுத்துவதும் ஒரு சிறந்த தீர்வாகும். “இவ்விடயங்களில் ஈடுபடும் மாணவர்களின் இறுதியாண்டு பரீட்சையில் குறிப்பிட்ட அளவு புள்ளிகள் குறைக்கப்படும்” என்று அறிவிக்க வேண்டும். தனது புள்ளிகளுக்கு மத்தியில் இக்காரியங்கள் அற்பமாகிவிடும்.

மாணவர்களை கண்காணிப்பதற்காக ஒரு ஒழுக்க குழுவை உருவாக்கி¸ அதனூடாக மாணவர்களை கண்காணிப்பது¸ ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது செயட்பாட்டில் கட்டுப்பாட்டை கையாள்வதற்கு வழி காட்டுவது போன்ற சில நடவடிக்கைகள் இவ்வாறான வீண் களியாட்டங்களுக்கும்¸ பல மாணவர்களது எதிர்காலம் பாதிக்கப்படும் கொடூரத்துக்கும் முடிவு காணலாம்.

அதேபோல்¸ “புதிய மாணவர்கள் பாதுகாப்பு பிரிவு” என்று ஒரு குழுவை உருவாக்கி¸ அவர்களை தொடர்புக்கொள்வதற்கு இலகுவாக சில துண்டுப்பிரசுரங்களை பழைய¸ புதிய மாணவர்களுக்கு பகிர்வதினூடாக பழைய மாணவர்களும் ஓரளவு கட்டுப்பாடாக இருப்பார்கள். புதிய மாணவர்களும் தங்களுக்கு பாதுகாப்பை பெற்றுக்கொள்ள சிலர் இருப்பதை இட்டு உறுதியாக இருப்பார்கள்.

“பல்கலைக் கழகம் என்பது இளைஞர்கள்¸ யுவதிகள் சேரும் இடம்’ என்பதை விட¸ “எதிர்கால ஆசான்கள்¸ வைத்தியர்கள் போன்ற அந்தஸ்துள்ள சமூக சேவையாளர்கள் ஒன்று கூடும் இடம்” என்பதை உணர்த்துவது பெற்றோர்¸ நண்பர்கள்¸ விரிவுரையாளர்கள் ஒவ்வொருவரதும் பொறுப்பு.

ஒவ்வொரு மனிதனும் தனது உள்ளத்தில் உறுதி கொண்டு¸ தனக்கென்று சில வரையறைகளை வகுத்துக்கொள்வதோடு¸ பெற்றோரும் தனது பிள்ளைக்கு சில ஒழுக்க விடயங்களை கட்டாயமாக சொல்லி கொடுக்க வேண்டும். அதேபோல்¸ ஒவ்வொரு மாணவனும்¸ மாணவியும் தனது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறாமல் இருக்க தனது மனோ இச்சைக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

அதாவது¸ முதலில் நாம் ஒவ்வொருவரும் நமது பொறுப்பை உணர வேண்டும். அதே போல் ஒவ்வொருவரும் தனது நோக்கத்துக்கு தடையாக உள்ள எந்த விடயமாகினும் முழுமையாக தவிர்த்துக்கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல¸ ஒவ்வொரு மாணவியும்¸ மாணவனும் பலதரப்பட்ட துன்பகளை தாண்டியே இந்த இடத்துக்கு வருகிறார். எனவே¸ நாம் மற்றோரை நமது இடத்தில் வைத்து பார்க்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் இறைவனுக்கு மாறு செய்யாமல் இருக்க வேண்டும். சக நண்பர்களை சகோதரர்களாகவே பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல¸ புதிய மாணவர்கள் வரவேற்பதற்காக புதிய¸ ஒழுக்கமான முறைகளை கையாள வேண்டும்.

அதேபோல்¸ பல்கலைக்கழக சிரமதான வேலை திட்டமொன்றை நடத்தி¸ சிறந்த பிரிவுக்கு பரிசில்களை வழங்கலாம். இவ்வாறு மாணவர்களின் கவனத்தை பயனளிக்கும் சில காரியங்களில் திருப்பினால் அனைவருக்குமே நன்மை இருக்கும்.

அதே போல் பல்கலைக்கழக நூலகம் தொடர்பாக பூரண தகவல்களை திரட்ட ஒரு குழுவை நியமித்தல்¸ அதே போல பல்கலைக்கழக வரலாற்றை தொகுக்குமாறு இன்மொரு குழுவிற்கு வழங்கல்¸ அத்தோடு இப்பல்கழைக் கழகத்தில் காணப்படும் பீடங்கள் தொடர்பான தரவுகளை திரட்ட இன்மொரு குழுவை நியமித்தல் போன்ற பல புத்தாக்கத்துடனான பாதிப்பில்லாத பகிடிவதைக்கான சில விடயங்களை முன்வைத்து பின் இவற்றை தொகுத்த பின் புதிய மாணவர்களுக்கான புதுமுக அயிமுக நிகழ்வில் இவற்றை அக்குழுக்கள் நாடகம்¸ கவிதை¸ பாடல்¸ வில்லுப்பாட்டு வடிவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கருத்தையும் உறுப்பினர்களிடம் முன் வைத்தாள்.

அதே போல் அந்நிகழ்வுகள் யாவும் அனைத்து புதுமுகங்களினது சந்தோசத்தோடனும்¸ முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்களதும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களது கரகோசத்துடனும் விரிவுரையாளர்களின் வாழ்த்துக்களுடன் பொது மைதானத்தில் இனிதே சிறப்பாய் நிகழ்ந்து முடிந்து.

“யார் என்ன செய்தாலும் நலவில் மட்டுமே சேருவேன்” என்ற உறுதியான அடிப்படையை மனதில் ஆணித்தரமாக பதிய வைத்து கொள்ள வேண்டும்.

இறுதியில் அனைவரும் அம்னாவை வாழ்த்தி¸ நன்றி செலுத்தினார்கள். அதற்கு அம்னா”அல்லாஹ்வுக்கே புகழ் அணைத்தும்¸ இந்த முடிவுகளை ஏகோபித்து¸ அவற்றை அமல்படுத்தினால்¸ கல்விப் பாசறைகளில் நடக்கும் இவ்வாறான ஒழுக்கமில்லா கீழ்த்தரமான காரியங்களை நிச்சயமாக தடுக்க முடியும் “ என்று கூறி அணைவருக்கும் நன்றி தெரிவித்தாள்.

மஃரிபு அதான் சத்தம் கேட்கவே அனைவரும் பள்ளியை நோக்கி விரைகிறார்கள். அம்னா “யா அல்லாஹ் இந்த உன்னதமான நேரத்தில்¸ எங்கள் நோக்கங்களுக்கு சிறந்த வெற்றியை தந்து¸ உதவி செய்வாயாக” என்று பிராத்தித்தவளாக மஸ்ஜித்துக்குள் நுழைகிறாள்.

A.C.F Sajidha
3rd Year
(SEUSL)
சாளரம் சுவர்ச் சஞ்சிகை

வழமை போல் கடிகார முள் நேரம் நான்கை காட்டியது. அம்னா சுறுசுறுப்பாக எழுந்து தனது அன்றாட வேலைகளை முடித்தவளாய்¸ தந்தை வந்து அழைக்கும் வரை தனது பாடங்களை மீட்டினாள். தந்தை கதவு தட்டும் சத்தத்துக்கு…

வழமை போல் கடிகார முள் நேரம் நான்கை காட்டியது. அம்னா சுறுசுறுப்பாக எழுந்து தனது அன்றாட வேலைகளை முடித்தவளாய்¸ தந்தை வந்து அழைக்கும் வரை தனது பாடங்களை மீட்டினாள். தந்தை கதவு தட்டும் சத்தத்துக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *