சாளரம் சுவர் சஞ்சிகை ஆசிரியரிடமிருந்து…

  • 30

இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றத்தின் வெளியீட்டு குழுவானது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சாளர சுவர் சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றது.

2017/2018 ஆம் கல்வி ஆண்டிற்குரிய இம்முதலாவது சுவர்ச்சஞ்சிகை முதல் இனிவரும் காலங்களில் வெளியிடப்படும் சஞ்சிகைகள் ஊடாக உங்களோடு தொடர்ந்து பயணிக்க காத்திருக்கின்றோம். அந்த வகையில்¸ சாளரம் சுவர்ச்சஞ்சிகையில் வெளியீட்டுக் குழு சார்பாக ஆசிரியர் உரை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இச்சஞ்சிகையானது மாணவர்களின் எழுத்தாற்றலை மேம்படுத்தும் முகமாகவும் அவர்களின் திறமைக்கும் ஆற்றலுக்கும் களம் அமைத்துக் கொடுக்கும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரு தலைப்பின் கீழ் ஆக்கங்கள் கோரப்பட்டு பிரசுரிக்கப்படுகின்ற இச்சஞ்சிகையில் திறமையான ஆக்கங்கள் தெரிவு செய்யப்பட்டு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏராளமான சஞ்சிகைகள் பல மொழிகளிலும் வாராந்தம்¸ மாதாந்தம் என வெளியிடப்படுகின்ற போதிலும் அதனை நுகரும் வீதமும்¸ வாசிக்கும் வீதமும் வாசகர்கள் மத்தியில் மிக குறைவாக இருப்பது அறியாமையின் நுழைவாயில் என்ற உண்மையை கவலையுடன் கூறிக்கொள்கிறேன். இந்நிலை இன்று முதல் மாற வேண்டும் என்ற நோக்குடன் வெளியீட்டு குழுவின் ஊடாக சாளர சுவர் சஞ்சிகை வெளியிடப்படுகின்றது.

அந்த வகையில் ‘பகிடிவதைக்கு மாற்றீடான வழிகாட்டல்’ என்ற தலைப்பை சுமந்து இவ்வார சஞ்சிகை வலம் வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களாகிய எம்மத்தியில் புதிய மாணவர்கள் பல்கலைக்கழகத்தினுள் உள்வாங்கப்பட்டதும் பகிடிவதை என்ற சொல் மற்றும் அது சார்ந்த செயல் அனைத்தும் பரவலாகக் காணப்படுகின்ற ஒரு விடயமாகும்.

எனவே பகிடிவதை என்றால் என்ன? அது சரியா? தவறா? அது மாணவர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன? இது தொடர்பான ஓர் பார்வை மற்றும் அதற்கு மாற்றீடான வழிகாட்டல்கள் போன்ற கருப்பொருள்களை தாங்கியதாக இவ்வார சஞ்சிகை அமைந்துள்ளது.

பகிடிவதை தொடர்பாக அல்குர்ஆன் மற்றும் அல்ஹதீஸ் சார்ந்த ஓர் எடுத்துக்காட்டை மாத்திரம் உங்கள் சிந்தனைக்கு எத்திவைக்க நாடுகின்றேன்.

”விசுவாசிகளே! ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை பரிகசிக்க வேண்டாம். (பரிகாசம் செய்யப்பட்ட) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கலாம் …” (49:11)

மேலும் நபி(ஸல்) அவர்கள் தனது ஹஜ்ஜத்துல்விதா பேருரையின் போது பின்வருமாறு கூறினார்கள

“இம்மாதம்¸ இந்நகரம்¸ இந்நாள் எப்படி புனிதமானதோ அவ்வாறே ஒரு முஸ்லிமின் மானம்¸ உயிர் ¸உடமைகள் இன்னொரு முஸ்லிமுக்கு ஹராமாகும். (அறிவிப்பாளர் – இப்னு அப்பாஸ் ரலியல்லாஹ் அன்ஹு புகாரி 1652)

மனிதனின் மானம்¸ கண்ணியம் மக்கா நகரின் புனிதத்துடன் இணைத்துப் பேசப்படுவது என்பது அது எவ்வளவு பெறுமதி மிக்கது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

மாணவர் ஆய்வு மன்றத்தின் வெளியீட்டு குழுவினால் வெளியிடப்படும் சஞ்சிகையின் ஊடாக மாணவர்களாகிய நீங்கள் பூரண பயனைப் பெற்றுக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். உங்களிடமிருந்து சிறந்த ஆக்கங்களை வேண்டி நிற்பதுடன்¸ நாம் இச்சுவர் சஞ்சிகையின் பால் எமது கவனத்தையும்¸ சிந்தனையயும் செலுத்தினால் ஆய்வுப் பாதையூடாக கல்விப் பயணத்தை தொடரலாம்.

எம்.எஸ்.எப்.பஸ்னா
மூன்றாம் வருடம்
இஸ்லாமியக்கற்கை
SEUSL

இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றத்தின் வெளியீட்டு குழுவானது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சாளர சுவர் சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றது. 2017/2018 ஆம் கல்வி ஆண்டிற்குரிய இம்முதலாவது சுவர்ச்சஞ்சிகை…

இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றத்தின் வெளியீட்டு குழுவானது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சாளர சுவர் சஞ்சிகையை வெளியிட்டு வருகின்றது. 2017/2018 ஆம் கல்வி ஆண்டிற்குரிய இம்முதலாவது சுவர்ச்சஞ்சிகை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *