பகிடிவதைக்கு மாற்றீடான வழிகாட்டல்

  • 11

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகள்¸ கல்லூரிகள்¸ பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றில் மாணவர்களின் வருகையும்¸ பங்குபற்றுதலும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கான வழிகாட்டல்களும் பின்னூட்டல்களும் உந்து சக்திகளும் சிறப்பாக அமையப் பெறுவது இன்றியமையாததாகும். அதற்கான முயற்சிகள் அனைத்தும் சிரேஷ்ட மாணவர்களினால் வழங்கப்டுவது கட்டாயமாகும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் இவை எல்லாவற்றையும் தாண்டி சிரேஷ்ட மாணவர்களினால் கனிஷ்ட மாணவர்களுக்கு பகிடிவதை மாத்திரமே பங்கிடப்படுகிறது. இது தவறான புரிந்துணர்வாகவும் பண்பாடற்ற செயலாகவும் இருக்கிறது. இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். ஏனெனில் அது தவறான வழிகாட்டலாக இருக்கிறது.

பகிடிவதை என்பது மாணவர்களை வதைக்கின்ற ஓர் கொடிய செயலாகவே இருக்கின்றது. நிச்சயமாக இதன் மூலம் ஒரு மாணவனை நல்வழிக்கு கொண்டுவரவே முடியாது. மாறாக அது அவர்களே தங்களை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கோ அல்லது வேறு தவறான முடிவுகளை மேற்கொள்வதற்கோ தூண்டுதலாகவே இருக்கும். இது நிச்சயமாக நல்ல சமுதாயத்தை கட்டியெழுப்ப மாட்டாது. ஏனெனில் இதனுடைய விபரீதம் நாடளாவிய ரீதியில் பரந்து செல்லக்கூடிய வல்லமையை பெற்றிருக்கிறது. இதற்கு உதாரணமாக அண்மைக் காலங்களில் பல பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதையால் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும் இன முரண்பாடுகளையும் குறிப்பிடலாம். எனவே இந்நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கான மாற்றீடான வழிமுறைகளை நிச்சயமாக நம்மால் கொண்டுவரமுடியும் அவ்வாறான முயற்சிகளை நாம் எடுக்கின்ற போது முரண்பாடுகள் உயிரிழப்புகள் இல்லாத ஒரு வெற்றிகரமான சமுதாயத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியும்.

முதலாவதாக மாணவர்கள் மத்தியில் பகிடிவதை தொடர்பான விழிப்பூட்டும் பிரச்சாரங்கள்¸ கருத்தரங்குகள் என்பவற்றை ஏற்படுத்த வேண்டும் இதன்போது ‘பகிடிவதை’ என்றால் என்ன? அவற்றால் ஏற்படக்கூடிய விபரீதங்கள் எவை? என்பவை தொடர்பாக அவர்கள் ஆழ்மனதில் சென்றடையக் கூடிய தகவல்களை முத்திரையிட வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் பகிடிவதை என்பது தவறான ஒரு செயற்பாடு என்பதையும் அதன் விபரீதத்தின் ஆழத்தையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

அடுத்து பகிடிவதை சம்மந்தமாக பல தண்டனைகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களிலும் புதிதாக கொண்டுவரவேண்டும். தற்போது பகிடிவதைகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக எவ்விதமான தீவிர நடவடிக்கைளும் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனாலேயே அவர்கள் எவ்வித அச்சமுமின்றி அதனை மேற்கொள்ள எத்தனிக்கின்றனர். மெய்யாகவே கடுமையான தண்டனைகளை ஆரம்பத்திலிருந்தே ஏற்படுத்தி இருந்தால் இன்று இத்தகைய உயிரிழப்புகள் இடம் பெற்றிருக்க வாய்ப்பேயில்லை. தற்போது பகிடிவதை என்ற வார்த்தையே காணாமல் போயிருக்கும் இதற்கு காரணம் கல்வி நிறுவனங்களில் உள்ள மிதமான சட்ட திட்டங்களே காரணமாகும். எனவே இதனை மாற்றியமைக்க வேண்டும். ஜாதி¸ பேதம்¸ மதம்¸ இனம் மற்றும் பிரதேச பேதம் என்பவற்றை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் இதற்காக மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்த கூடிய கூட்டங்கள்¸ கலந்துரையாடல்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என்பவற்றின் மூலமாக அவர்கள் மனதில் உள்ள இன¸ மத பேதங்களை முற்றாக நீக்கமுடியும். அனைவரும் இலங்கை தாய் மக்கள் என்ற உணர்வை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் இதன் மூலம் அவர்களுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் போக வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

அதிகமதிகம் பகிடிவதைகள் அதிகரிக்க மிக முக்கிய காரணம் கனிஷ்ட மாணவர்களிடம் உள்ள அச்ச நிலைமையாகும் முதலில் இந்த மடமைத்தனத்தை இல்லாதொழிக்க வேண்டும் சிரேஷ்ட மாணவர்கள் என்போர்”(Ragging) பகிடிவதை” செய்பவர்கள் தான் என்ற எண்ணத்தை புரட்டிப் போட வேண்டும். இதற்கு சிரேஷ்ட மாணவர்கள் அவர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகள் மற்றும் அறிவுரைகள் என்பவற்றை கட்டாயம் வழங்க வேண்டும். அத்தோடு அவர்களின் பாடத்தெரிவுகள்¸ ஒழுக்க விடயங்கள்¸ ஏனைய விடயங்கள் என்பவற்றிற்கு உறுதுணையாக இருத்தல் வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு சிரேஷ்ட மாணவர்களின் மேலுள்ள அச்ச நிலை மாறி அன்பு கலந்த மரியாதை ஏற்படும் அதன் பின்னர் மரியாதையை நாம் பகிடிவதை என்ற பெயரில் கேட்டு வாங்கத்தேவையில்லை.

எனவே இவ்வாறான மாற்றீடான வழிமுறைகள் மூலம் பகிடிவதை இல்லாத ஒரு சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பி இன வன்முறை இல்லாத சிறந்த நாட்டையும் கட்டியெழுப்ப முடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை

நஸ்ரியா நஸீர்
இஸ்லாமிய கற்கை
3ம் வருடம்
SEUSL

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகள்¸ கல்லூரிகள்¸ பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றில் மாணவர்களின் வருகையும்¸ பங்குபற்றுதலும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கான வழிகாட்டல்களும் பின்னூட்டல்களும் உந்து சக்திகளும் சிறப்பாக அமையப் பெறுவது…

இன்றைய காலகட்டத்தில் பாடசாலைகள்¸ கல்லூரிகள்¸ பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் என்பவற்றில் மாணவர்களின் வருகையும்¸ பங்குபற்றுதலும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கான வழிகாட்டல்களும் பின்னூட்டல்களும் உந்து சக்திகளும் சிறப்பாக அமையப் பெறுவது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *