பகிடிவதைக்கெதிரான மாற்றீடுகள்……

  • 38

இன்றைய கால கட்டத்தில் பகிடிவதை என்பது பரவலாக விமர்சிக்கப்பட்டு வரும் ஒரு தலைப்பாக காணப்படுகிறது. பயத்திற்கு மறுவார்தை பகிடிவதை எனக்கூட கூறலாம். அடிப்படையாக பகிடிவதையின் நோக்கம் இன மத மற்றும் பிரதேச ரீதியாக வேறுபட்ட சூழலில் இருந்து வரும் மாணவர்களைப் பழகவைத்து அவர்களை ஒன்றுசேர்ப்பது¸ அவர்களுக்குள் இருக்கும் திறனை இனங்கண்டு பல்கலையில் அவரவர் திறன்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மற்றும் அவர்களுக்குள் இருக்கும் கூச்ச சுபாவத்தை குறைப்பது என்பனவாகும். இதுவே இன்றுவரையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதும் நம்பவைக்க படுவதுமாகும்.

உண்மையில் இத்தகு நோக்கங்களுக்காகத்தான் இன்றைய பகிடிவதைகள் இடம்பெறுகின்றனவா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். காரணம்¸ செய்யப்படும் பகிடிவதை ஆனது அதை முன்னெடுப்பவரின் நோக்கங்களுக்கு ஏற்ப மாறக்கூடியது. அந்த வகையில் தவறான எண்ணங்களுக்கு ஏற்ப தவறான நடவடிக்கைகளுக்கும் இலகுவில் வழிகோலிவிடக்கூடியது.

சரியான நோக்கங்களுக்கான பகிடிவதையை தவறின்றி முன்னெடுப்பது எவ்வாறு எனக் கேட்டால் முதலாவது பகிடிவதை முறையில் மாற்றம் அவசியம். காரணம் அன்றைய காலங்களில் இருந்த மாணவ சமூகம் வேறு. இன்றுள்ள மாணவ சமூகம் வேறு. அந்தவகையில் பகிடிவதை ஆனது இன்றைய சமூக நிலைமைக்கு ஏற்புடையதாக பாரியளவில் குறைக்கப்பட வேண்டும். “பகிடிவதை” என்னும் பெயரில் அரங்கேறும் அர்த்தமில்லாத விடயங்கள் அகற்றப்பட வேண்டும். மாணவர்களுக்கு ஆக்கபூர்வமானவற்றை மாத்திரம் மாணவர் சங்கத்தின் சரியான கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட வேண்டும்.

அந்த வகையில் பொது மாணவர் மன்றங்கள்¸ கூட்டு நாடகம்¸ பேச்சு போட்டி¸  தனி நடிப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இவற்றை தாண்டி எல்லை மீறிய பகிடிவதைகளில் அதிலும் குறிப்பாக பாலியல் ரீதியான பகிடிவதைகளில் ஈடுபடுவோர் அடையாளம் காணப்பட்டு பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் முதற்கொண்டு  அனைத்து மாணவர்களுக்கும் மத்தியில் இனங்காட்டப்பட வேண்டும். நிச்சயமாக பகிடிவதை நடத்தப்படவே வேண்டும் என்றாலும் அதற்கு பதிலாக மாணவர்கள் அனைவரையும் கொண்டு பல்கலைக்கழக சூழலை சுத்தப்படுத்தல்¸ சிரமதானம் செய்ய வைத்தல்¸ மரம் செடி கொடிகளை நடவைத்தல் போன்ற சிறந்த முறைகளை கையாளுதல் ஆனது பகிடிவதைகான உன்னதமான மாற்றீடுகளாகும்.

அதுமட்டுமின்றி நூலகம் சென்று ஒரு நாளிலேயே இரண்டுக்கு மேற்பட்ட புத்தகங்களை வாசிக்க வேண்டும் என உத்தரவிடுதல். இது சற்று கடினமாக இருந்தாலும் பகிடிவதையுடன் ஒப்பிடும் போது இயலுமான காரியமாக உள்ளது. இதே போன்று நடவடிக்கைகளை முன்னெடுத்து பகிடிவதை நடாத்தபட்டால் பகிடிவதை ஆனது பலரும் விரும்பத்தக்க ஒன்றாக திகழும் என்பதே உண்மை. அந்த வகையில் பகிடிவதை என்பதில் எந்தவொரு ஆக்கபூர்வம் இல்லை என்பதே உண்மை. ஆரோக்கியமான மாற்றங்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்ன மாதிரியான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் தன்  பகிடிவதைக்கு எதிரான மாற்றீடுகளில் உண்மையும் உறுதியும் மேலோங்க கொண்டவராக இருக்க வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் போது ஒருவர் பல்கலைகளையே கற்று தேர்ந்தவராக வெளியேற வேண்டும். மாறாக பல்பகிடியை அல்ல…

MAF.ASHFA
SEUSL

இன்றைய கால கட்டத்தில் பகிடிவதை என்பது பரவலாக விமர்சிக்கப்பட்டு வரும் ஒரு தலைப்பாக காணப்படுகிறது. பயத்திற்கு மறுவார்தை பகிடிவதை எனக்கூட கூறலாம். அடிப்படையாக பகிடிவதையின் நோக்கம் இன மத மற்றும் பிரதேச ரீதியாக வேறுபட்ட…

இன்றைய கால கட்டத்தில் பகிடிவதை என்பது பரவலாக விமர்சிக்கப்பட்டு வரும் ஒரு தலைப்பாக காணப்படுகிறது. பயத்திற்கு மறுவார்தை பகிடிவதை எனக்கூட கூறலாம். அடிப்படையாக பகிடிவதையின் நோக்கம் இன மத மற்றும் பிரதேச ரீதியாக வேறுபட்ட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *