பல்கலைக்கழகம் கற்றவர்களுக்குத்தான்.

ஆனால் இன்று கற்றோரின் நிலையோ
கற்றவருக்கே உரிய இங்கிதம் அற்றுப்போய்
மிலேச்சத்தனத்தால் செருக்கு மேலெழுகிறது.
அறிவு வளர பணிவும் வளர வேண்டும்.
இதனை கற்றுமட்டும் தான் வைத்துள்ளோம்.

அன்பினால் எதையும் சாதிக்கலாம்
அகந்தையினால் வெறுப்பினை தான் சம்பாதிக்கலாம்.
ஒரு படிதான் உயர்ந்தாய்
தெரிந்து கொள் அது உலகத்துக்கு உரியது.
மறுமை ஒன்றுள்ளது. கற்கின்ற பாடமோ இஸ்லாமிய கற்கைகள்¸
காண்கிறோம் உன்னை இஸ்லாத்தின் அந்நியனாக..

வழி நடத்துகிறோம் என்ற பெயரில்
உள்ளத்தினை வேதனை செய்கிறாய்.
ஸலாம் என்றால் சாந்தி. அதை வலுக்கட்டாயமாக
கேட்பதால் நாவு எப்படி உணர்வோடு உரைத்திடும்
மோசத்தை கேட்க எத்தணிக்கிறது மறக்காதே!

மூச்சுக்கு முன்னூறு தடவை நபியை பற்றி பேசுகிறோம் .
மூன்று செயல்களிலும் உள்ளதா என்பதை சிந்திப்போம்.
ஹ{ஜுராத்தின் வசனங்களை மறந்து விட்டாயா!
கடிந்து கொள்ளாதே! கடைசிவரை மாறிடாது.
உன்னை போலவே இனியும் வரும் உன்னை பின்பற்றி ஒரு சமூகம்.
அன்போடும் கனிவோடும் வாழ்ந்திடு! உலகமே உன் பின்னால் தான்.

ஜவ்பர் பாத்திமா ஜெஸ்லா
முதலாம் வருடம்
SEUSL

ஆனால் இன்று கற்றோரின் நிலையோ கற்றவருக்கே உரிய இங்கிதம் அற்றுப்போய் மிலேச்சத்தனத்தால் செருக்கு மேலெழுகிறது. அறிவு வளர பணிவும் வளர வேண்டும். இதனை கற்றுமட்டும் தான் வைத்துள்ளோம். அன்பினால் எதையும் சாதிக்கலாம் அகந்தையினால் வெறுப்பினை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *