காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 06

  • 109

“இப்போ என்ன சொல்றது . உண்மையெல்லாம் சொன்னா இவரு என்ன ஆவாரு…? ஒரு வேளை கோபப்பட்டு நம்மள ஏதும் பண்ணிட்டா…”என மீரா இழுக்க

“இல்ல இல்ல நாம அவருக்கு உண்மையான விஷயத்தை புரியவைப்போம். ஆனா இப்போ இல்ல.

“என்ன சொல்ற ஜெனி!”என ஆர்தர் கேட்டான்.

“முதலில் நாம இந்த திருட்டு கேஸில் இருந்து வெளியே வரணும். அதுக்கு நமக்கு அந்த எவிடென்ஸ் வேணும்…” சோ… அதனால மியூசியத்துக்குள்ள போய் செல்போனை எடுக்கிற பொறுப்பை நாம கில்கமேஷ் கிட்ட விட்டுடுவோம். அப்பறமா எல்லா உண்மைகளையும் நாம இவருக்கு தெளிவா சொல்லிக்கலாம்.”

“உனக்கு உருண்டு வந்ததிலிருந்து ஏதோ ஆயிடுச்சு என்னு நினைக்கிறேன்… அந்த ஆளு பேசுறது எங்களுக்கே சரியா புரியல்ல… அதோட இந்த கோலத்துல மியூசியத்துக்குள்ள போனா அங்க இருக்குற செக்யூரிட்டி இவரை அடிச்சே துரத்திடுவான்…”என ஆர்தர் சொல்ல.

“ஆர்தர் சொல்றது தான் சரி ஜெனி.. இவரை வெச்சு நம்மலாள எதுவும் பண்ண முடியாது.. பேசாம உண்மையை சொல்லிட்டு வா…நாம வேற ஏதாவது நல்ல பிளானா போட்டுக்கலாம்.”என்றாள் மீரா.

“அப்படியெல்லாம் எதுவும் ஆகாது…. நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பேசாமல் இருங்க…”என்ற ஜெனி மீண்டும் கில்கமேஷ் கிட்ட பேசினாள்.

“உங்களுக்கு உருக் நகரம் எங்க இருக்குன்னு காட்டனும் அவ்வளவு தானே…. அதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை சொல்லுறேன்… அதை கேட்டுட்டு உங்க பதிலை சொல்லுங்க.” என்றான்.

“எது சொல்றதா இருந்தாலும் கொஞ்சம் சீக்கிரமா சொல்லு… அது வந்திட போகுது..”என்றான் கில்கமேஷ்.

“இவரு எதை பத்தி பேசுராறு… ஒண்ணுமே சரியா புரியல்லியே… ஏதோ வரப்போறதா சொன்னாரா?”என ஆர்தர் மீராவிடம் கேட்க

“ஓஹ் உனக்கு இவ்வளவு புரிஞ்சிடுச்சா… போடா. எனக்கு தான் ஒண்ணுமே புரியல்லயே.” என சிணுங்கினாள் மீரா..

“ம்ம் சொல்லு..” என கில்கமேஷ் அதட்ட

“உங்க பிரண்ட்… ஒஹ்ஹ் சாரி.. உங்க நண்பன் என்கிடுவுக்கு நீங்க ஒரு மோதிரம் பரிசாக கொடுத்தித்தீங்களே அது நியாபகம் இருக்கா…”

“ஆமா…. அது அவன்கிட்ட இருக்கும்… அதாவது அவனோட கல்லறையில் இருக்கும்.. அதுக்கென்ன?”

“அதை ஒருத்தன் திருட்டிட்டான்….”

“என்ன?”என ஆத்திரப்பட்டான் அவன்.

“பொறுமையா இருங்க மீதியையும் சொல்லிர்றேன்.. அவனை உங்களுக்கு பிடிக்கணும் என்னா நீங்க எங்களுக்கு ஒரு உதவி பண்ணனும்… எங்களுக்கு தேவையான பொருள் ஒண்ணு நாங்க சொல்ற இடத்துக்கு போய் எடுத்து வரணும். உங்களால முடியுமா?”என்று கேட்டாள்.

சற்று நேரம் யோசித்த கில்கமேஷ்…. “சரி செய்றேன்… ஏன்னா எனக்கு அந்த மோதிரம் வேணும். புஸ்பராகத்தால செஞ்ச அந்த மோதிரம் மூலமா தான் மறுபடியும் என்னால என்கிடுவுக்கு உயிர் கொடுக்க முடியும்… என்ன பண்ணனும் சொல்லு.” என கில்கமேஷ் பேசி கொண்டிருக்கும் போது அருகே சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

மூவரும் நடுங்கிப்போய் விட்டனர்.

கில்கமேஷ் “அது வந்திடுச்சு”என்று சொன்னபடியே எதற்கோ தயாராக நின்றான்.

“ஐயையோ வசமா மாட்டிக்கிட்டோம்…. ஆங்.. அங்க பாரு சிங்கம்..” என்று ஆர்தர் தூரத்தில் வந்து கொண்டிருந்த சிங்கத்தை காட்டினான். அது இவர்களை பார்த்து உறுமியது… ஜெனி கில்கமேஷ் நிற்பதை அவதானித்தாள். ஏதோ ஒருவிடயம் நியாபகத்துக்கு வரவே பயம் பதட்டம் எல்லாம் அடங்கிப்போய் கையை கட்டிக்கொண்டாள்.

“ஏய் என்ன நீ… கையை கட்டிக்கிட்டு நிக்குறே… இன்னும் கொஞ்ச நேரத்தில் நாம சாகப்போறோம்.. யாரை முதலில் கொல்லப்போகுதோ…” என மீரா நடுங்கி கொண்டே சொல்ல  ஆர்தர் மீராவுக்கு பின்னாடி நின்று கொண்டிருந்தான்.

“வேடிக்கையை பாரு…”என்றாள் ஜெனி…. அந்த சிங்கம் வேகமாக ஓடிவர அதை வந்த வேகத்திலேயே நேருக்கு நேராக மோதி ஒரே குத்தில் வீழ்த்தினான் கில்கமேஷ்.

“நான் சொன்னேனே… இப்போ புரியுதா நான் ஏன் நம்ம பிளானுக்கு இவரை ச்சூஸ் பண்ணேன் என்னு…”

“நல்லா புரியுது….”என இருவரும் தலையாட்டினர்.

“சொல்லு முதலில் நான் என்ன பண்ணனும்…”என்று கேட்டான் கில்கமேஷ்

“அங்க போறதுக்கு உங்களை தயார் பண்ணனும்…”என்றவள் நண்பர்களோடு சேர்ந்து அவனையும் அழைத்து கொண்டு காட்டில் வேறு ஒரு பக்கமாக நடந்தாள்.

“இவள் இன்னும் என்னெல்லாம் பண்ணப்பறாளோ….”என்று புலம்பிக்கொண்டே ஆர்தரும் நடந்தான்.

சீக்கிரமே இருட்டியும் விட்டது. அன்று இரவானதும் கில்கமேஷ் சட்டென ஒரு மரத்தில் ஏறி தூங்கச்சென்றான்.அப்போது கீழிருந்து அவனை ஜெனி கூப்பிட்டாள்

“ஹாலோ… எபிக் ஹீரோ… எங்களையும் கொஞ்சம் தூக்கி விட்டாதான் என்ன….”என்று கேட்க சடசடவென இறங்கி ஒவ்வொருவராக தூக்கி மரத்தில் வைத்தான். ஒருவாறாக எல்லோரும் மரத்தில் உட்கார்ந்து கொண்டனர்.. அவன் தூங்கிய மறுகணமே குறட்டை விட்டு ஆழ்ந்த தூக்கத்துக்கு போய் விட்டான்.

“இதெல்லாம் சரிவருமா ஜெனி?” என மீரா கேட்டாள்.

“எல்லாமே விதியோட விளையாட்டு தான்.. இல்லேன்னா 8000 வருஷம் கழிச்சி இந்த கில்கமேஷ் நம்ம கண்ணுல ஏன் படனும்…? சொல்லு..”

“ம்ம் சரியா வந்தா சரிதான்….” என ஆர்தரும் கூறினான்.

ஆனால் ஜெனி தன்னோட திட்டத்தை நண்பர்களுக்கு விளக்கி விட்டு அது நல்லபடியாக நடந்தேறி தாங்கள் நிரபராதி என நிரூபணமாகவேண்டும் என வேண்டி கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“இப்போ என்ன சொல்றது . உண்மையெல்லாம் சொன்னா இவரு என்ன ஆவாரு…? ஒரு வேளை கோபப்பட்டு நம்மள ஏதும் பண்ணிட்டா…”என மீரா இழுக்க “இல்ல இல்ல நாம அவருக்கு உண்மையான விஷயத்தை புரியவைப்போம். ஆனா…

“இப்போ என்ன சொல்றது . உண்மையெல்லாம் சொன்னா இவரு என்ன ஆவாரு…? ஒரு வேளை கோபப்பட்டு நம்மள ஏதும் பண்ணிட்டா…”என மீரா இழுக்க “இல்ல இல்ல நாம அவருக்கு உண்மையான விஷயத்தை புரியவைப்போம். ஆனா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *