காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 08

மீராவும் ஆர்தரும் போலீசுக்கு முதலே ஆற்றோரத்தை அடைந்தனர். அங்கு ஜெனியும் கில்கமேஷ்ஷும் பேசிக்கொண்டிருக்க அவசர அவசரமாக மூச்சு வாங்க அவர்கள் முன்னாடி போய் நின்றனர்.

“ஜென்… ஜெனி… போலீஸ் காட்டுக்குள்ள வந்திருக்காங்க…. மோப்ப நாயையும் கூட்டிகிட்டு வந்து இருக்காங்க..” என ஆர்தர் சொல்ல ஜெனி பயத்தில் எழும்பிவிட்டாள்.

“என்ன சொல்றே… இப்போ என்ன பண்ணுறது….”

“எப்படியும் அவங்க கொஞ்ச நேரத்தில் இந்த இடத்துக்கு வந்திடுவாங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு நம்மள கண்டுபிடிக்க நம்ம பேக் எல்லாம் கொண்டுவந்து இருக்காங்க…”என்றாள் மீரா.

நிலைமையை புரிந்து கொண்ட கில்கமேஷ், “யாரும் பயப்படாதீங்க… அதோ அந்த குகையில் ஒளிந்திருங்க..”என்றான்.

“வோ வ்..வா…… இவன் எப்படி தமிழ் பேசுறான்…”என இருவரும் அதிர்ந்து போய் நிற்க

“ஹீ இஸ் அ குயிக் லெர்னர்” என்றாள் ஜெனி.

“சரி வாங்க அந்த குகைக்குள்ள போயிடலாம்.”என்று மூவரும் செல்ல கில்கமேஷ் மட்டும் இதோ வந்துவிடுவதாக கூறி எங்கோ சென்றான்.

“எங்க போறான்… இவன்?” அவர்கள் உள்ளே போய் ஒளிந்து கொண்டதும் கொஞ்ச நேரத்தில் கில்கமேஷ் ஏதோ செடிகளுடன் வந்து சேர்ந்தான்.

“நீங்க போட்டிருக்குற துணியை எல்லாம் கழற்றி என்கிட்ட தந்துட்டு இந்த இலைகளை கசக்கி உடம்புல பூசிக்கங்க…”என்றான்.

மூவரும் ஒருமித்து “வாட்????”என கத்த

“நாய்கள் உங்களை கண்டுபிடிக்க கூடாதுன்னு தான் சொல்லுறேன்… சீக்கிரம்” என்றதும் யாரும் யாரையும் பார்த்து கொள்ளாமல் ஆடைகளை எல்லாம் கழற்றி அவனிடம் கொடுத்து விட்டு இலையை பூசிக்கொண்டு இருண்ட குகையில் மறைந்து இருந்தனர். கில்கமேஷ் அவற்றை கொண்டுபோய் ஆற்றில் வீசி விட்டு போலீசார் வந்த பக்கமாக போனான். நாய்கள் எல்லாம் நுகர்வை நிறுத்தி விட்டு குறைக்க ஆரம்பித்தன. போலீசுக்கு ஒன்றும் புரியவில்லை. கில்கமேஷ் மறைந்து இருந்து மூன்று போலீசாரை தாக்கி மயக்கி விட்டு அவர்களின் ஆடைகளை எடுத்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் குகைக்க்கு வந்து அந்த ஆடைகளை கொடுத்து போட்டுக்கொள்ளும் படி கூறினான்.

“ஜெனி… இவன் சம கில்லாடி.. தான்.” என்ற ஆர்தர் போலீஸ் ஆடைகளை அணிந்து கொண்டான்.

மறுபடியும் கில்கமேஷ் கட்டுக்குள் சென்று அசல் சிங்கம் கர்ஜிப்பதை போலவே கர்ஜிக்க போலீசார் உசாராயினர். காட்டுக்குள் உள்ளாடைகளுடன் மயங்கி கிடந்த மூன்று போலீஸாரையும் ஏனையவர்கள் கண்டுபிடித்து ஜீப்பில் ஏற்றி புறப்பட்டு விட்டனர். என்ன நடந்தது என்பதை யாருக்கும் யூகிக்க கூட முடியவில்லை. அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு மீண்டும் காட்டுக்குள் நடந்தனர். ஆர்தர் கொண்டுவந்த சாப்பாட்டை அனைவரும் சாப்பிட்டனர்… கில்கமேஷ் ஒரு மாதிரியாக சாப்பிடுவான் என மூவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவன் இவர்களை விட நாகரிகமாக நடந்து கொண்டான்.

“இவன் உண்மையில் காவிய நாயகன் தான்…” என மனதில் எண்ணிக்கொண்டே ஜெனி சாப்பிட்டாள்.

சாப்பிட்டு முடித்ததும் மூவருமாக சேர்ந்து கில்கமேஷ் தோற்றத்தை சரி செய்தனர். அவனுக்கு சவரம் செய்து முடிவெட்டி கொண்டுவந்த ஆடைகளையும் அணியச்செய்து முழுவதும் மாற்றி விட்டனர்.

“டடட டட் டாடா”என்று கூறி ஆர்தர் முழுவதும் மாறிவிட்டிருந்த கில்கமேஷை மீராவுக்கும் ஜெனிக்கும் காட்டினான். ஜெனி வாயடைத்து போய் நின்றாள்…

“வாவ் …கில்கமேஷ். யூ ஆர் சோ ஹாண்ட்ஸம்…..” என மீரா அவனை சுற்றினாள். ஆர்தர் கடுப்பாகிப்போனான்.

“க்கும்…..மேடம் லீடர்.. இப்போ என்ன பிளான்…”

“நீங்க பேசிக்கிட்டு இருங்க ..நான் பக்கத்துல எங்காவது வன் பாத்ரூம் போய்ட்டு வர்றேன்.”என்றுவிட்டு மீரா கிளம்பினாள். ஜெனி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

“ஜெனி….”

“ய..யா…. சொல்லுறேன்….கி..கி…கில்கமேஷ். இப்போ உன்னோட பேரு கில்கமேஷ்

இல்ல.  இப்போதிருந்து  கே. கே… அதாவது இந்த பெயரை தான் நீ சிட்டி குள்ள யூஸ் பண்ணனும்.

நாங்க மியூசியம் உள்ளுக்கு வரமுடியாது. அதனால இந்த  பணத்தை வெச்சிக்க இதவச்சி ரிசப்ஷனிஸ்ட் கிட்ட டிக்கெட் எடுத்துக்க….”

“அவங்க எப்படி இருப்பாங்க?”

“ஆஹ்ஹ்.. உள்ளே நுழைஞ்சதும் இடது பக்க கார்னர்ல உக்காந்து இருப்பாங்க.. அது ஒரு பொண்ணு.. அவதான் ரிசப்ஷனிஸ்ட்.”என்றாள்.

“அவ பெரு ஸ்கார்லர்..”என்றான் ஆர்தர்.

“உனக்கெப்படி தெரியும்…?”என ஆச்சர்யத்துடன் ஜெனி கேட்க அசடுவழிந்து கொண்டே

“உள்ள என்டர் ஆனப்போ பார்த்தேன்.. அவ பேரு அங்க  போட்டு இருந்தது…”

“அடப்பாவி… சரி… அவ பேரு இப்படி எழுதி இருக்கும்.” என்று சொல்லி மண்ணில் எழுதி காட்டினாள்.

“மியூசியத்தை சுத்திப்பாக்கணும்என்னு சொல்லு. உள்ளே போனதும் ஒரு இடம் விடாம எல்லா இடத்திலும் ஆர்த்தரோட போன் கிடக்குதா என்னு பாரு…”

“போனா…. அப்படி என்னா என்னது?”

“வூவ்… இதை மறந்திட்டோமே.. இவனுக்கு எப்படி இப்போ போனை பற்றி புரிய வைக்கிறது….” இருவரும் யோசித்து கொண்டே இருக்க மீரா கத்தும் சத்தம் கேட்டது..

“அது மீரா வாய்ஸ் தானே… அவளுக்கு என்னாச்சு..”என ஜெனி பதற தூரத்தில் மீரா ஓடிவருவது தெரிந்தது.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

மீராவும் ஆர்தரும் போலீசுக்கு முதலே ஆற்றோரத்தை அடைந்தனர். அங்கு ஜெனியும் கில்கமேஷ்ஷும் பேசிக்கொண்டிருக்க அவசர அவசரமாக மூச்சு வாங்க அவர்கள் முன்னாடி போய் நின்றனர். “ஜென்… ஜெனி… போலீஸ் காட்டுக்குள்ள வந்திருக்காங்க…. மோப்ப நாயையும்…

மீராவும் ஆர்தரும் போலீசுக்கு முதலே ஆற்றோரத்தை அடைந்தனர். அங்கு ஜெனியும் கில்கமேஷ்ஷும் பேசிக்கொண்டிருக்க அவசர அவசரமாக மூச்சு வாங்க அவர்கள் முன்னாடி போய் நின்றனர். “ஜென்… ஜெனி… போலீஸ் காட்டுக்குள்ள வந்திருக்காங்க…. மோப்ப நாயையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *