என் அன்பு உறவுகளுக்கு….

  • 12

காலத்திற்கு ஏற்ப உங்கள் பதிவுகள் பதிவிடப்படுவது வழமை. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மௌனம் காப்பது ஏன்? என்று முகநூலிலும் வாட்ஸ்அப் இலும் கேள்விகள் வந்து குவிந்துள்ள நிலையில் இப்பதிவை பதிவிடுகிறேன்.

நான் காதலர் தினம் பற்றி பதிவு செய்தேன்.  உரிய வரவேற்பு கிடைத்தது. பிறகு சமூக ஒற்றுமை, ரமழான் பற்றி பதிவு செய்து இறுதியாக Youth With Talent சகோதரனின் வெற்றிக்களிப்புடன் முடிந்தது எனது பதிவு.

இந்நிலையில் 2019.04.21 நடந்த துர்ப்பாக்கியமான, தரம்கெட்ட, கேவலமான சம்பவம் பற்றி இதுவரை எந்த பதிவும் பதிவிடாததன் நோக்கம் சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில் எதிர்ப்பாராத விதத்தில் எதிர்ப்பாராத இடங்களில் இடம்பெற்று முடிந்த குறித்த சம்பவத்தின் பின்னர் நம் நாட்டு மக்கள் முகம் கொடுத்த அதே அதிர்ச்சியில் தான் நானும் இருந்தேன். இருக்கிறேன். அடுத்து இவ்விடயம் பற்றி சமூக வலைதளங்களில் சகோதர உறவுகளின் பதிவுகள் ஒரு பக்கம் கவலையை ஏற்படுத்த இன்னும் ஒரு சில பதிவுகள் கடலில் விழுந்த தேன் போல் சிறு ஆறுதலாக இருந்தது. உண்மையைச் சொன்னால் பதிவுகள் ஏதும் பதிவிடும் மன நிலை ஏற்படவில்லை.

தற்போது இந்த பதிவு பதிவிடுவதன் நோக்கம் இன்ஷா அல்லாஹ் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது. கடந்த 21ம் திகதி நடைபெற்ற சம்பவம் முழு உலகையும் உலுக்கி இருப்பது நாம் யாவரும் அறிந்ததே.

அதே போன்று ரமழான் என்பது முஸ்லிம்களின் புனித மாதம், சந்தோசமான மாதம், அருமையான மாதம், மகத்துவமான மாதம், கண்ணியமான மாதம். இந்த கருத்தில் எந்த ஒரு மாற்றமுமில்லை.

ஆனால் எம்மோடு இதே ரமழான் மாதத்தில் தான் எம் நாட்டின் பெறும்பான்மை சமூகமான பௌத்த சமூகம் வெசாக் பண்டிகையை கொண்டாட உள்ளது. எனினும் இது வரை கிடைத்த உறுதியான தகவல்களின்படி அந்த சமூகம் இவ்வருட வெசாக் பண்டிகையை வழமைப்போன்று கொண்டாட மாட்டார்கள். அதே போன்று இவ்வருட மே தின பேரணிகள் கூட வழமைப்போன்று நடைபெறவில்லை. இவ்வாறு நம் நாட்டு சகல தரப்பினரும் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது எந்தப் பின்னனிக் காரணங்கள் இருந்தாலும் பாராட்டத்தக்கது.

எனினும் முஸ்லிம்கள் என்ற ரீதியில் அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியவர்கள் நாங்கள். ஏனெனில் யாராலோ செய்யப்பட்ட ஒரு சம்பவத் திற்கு இன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் முகத்திரையை நீக்கி முத்திரை குத்தி வருகின்றனர் தீவிரவாதி என்று. எனவே இந்நிலையில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில நடவடிக்ககைளை ஞாபகமூட்டலாம் என நினைக்கிறேன்.

முதலாவது எனது வினயமான வேண்டுகோள் இனியாவது அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவிற்கு கட்டுபடுவோம். உண்மையிலே அந்த தலைமை நம் நாட்டின் ஒரு அரிய சொத்து என்பதை நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். தமக்கு எந்த வகையிலும் கட்டுபடாத ஒரு இயக்கம் செய்த கீழ்த்தரமான செயற்பாட்டிற்கு முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்டு நாட்டு நலனுக்காக சில சட்ட சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் ஒரு தலைமை உண்மையில் மெச்சத்தக்கது.

அடுத்து கொழும்பு அகரதகுரு மெல்கம் காதினல் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் உண்மையிலே கிறஸ்தவ சமூகம் தனது பண்பாட்டை காட்டி வர நாம் பண்பாடு என்ற வாரத்தைக்கே தகுதியற்றவர்களாக்கப்பட்டு விட்டோம். இந்த நொடிவரை சிறந்த முறையில் தலைமை தாங்கி வரும் தற்கால ஜாம்பவானாக இவரை குறிப்பட்டாலும் தவறாகாது. இது வரை எந்த ஒரு கிறிஸ்தவ சமூகத்தவரும் முஸ்லிம்களை பகிரங்கமாக விமர்சிக்கவில்லை. ஆனால் அது நீடிக்குமா? என்பது கேள்விக்குறியே. ஏனெனில் எம் முஸ்லிம் சமூகத்தின் சகோதரர்கள் சுயபுத்தி அற்ற, மாற்று முறை என கருதி மாட்டு முறையில் தயாரித்து வெளியிடும் கேவலமான கானொலிகள், புகைப்படங்கள் என்பவற்றை ஏலவே நொந்து சுக்கு நூறாகி உள்ள கிறிஸ்தவ உள்ளங்கள் காணும் போது இன்னும் வேதனைக்கு உள்ளாகுவர் என்பதில் எந்த சந்தேகமில்லை. அவர்களும் மனிதர்கள் எம்மை அவர்களுடைய நிலையில் வைத்து பார்க்க வேண்டிய கடப்பாட்டில் உள்ள நாம் அவ்வாறு செய்வது முறையற்றது. கண்டிக்கத்தக்கது. குறித்த சம்பவம் நிகழ்ந்த உடன் கௌரவ ரஞ்சித் ஆண்டகை விடுத்த கருத்து யாரும் முஸ்லிம்கள் மீது கை நீட்ட வேண்டாம் என்பதாகும். அவர் எம் சமூகம் மீது கொண்டுள்ள நல்லபிப்பிரயாயத்தை வீணாக்கி விடாதீர்கள்.

இறுதியும் முக்கியமானதுமான விடயம் எம்மீது பல கல்லடிகள் வீசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவர்களாக “நாம் வீசிய கற்கள் அனைத்தும் கண்ணாடி முன் இருந்து நாம் எமக்கே வீசி உள்ளோம்” என உணரும் வரை பொறுமையாக இருப்போம். எது எவ்வாறாயினும் என்னால் இஸ்லாத்திற்கு கலங்கம் ஏற்படக்கூடாது என உறுதியாக எம் மனதில் ஆழப்பதிய வைத்துக்கொள்வோம்.

முஸ்லிம்கள் ஏராளமான சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு தாக்கத்தின் போதும் நாம் எந்த வித பதில் தாக்குதலும் நடாத்தாததால் இனவாத சக்திகள் அன்று எதிர்ப்பார்த்த விளைவுகள் ஏற்படாதது கூட இந்த தாக்குதலின் பின்புலமாக இருக்கலாம். அல்லாஹ் நன்கு அறிந்தவன். எனவே சமூக வலைத்தளங்களில் எமது பதிவு, பகிர்வு என்பவற்றை கூட குறைத்துக்கொள்வது சிறந்தது என கருதுகிறேன்.

இறுதியாக இந்த தாக்குதலின் விளைவு இன்று முழு உலகையும் பாதித்துள்ளது. எனவே சங்கை மிகு ரமழானில் இறைவனிடம் முறையிடுவோம். அவனிடமே உதவி தேட முயற்சிப்போம்.

பஸீம் இப்னு ரஸுல்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

காலத்திற்கு ஏற்ப உங்கள் பதிவுகள் பதிவிடப்படுவது வழமை. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மௌனம் காப்பது ஏன்? என்று முகநூலிலும் வாட்ஸ்அப் இலும் கேள்விகள் வந்து குவிந்துள்ள நிலையில் இப்பதிவை பதிவிடுகிறேன். நான் காதலர்…

காலத்திற்கு ஏற்ப உங்கள் பதிவுகள் பதிவிடப்படுவது வழமை. எனினும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் மௌனம் காப்பது ஏன்? என்று முகநூலிலும் வாட்ஸ்அப் இலும் கேள்விகள் வந்து குவிந்துள்ள நிலையில் இப்பதிவை பதிவிடுகிறேன். நான் காதலர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *