போதைப்பொருள் மத்திய நிலையமாக மாறிவரும் பாடசாலைகள்

  • 23

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை பழக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் இன்று போதைப்பொருள் களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், போன்ற நடவடிக்கைகளுக்கு பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடசாலைகளே பயன்படுத்தபடுகின்றன.

இவ்வாறு பயன்படுத்த இலகுவாக அமைந்துள்ள காரணிகள்:

  1. பாடசாலைகள் ஊரின் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ளமை
  2. பாடசாலைக்கு இரவு நேர காவலாளிகள் இல்லாமை
  3. பாடசாலை நிர்வாகிகள் இரவு நேரங்களில் பாடசாலைப் பக்கம் செல்லாமை

இந்த நிலை தொடந்தும் காணப்படுமாயின் போதைப்பொருள் மத்திய நிலையங்களாக பாடசாலைகள் மாறிவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இவ் அபாயத்தில் இருந்து பாடசாலை சுழலை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

  1. பாடசாலைக்கு முழு நேர காவலாளிகளை நியமித்தல்.
  2. பாடசாலையை ஒளி மயப்படுத்தல்.
  3. இரவு நேரங்களில் பாடசாலையை நிர்வாகிகள் சென்று பார்வையிடுதல்.
  4. பாடசாலையில் அதிபரின் கண்காணிப்பின் கீழ் இரவு நேர கற்றலுக்கான சந்த்தர்ப்பம் வழங்குதல்.
  5. இரவு நேர பாதுகாப்பு கடமையில் உள்ள பொலிஸின் ஊடாக புனிதஸ்தலங்கள் கண்காணிப்பது போல் பாடசாலைகளையும் கண்காணித்தல்.
  6. பாடசாலைகளுக்கும் CCTV Camera பொருத்துதல்.

மேலுள்ள ஆலோசனைகள் பாடசாலை சூழலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகும். இதற்கு மேலதிகமாக மாணவச் சமூகத்தை பாதுகாப்பதற்கான ஆலோசனையை எதிர்பார்க்கிறோம்.

Ibnu Asad

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை பழக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் இன்று போதைப்பொருள் களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், போன்ற நடவடிக்கைகளுக்கு பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடசாலைகளே பயன்படுத்தபடுகின்றன.…

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை பழக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் இன்று போதைப்பொருள் களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், போன்ற நடவடிக்கைகளுக்கு பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடசாலைகளே பயன்படுத்தபடுகின்றன.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *