பகிடிவதைக்கு எதிரான மாற்றீடுகள்

  • 52

இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். அந்தவகையில் நாளைய தவைவர்களான இன்றைய இளைஞர்களை கல்விமான்களாகவும்¸ புத்திஜீவிகளாகவும்¸ நிபுணர்களாகவும்¸ மற்றும் துறைசார்ந்த அறிஞர்களாவும் உருவாக்குவதில் கல்வி நிலையங்கள் முக்கியம் பெறுகின்றன. சமூகத்தில் மாணவர்களுக்கு கல்வி அறிவையும் பண்பாட்டு விழுமியங்களையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடசாலைகள்¸ கல்வியியற் கல்லூரிகள்¸ ஆசிரியர் கலாசாலைகள் மற்றும் பல்கலைகழகங்கள் போன்ற நிலையங்களிலே பகிடிவதை என்ற போர்வையில் அரங்கேறும் அநாகரீகங்கள் படித்தவர்களுக்கு பொருத்தமானதா? என்ற கேள்விக்கான விடை புரியாத புதிராகவே இருக்கின்றது.

பாடசாலைக் கல்வியின் போது கஷ்டங்களையும்¸ இன்னல்களையும்¸ சந்தித்து முடித்துவிட்டு தனது எதிர்கால கனவுகளை நனவாக்க எண்ணி மாணவர்கள் பல்கலைகழகம் வருகின்றனர். ஆனால் அங்குள்ள சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதை என்ற மூர்க்கத்தனமான குணத்தினை சந்திக்க நேரிடுகிறது. கடந்த வருடம் பகிடிவதை காரணமாக 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இன்று பல்கலைகழக நிர்வாக கட்டமைப்பையும்¸ அதன் கற்பித்தல் செயற்பாடுகளையும்¸ பாதிக்கும் ஓரு செயலாக பகிடிவதை அடையாளப்படுத்தப்படுகிறது. பொதுவாக பகிடி என்ற சொல் மானத்துடன் அவனது சுய ஆளுமையுடன் கட்டவிழ்த்துவிடப்படுகின்றதோர் கடுஞ் சொல்லாகும். அது மட்டுமல்லாது மனித உயிரை கொஞ்சம் கொஞ்சமாக உரிஞ்சிக் குடிக்கின்ற உயிர்க் கொல்லியாகும். இவ்வாறு பாதிக்கப்படுகின்ற மாணவர்கள் தனது தைரியமற்ற உள்ளத்தினை திடப்படுத்தாது தன் கல்வியை இடைநிறுத்தவோ அல்லது முற்றுப்புள்ளி இடவோ முற்படுகின்றனர்.

மேலும் வதை என்ற சொல் நோகடித்தல்¸ துன்புறுத்தல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்ற கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. பகிடிவதை பெரும்பாலும் மூன்று வகையாக நிகழ்த்தப்படுகின்றன.

  1. உடலியல் ரீதியான பகிடிவதை.
  2. உளவியல் ரீதியான பகிடிவதை.
  3. பாலியல் ரீதியான பகிடிவதை.

இவை தவிர¸ நீண்ட காலத்துக்கு காலில் செருப்பை மட்டுமே அணியச் செய்தல்¸ தொடர்ந்து வெள்ளை ஆடைகளையே அணியச் செய்தல்¸ ஒரே ஆடையை நீண்ட நாட்களுக்கு அணியச் செய்தல்¸ கூறும் உத்தரவுகளை பின்பற்றாத மாணவர்களை அச்சசுறுத்தல்¸ மற்றும் நூலகம்¸ உணவுச்சாலை ஆகிய இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுத்தல் போன்றவை இம்சை பகிடிவதைகளில் முக்கியமானதாகும்.

சட்டரீதியாக பகிடிவதை தடை செய்யப்பட்டிருக்கின்றது. விசேடமாக 1998ம் ஆண்டிலிருந்து பகிடிவதை எதிர்ப்புச் சட்டம் நடைமுறையிலுள்ளது. அதேபோன்று பின்னரான காலப்பகுதியில் பாலியல் ரீதியான வன்முறை பகிடிவதை தொடர்பிலான சட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக பகிடிவதை தொடர்பில் பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. தமிழ்-முஸ்லிம் மாணவர்கள் தமக்கு மத்தியில் பரஸ்பரம் பகிடிவதை செய்து கொள்ளலாம். ஆனால் பெரும்பான்மை இனத்தவரை பகிடிவதை செய்ய முடியாது. அவர்களும் இவர்களை பகிடிவதை செய்ய முடியாது என்பதே குறித்த விதியாகும்.

பகிடிவதை என்னும் கொடூரமான செயலை நிறுத்துவதற்கு பின்வரும் விடயங்களை முன்வைக்கலாம்.

    1. பகிடி என்ற வார்த்தையின் அர்த்தத்தை மற்றும் அதன் தாக்கத்தை தன்னளவில் வைத்து சிந்தித்தல்.
    2. தனக்கு முன் சென்றவர்களின் செயற்பாட்டை கண்மூடித்தனமாக பின்பற்றாதிருத்தல்.
    3. தான் ஏற்கனவே பகிடிவதையால் பாதிக்கப்பட்டமை காரணமாக பழி தீர்க்கும் எண்ணத்தில் இருக்காமல் பிறர் துன்பத்தில் இன்பம் பெறாமல் இருத்தல்.
    4. தன் சகபாடிகளின் தவறான கருத்துக்களை செவிமடுக்காமல் இருத்தல்.
    5. தமது சமய¸ சமூக காரணிகளை மதித்தல்.

போன்றவற்றை குறிப்பிடலாம்.

பகிடிவதை என்பது நடத்தைசார் ஓர் உளவியல்சார் ஒரு நோய் ஆகும். அதில் ஈடுபடும் மாணவர்களுக்கு தற்காலிக பல்கலைகழக நிறுத்தம் அல்லது நிரந்தர விலக்கல் உள்ளிட்ட தண்டனைகள் குறித்த மாணவர்களுக்கான தண்டனையாக அமையுமே தவிர இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஒரு போதும் கிடைக்கமாட்டாது.

M.S.S. ILMA
ISLAMIC STUDIES
SEUSL

இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். அந்தவகையில் நாளைய தவைவர்களான இன்றைய இளைஞர்களை கல்விமான்களாகவும்¸ புத்திஜீவிகளாகவும்¸ நிபுணர்களாகவும்¸ மற்றும் துறைசார்ந்த அறிஞர்களாவும் உருவாக்குவதில் கல்வி நிலையங்கள் முக்கியம் பெறுகின்றன. சமூகத்தில் மாணவர்களுக்கு கல்வி அறிவையும் பண்பாட்டு…

இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர்கள். அந்தவகையில் நாளைய தவைவர்களான இன்றைய இளைஞர்களை கல்விமான்களாகவும்¸ புத்திஜீவிகளாகவும்¸ நிபுணர்களாகவும்¸ மற்றும் துறைசார்ந்த அறிஞர்களாவும் உருவாக்குவதில் கல்வி நிலையங்கள் முக்கியம் பெறுகின்றன. சமூகத்தில் மாணவர்களுக்கு கல்வி அறிவையும் பண்பாட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *