தாக்கப்படும் முஸ்லீம்களும் தார்மீக கடமையை மறந்துள்ள முஸ்லிம் உம்மத்தும்.. .

  • 15

அன்பாளன்,அருளாளன்,ஆட்சியாளன், எல்லாம் வல்ல ஏக இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன்.
பிஸ்மில்லாஹ்.

எல்லாப்புகழும் காரிருளிலே, கடலுக்கடியில்,ஒரு கல்லின் கீழ் ஒரு கருப்பு எறும்பு ஓடிக் கொண்டிருந்தாலும் அதுபற்றி முழுமையான அறிவை உடைய ஏக வல்லவனுக்கே.
அல்ஹம்துலில்லாஹ்.

முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள், இதற்கு பின்புலம் இனவாதிகளை போஷித்த அரசியல் தலைமைகளே

இந்த வார்த்தை இன்று பொதுவாக பேசப்படும் விடயமாகப் போய் விட்டது.

நாம் அளுத்கம,தர்கா நகர்,பேருவலையில் தாக்கப்பட்டோம்.அது மேல்மாகாணம்..பின்னர் கண்டி,திகன,அக்குறனையில் தாக்கப்பட்டோம்.இது தவிர சிறு தாக்குதல்கள் நாடு பூராகவும் நிகழ்ந்தது. இன்று குருனாகல்,ஹெட்டிபொல,குளியாப்பிட்டி,சிலாபம்,மனுவாங்கொட போன்ற இடங்களில் தாக்கப்பட்டுள்ளோம்.இவை வடமேல் மகாண,அதை அண்மித்த பகுதிகள்..இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரலாம்.அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

எமக்கு தீவிரவாதி என முத்திரைக் குத்தப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு தாக்குதல் நாம் யாவரும் எதிர்பார்த்ததே. ஆனால் இவ்வளவு சீக்கிரம் எதிர்ப்பார்க்கவில்லை.சரி ஏதாே அல்லாஹ்வின் நாட்டம் நடந்துவிட்டது.

ஒரு விடயத்தை இங்கு ஆணித்தரமாக கூற விரும்புகிறேன். இந்த தாக்குதல்களுக்கு முழுப்பபொறுப்பையும் அந்நிய மதத்தவர் மீது சுமத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை. அதில் இரண்டு கருத்திற்கு இடமிருக்க முடியாது. எனது ஊரைப் பொறுத்தவரை தாக்குதல் நடைபெற சாத்தியமற்ற ஒரு ஊராக இருந்த ஊர். இவ்வாறு தான் தாக்கப்பட்டுள்ள அதிகமான பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அப்படியாயின் தாக்கியவர்கள் யார் என்ற கேள்வி மர்மமாகவே உள்ளது.

எது எவ்வாறாயினும் முஸ்லிம்கள் தாக்கப்படுதல் என்பது ஒரு புதிய விடயமல்ல. நபி ஸல் அவர்களுக்கு நுபுவ்வத் கிடைத்தது முதல் இந்த நொடி வரை உலகில் நாம் தாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதுவரை நாம் வீழவுமில்லை. இனியும் வீழப்போவதுமில்லை.

இன்று முஸ்லிம்கள் வாழும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம், மாலைத்தீவு, மியன்மார்,  எகிப்து, லிபியா, சீனா, ஈராக், பலஸ்தீன் என நம் உம்மத் தாக்கப்படும் நாடுகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்லும்.

ஆனால் அவர்கள் முகம் கொடுக்கும், இஸ்லாமிய வரலாறு கண்ட தாக்குதல்களுடன் நாம் முகம் கொடுக்கும் தாக்குதல்கள் எம்மாத்திரம் என்பதை சிந்திக்க வேண்டும்.

இந்த காலகட்டத்தில் சில விஷமிகள் “பொறுத்தது போதும் பொங்கி எழுங்கள்” என கோஷம் எழுப்ப தயாராகி வருகின்றனர். ஏமாந்துவிடாதீர்கள்.. இது ஒரு பௌத்த நாடு. இதில் எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. ஏனைய நாடுகளை விட இந்த நாடு எமக்கு பல சலுகைகளை தந்துள்ளது.இதை நாம் அறிந்தோ அறியாமலோ இதுவரை அனுபவித்து வந்துள்ளோம். இனியும் அனுபவிக்க வேண்டுமாயின் நாம் ஆற்ற வேண்டிய தார்மீக கடமைகள் சில இருக்கின்றன.

    1. இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களும் ஒரே முஸ்லிம் தலைமைக்கு கீழ் கட்டுப்பட வேண்டும்.

    2. நாம் பின்பற்றி இடையில் இடையில் கை நழுவிப்போன இன நல்லுறவு மீண்டும் உருவாக வேண்டும். அவர்களுடன் கலந்து வாழ வேண்டும். கரைந்துவாழாமல்..

    3. இஸ்லாம் பற்றிய தெளிவான புரிதல் முதலில் எம்மத்தியில் வரவேண்டும்.அடுத்து ஏனைய மதத்தவர்க்கும் தெளிவூட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

    4. எமது துஆக்களில் அவர்களது எம்மீதான புரிதலுக்கு அருள் புரிய பிரா்த்திக்க வேண்டும்.

    5. அந்நிய மதத்தவர்களது கொள்கை,கலாச்சாரம் என்பன பற்றி அறிந்து அவற்றுக்கு மதிப்பளிக்கவேண்டும்.

    6. தைரியமற்ற முக நூல் வீரர்களது கருத்துகளுக்கு எள்ளளவும் செவிசாய்க்காமல் சிறந்த ஆளுமைகளின் கருத்துக்கு செவிசாய்க்க வேண்டும்.

    7. இறுதியாக முக்கியமாக நம் முஸ்லிம் சமூகம் இதுவரை உருவாக்காத துறைசார் ஆண்,பெண் நிபுனர்களை ஷரீஆ துறையில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் உருவாக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல் வெறும் பணத்தையும் அரசியலையும் இலக்காக கொண்டு தம் சுய நலத்துக்காக இயங்கும் முஸ்லிம் சமூகம் பற்றிய கரிசனையற்ற எம்முஸ்லிம் தலைமைகளை நாமே விரட்டியடித்துவிட்டு உத்தமசீலர்களை, தூய நோக்கம் கொண்டவர்களை எம் சமூக தலைமைப்பதவிக்கு அமர்த்தி அவர்களிடம் எமது பொறுப்பை அவர்களது கரங்களில் ஒப்படைப்போம்.

அன்பு உள்ளங்களே… நான் மேல் குறிப்பிட்ட எதுவுமே நமக்கு புதியதல்ல. ஆனால் மீண்டும் நினைவுபடுத்துகிறேன் காலத்தின் தேவை கருதி இவை பேசப்பட்டுக்கொண்டிருக்க நாம் புறக்கணித்துக்கொண்ருந்தோம். இன்று நாம் புறக்கணிக்கப்பட்டுள்ளோம். மீண்டும் பேசுகிறோம். முதலில் நாம் மாறுவோம். இனியாவது சிந்திப்போம். ஒன்றுபடுவோம்.

பஸீம் இப்னு ரஸூல்
நிகவெரட்டிய
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அன்பாளன்,அருளாளன்,ஆட்சியாளன், எல்லாம் வல்ல ஏக இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். பிஸ்மில்லாஹ். எல்லாப்புகழும் காரிருளிலே, கடலுக்கடியில்,ஒரு கல்லின் கீழ் ஒரு கருப்பு எறும்பு ஓடிக் கொண்டிருந்தாலும் அதுபற்றி முழுமையான அறிவை உடைய ஏக வல்லவனுக்கே. அல்ஹம்துலில்லாஹ்.…

அன்பாளன்,அருளாளன்,ஆட்சியாளன், எல்லாம் வல்ல ஏக இறைவன் பெயரால் ஆரம்பிக்கிறேன். பிஸ்மில்லாஹ். எல்லாப்புகழும் காரிருளிலே, கடலுக்கடியில்,ஒரு கல்லின் கீழ் ஒரு கருப்பு எறும்பு ஓடிக் கொண்டிருந்தாலும் அதுபற்றி முழுமையான அறிவை உடைய ஏக வல்லவனுக்கே. அல்ஹம்துலில்லாஹ்.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *