காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 19

  • 11

அவர்களே எதிர்பார்க்காத வகையில் வேலைகள் எல்லாம் மளமளவென முடிந்தது. இந்த ஓரிரு நாட்களில் ஜெனியும் கில்கமேஷும் பெரிதாக பேசிக்கொள்ளவே இல்லை. ஏதோ ஒன்று இருவரையும் முகம் பார்த்து  பேசவிடாமல் தடுத்தது.

**********

அடுத்து எல்லோரும் லக்கேஜுடன் எயார்போர்ட்டில் நின்றனர். கில்கமேஷுக்கு இது முதல் அனுபவம். எப்படியும் அவனுக்கு உபயோகப்படுமென்று ஆங்கில மொழியையும் ஆர்தரும் மீராவும் மாறி மாறி சொல்லிக்கொடுத்து அதையும் கற்றிருந்தான் கே கே அந்த மூன்று நாட்களுக்குள்.

இங்கப்பாருங்க நாம எல்லாரும் டூரிஸ்ட் விசாவில் போறோம். சோ அதனால மூனு மாசம் தான் அங்க இருக்க முடியும். அதுக்குள்ள நம்ம வேலையை முடிச்சி கில்கமேஷ் பிரச்சினையை தீர்த்துடனும்…”என்றாள் ஜெனி.

“மீதி விஷயத்தை அங்க போய் பேசிக்கொள்வோம். ஃபிளைட்  கிளம்ப போகுது…..” என்று எல்லோரையும் அலர்ட் பண்ணினான் ஆர்தர். எல்லோரும் விமானத்தில் ஏறிக்கொண்டனர் .

ஜெனியும் கேகேவும் பக்கத்து பக்கத்து சீட்… அதேபோல்  மீராவும் ராபர்ட்டின்பக்கத்து சீட். ஆர்தர் மட்டும் வேறு ஒரு சீட்டில் இருந்தான். அவனுக்கே நெஞ்சே வெடித்து விடும் போல இருந்தது. கொஞ்ச நேரத்தில் ராபர்ட்டே   எழுந்து வந்து…

உன் ஆளை நான் கொத்திக்கிட்டு போய்டுவேன்னு பார்த்து பயந்துட்டியா? நெவர் எனக்கு வரப்போறே பொண்ணு கண்டிப்பா ஃபாரின் பொண்ணுதான். போடா போய் என்னோட சீட்டில் உக்காந்துக்க.”என்றான்.

உடனே ஆர்தர்.. “வாவ் மச்சான்  தாங்ஸ் டா பெஸ்ட் ஒஃப் லக்குடா உனக்கு..” என்றுவிட்டு ஜம்மென்று மீரா அருகில் போய் அமர்ந்தான்.

விமானம் புறப்பட ஆரம்பித்த போது ஏற்படும் ஒருவகையான சத்தம் மற்றும் அந்த உணர்வு கே கேவுக்கு புதுமையாகவும் அதேபோல் குழப்பமாகவும் இருந்தது. சிறுப்பிள்ளையை போல ஜெனி கையை இறுக்க பிடித்து கொண்டான்.

அந்த மூன்று மணிநேர பயணத்தில் உள்ளே விமான பணிப்பெண்களால் விஸ்கி கொண்டுவரப்பட்டது. தட்டில் விஸ்கியை கண்டதும்  ஆர்தரும், ராபர்ட்டும் ஆளுக்கொரு க்ளாஸை எடுத்து கொண்டு குடிக்க வாய் வைத்த போது தான் கே கே நியாபகம் வந்தது..

“ஐயையோ.. மறுபடியும் விஸ்கியா….” என்று ஆர்தர் பதறி அடித்து கொண்டு அவர்கள் இருந்த இடத்தை பார்க்க அவனை விட பயத்தில் ஜெனி காணப்பட்டாள்.

நல்லவேளையாக விமான பணிப்பெண் இன்னும் அவர்களிடம் செல்லவில்லை. பின்னால் திரும்பி ராபர்ட்டை அழைத்து

“டேய், ஏதாச்சும் பண்ணி அவனை குடிக்க விடாம தடு..”என்று ஆர்தர் சொன்னான்.

ஜெனி ஒரு பேர்கரை மட்டும் எடுத்து கொண்டாள். பணிப்பெண் கில்கமேஷ் கிட்ட தட்டை நீட்டிய போது ராபர்ட் வந்து குறுக்கே நின்றான் .

“சேர், நீங்க எதுக்காக இங்க வந்தீங்க…. நாங்களே வருவோம்.. போங்க சேர் போய் உங்க சீட்டில் உக்காருங்க..” என்றாள் பணிப்பெண்.

“ஐயோ… பொண்ணு நிலைமையை புரிஞ்சிக்க… இந்த ஆளுக்கு விஸ்கி கொடுக்க கூடாது…அவனுக்கு.. அலர்ஜி “என்றான்.

பணிப்பெண்ணும் ராபர்டும் என்ன பேசுகிறார்கள் என்று கில்கமேஷ்ஷுக்கு புரியவில்லை.

“அவருக்கு அலர்ஜி என்னா அவர் எடுக்க மாட்டார் தானே… நீங்க எதுக்கு அநாவசியமா எழுந்து வந்தீங்க.” என்று மறுபடியும் அவள் கேட்டாள்.

நடந்த விபரத்தை சொல்லவும் முடியாமல் ராபர்ட் திணற பணிப்பெண்ணின் சற்று அதிகாரமான கட்டளைக்கு இணங்க போய் உக்கார்ந்து கொண்டான் ராபர்ட். எல்லோருக்கும் அவன் என்னசெய்யப்போறான். ஜெனி வேறு பக்கத்தில் இருக்கிறாளே என்று பயமும் பதட்டமாகவும் இருந்தது. பணிப்பெண் கொண்டு வந்த தட்டில் இருந்து அந்த பிளேட் மொத்தமாகவும் தூக்கி எடுத்து கொண்டான். அவளுக்கும் ஒரு மாதிரியாக இருந்தது. பின்னர் அவள் சென்று விட்டாள்..கில்கமேஷ் ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்..

ஜெனியோ,”கடவுளே.. கடவுளே.. “என்று வேண்டிக்கொண்டு இருந்தாள்.

அப்படியே ஏதும் ஏடா கூடமாக நடந்தாலும் ஜெனியை காப்பாற்றவென ஆர்தரும் ராபர்ட்டும் தயாராகவே இருந்தனர். சட்டென ஜெனி மூளைக்கு ஒரு ஐடியா உதிக்க மளமளவென அவன் தட்டில் இருந்த விஸ்கியை அவள் குடித்து விட்டாள். அவளை எல்லோரும் ஆவென வாயைபிளந்து கொண்டு பார்க்க அவள் ஒரே மூச்சில் குடித்து விட்டு கில்கமேஷ் கிட்ட

“ஒரே தாகமா இருந்தது.. அதான்.”என்று சமாளித்தாள்.

“ஒஹ்ஹ். இதையும் எடுத்துக்க” என்று கில்கமேஷ் சான்ட்வீஜை நீட்ட கொஞ்சம் கொஞ்சமாக போதை ஏறிக்கொண்டிருந்த ஜெனி ,

“இல்ல இல்ல அதை நீயே சாப்பிடு….”என்றாள் வாய் குளறிக்கொண்டே..

“என்னாச்சு இவளுக்கு” என்றெண்ணியவன் சாப்பிட ஆரம்பித்தான்.

“அப்பாடா…. ஜெனி தப்பிச்சாள்…” என்று ஆர்தர் மீராவிடம் சொல்லி சந்தோஷப்பட

“போடா லூசு.. அவன் கிட்ட இருந்து தப்பிச்சா அவ்வளவு தான்.. அங்க பாரு அவளை தலை வேற அங்கும் இங்கும் ஆடுதே…. முதல் தடவையா விஸ்கியை குடிச்சு இருக்கா… அவளுக்கு என்ன ஆகப்போகுதோ?”என்று சொல்ல மறுபடியும் மூவரும் இவர்கள் இருவரையும் எட்டி எட்டி பார்த்தனர். ஜெனிக்கு நன்றாகவே போதை ஏறிவிட்டது… தான் என்ன செய்கிறோம் என்றே அவளுக்கு புரியவில்லை…

“ஹே கே கே…. நாம இப்போ எங்க போறோம்…” என்று கொஞ்சம் சத்தமாகவே பேசினாள். இவளுக்கு ஏதோ ஆகிவிட்டது என புரிந்து அதை மீராவிடம் சொல்ல  திரும்பிய போது மீரா அவனிடம் சைகையில் அவளை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னாள். மறுபடியும் ஜெனி..

” ஹே கில்கி….. நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லையே…”என்றாள்..

“ஒஹ்ஹ்..நாம எங்க போறோம் என்னு கேட்டே இல்ல… ஈராக் போறோம்…”என்றான்.

“ச்சு… அதில்ல… அன்னிக்கி கேட்டேனே…. எதுக்காக என்ன ஒண்ணுமே பண்ணாம விட்டே என்னு.. அந்த கேள்விக்கு…” என்று முன்னால் கேட்டதை நியாபகமூட்டினாள்.

இடைக்கிடை ஜெனி விக்கலும் எடுத்தாள். அதனால் கில்கமேஷ் அவளுக்கு தண்ணீர் கொடுத்தான்… குடித்து முடிந்ததும் மறுபடியும் பதில் சொல்ல சொல்லி தொந்தரவு செய்தாள். அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

“இப்போ நீ சொல்லல அப்பறம் நான் உனக்கு பனிஸ்மெண்ட் தருவேன்… அதுவும் இங்க இருக்குற எல்லோரும் பார்க்கும் படி..” என்றாள்.

“என்ன. என்ன தண்டனை தரப்போறே… கொஞ்சம் அமைதியா இருக்க முயற்சி பண்ணு.. உனக்கு ஏதோ ஆயிடுச்சு..”என்றான் கில்கமேஷ்..

உஸ்.. உஸ்… பேசக்கூடாது.. டைம் முடிஞ்சிபோச்சு. நீ பதில் சொல்லல…. இது பனிஸ்மெண்ட் டைம்…”என்று சொன்னவள் சட்டென கில்கமேஷ் உதட்டில் முத்தமிட்டுவிட்டாள்.

“ஆங்… ஆஹ்….”

😱😱😱😱😱💋

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

[yop_poll id=”3″]

அவர்களே எதிர்பார்க்காத வகையில் வேலைகள் எல்லாம் மளமளவென முடிந்தது. இந்த ஓரிரு நாட்களில் ஜெனியும் கில்கமேஷும் பெரிதாக பேசிக்கொள்ளவே இல்லை. ஏதோ ஒன்று இருவரையும் முகம் பார்த்து  பேசவிடாமல் தடுத்தது. ********** அடுத்து எல்லோரும்…

அவர்களே எதிர்பார்க்காத வகையில் வேலைகள் எல்லாம் மளமளவென முடிந்தது. இந்த ஓரிரு நாட்களில் ஜெனியும் கில்கமேஷும் பெரிதாக பேசிக்கொள்ளவே இல்லை. ஏதோ ஒன்று இருவரையும் முகம் பார்த்து  பேசவிடாமல் தடுத்தது. ********** அடுத்து எல்லோரும்…