மனித நேயம்

மனித நேயம்

நீதம் பொசுக்கப்பட்டு
அநீதம் போஷிக்கப்படுவதில்
ஒடுக்கப்பட்டு
ஒடிந்து விட்டது மனித நேயம்….

நாயை வீட்டில் வைத்து
பணிவிடைகள் செய்யும் மனிதன்
தாயைக் கூட்டில் அடைத்து
தயவு காட்ட மறுத்ததில்
மரணித்து விட்டது மனித நேயம்….

மது, மாதில் மோகம் கொண்டு
மழலைகளால் வெறித் தாகம் தணித்து
மங்கைகளின் மானங்களை பாகம் பிரித்ததில்
காற்றில் கரைந்து விட்டது
காசு கொடுத்தும் கிடைக்கா மனித நேயம்….

அறப்போர் என்ற பெயரில்
அழிவுகளை அள்ளித் தூவி விட்டு
உயிர்களை உறிஞ்சிக் குடித்ததில்
உயிர் நீத்தது மனித நேயம்….

இனவாதத் தழல் கொண்டு
இல்லங்களைக் கொளுத்தியும்
ஊடகங்களின் ஊழல்களால்
உள்ளங்களை உடைத்தும்
மழுங்கடிக்கப்பட்டு விட்டது
புனிதமான மனித நேயம்….

மாயம் நிறைந்த உலகில்
நேயம் மறந்த மனிதன்
ஆக்கினைகள் பல பண்ணி
ஆறாத காயங்களை சுமக்கிறான் இன்று…

வினை விதைத்தவன் தான்
வினை அறுப்பான்…..
மத பேதம் இல்லா
மங்கா மனித நேயம்…..
இனியும் வருமா…..????
இதயம் தொடுமா…..????

ILMA ANEES
SEUSL
SECOND YEAR
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

 

கவிதை வியூகம் வெளியீட்டு மையம்