வஹ்ஹாபிகள் என்றால் யார்? வஹ்ஹபிகள் தீவிரவாதிகளா?

  • 12

வஹ்ஹாபி என்ற பெயர் ஷீஆக்களால் பிரயோகிக்கப்பட்ட ஒரு பெயரே தவிர வஹ்ஹாபிகள் என்று இவர்களே தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயர் அல்ல, முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களை சார்ந்தவர்கள் என்று சொல்ல முஹம்மதிகள் என்றுதான் சொல்லி இருக்க வேண்டும், அப்படி சொன்னால் முஹம்மதை சார்ந்தவர்கள் என்று வந்துவிடும் என்று அஞ்சி அவரது தந்தையின் பெயரான வஹ்ஹாப் என்பதுடன் இணைத்து வஹ்ஹாபி என்றுவிட்டனர். வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வை சார்ந்தவன் என்று பொருள் வருமே அது முஹ்ஹம்மதி என்பதைவிட கண்ணியம் கூடியதே என்று இவர்கள் சிந்திக்கவில்லை ஏனென்றால் சிந்திப்பது என்பது இவர்களுக்கு நஞ்சு போன்றது.

இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களுக்கு கிலாஃபா சிந்தனை இருந்ததா என்றால் அப்படி ஒரு துளியளவும் அவருக்கு கிலாஃபாவை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை இருக்கவில்லை, ஏனெனில் அது உலக முஸ்லிம்களை அடக்கி ஆளும் மிகப்பெரும் அமானிதம், முஸ்லிம்கள் உலகமெல்லாம் பரவிக் கிடக்கும்போது அதனை தனி நபர்களோ, தனி ஜமாத்துக்களோ கையில் எடுக்கவும் கூடாது, எடுக்கவும் முடியாது. அருகில் உள்ள துருக்கியில் கிலாஃபா ஆட்சி நடந்தபோதும் அதனுடன் தனது ஆட்சியை இனைத்து சிற்றரசு ஒன்றாக செயல்பட்டிருக்க அவரால் முடிந்திருந்தும் அவர் அதனை செய்யவில்லை, பொதுவாக ஆட்சியை தக்க வைக்க குறுநில சிற்றரசு பேரரசின் கீழ் தங்களை உட்படுத்துவது வழக்கம், மொகலாயர் கூட துருக்கியின் ஆட்சியின் கீழுள்ள ஒரு சிற்றரசு என்ற ரீதியில் பயணித்ததாக சம்பவங்கள் உண்டு.

இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் விரும்பியது ஒன்றை மட்டுமே, தனது நிலம் சார்ந்த இடங்களை சீர் செய்து தனது நிலத்தை தனது நிலம் சார்ந்த ஒரு நல்ல ஆட்சியாளரிடம் கொடுக்க வேண்டும் என்பதைத்தான். அவர் தனக்கு ஆட்சியும் கேட்கவில்லை, அடுத்த நாடுகளுடன் சண்டைக்கு நிக்கவுமில்லை, வந்த சண்டையை விடவும் இல்லை.

நூறு வருடங்களுக்கு முன்பே பேரறிஞர் இமாம் ரஷீத் ரிழா அவர்கள் எகிப்திலுள்ள பிரபலமான தேசிய நாளாந்த பத்திரிகையான அல் அஹ்ராமிலும் (பிரமிட்டுக்கள் பத்திரிகை இன்றுவரை வெளிவருகிறது), தனது அல் மனார் சஞ்சிகையிலும் இமாம் அவர்களின் உண்மை வரலாறு குறித்து அழுத்தமாக எழுதி வந்தார். இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் ஒரு சீர்திருத்த அறிஞர் என்பதையும் இமாம் இப்னு தைமியாவின் பின்புலம் கொண்ட ஆளுமை என்றும் கூறினார், எகிப்தில் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாபை யூதக் கைக்கூலி, கிலாஃபாவின் எதிரி என்று வெகுஜன மக்களிடம் அரசு பதிவு செய்த நேரத்தில் இமாம் ரஷீத் ரிழா அரச பத்திரிகை ஒன்றில் இமாம் அவர்களை உயர்த்தி பேசியதன் விளைவு எகிப்தில் அவரது சீர்திருத்த சிந்தனை தாறுமாறாக வளர்ந்துள்ளது.

எகிப்திலும் சவுதியிலும், அரபு நாடுகளிலும் வஹ்ஹாபிகள், ஸலபிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதில்லை என்பதற்காக அரச கைக்கூலிகள் என்றுதான் குற்றம் சாட்டப்படுவரே தவிர அரசுக்கு எதிராக தீவிரவாதம் செய்பவர்களாக ஒருபோதும் அவர்கள் எதிரிகளால்கூட சொல்லப்படுவதில்லை. அவர்களையா தீவிரவாதிகள் என்று இலங்கை அரசுக்கு சொல்ல முயற்சி செய்கின்ரீர்கள் சம்பிரதாய முஸ்லிம்களே? உங்கள் பொய்கள் ஒருநாளும் உங்களுக்கு உதவி செய்யப்போவதில்லை. இமாம் இப்னு தைமியா எப்படி சோதனைகளை எதிர்கொண்டார்களோ அப்படியான அகிம்சை வழியில்தான் நீங்கள் சொல்லும் வஹ்ஹாபிகள் பயணிக்கின்றனர், ஐ எஸ் தீவிரவாதிகள் தாக்கும் நாடுகள் எல்லாம் நீங்கள் சொல்லும் வஹ்ஹாபிய நாடுகளே தவிர ஷீஆக்களின் நாடுகளோ இஸ்ரேலின் நாடுகளோ அல்ல.

நீங்கள் அவர்களை பள்ளிவாயலில் வெட்டியபோதும், தொப்பி போடாதவன் என்று அடித்தபோதும் அவர்கள் உங்களை ஒருநாளும் திருப்பி அடித்ததில்லை. இவர்களா நாட்டு சட்டத்துக்கு கட்டுப்படாத தீவிரவாதிகள்? ஐ எஸ் பயங்கரவாதத்தை எதிர்த்தும், பயங்கரவாதத்தை எதிர்த்தும் பல போராட்டங்கள் செய்த இவர்களா தீவிரவாதிகள்? கொள்கையை கொள்கையால் எதிர்கொள்ள முடியாமல் பொய்களால் வெல்ல முடியும் என்று இன்னுமா நம்புகிண்றீர்கள், ஒருநாளும் பொய்கள் வெல்லுவதில்லை, அதுவே இன்று உலகில் கண்கூடாக காணும் உண்மை.

எகிப்தில் இந்த பொய் பிரச்சாரங்களை தேசிய மீடியாக்களில் பேசி உண்மையை உணர்த்திய இதுபோன்ற ரஷீத் ரிழாக்களை இலங்கை தேசிய மீடியாக்களில் காணமுடியவில்லை என்பதுதான் கவலையான விடையம்.

அஹ்மத் ஜம்சாத்
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

[yop_poll id=”2″]

வஹ்ஹாபி என்ற பெயர் ஷீஆக்களால் பிரயோகிக்கப்பட்ட ஒரு பெயரே தவிர வஹ்ஹாபிகள் என்று இவர்களே தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயர் அல்ல, முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களை சார்ந்தவர்கள் என்று சொல்ல முஹம்மதிகள் என்றுதான்…

வஹ்ஹாபி என்ற பெயர் ஷீஆக்களால் பிரயோகிக்கப்பட்ட ஒரு பெயரே தவிர வஹ்ஹாபிகள் என்று இவர்களே தங்களுக்கு சூட்டிக்கொண்ட பெயர் அல்ல, முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் அவர்களை சார்ந்தவர்கள் என்று சொல்ல முஹம்மதிகள் என்றுதான்…