பொறுமைக்காரி

  • 7

விதி மீதான பேராசையால்….
காலங்கள் கடந்து போகின்றது
அவளும் காலத்தைகடந்து
கொண்டு தான் இருக்கிறாள்
விதி ஒரு நாள் மாறும் என்று..

கறுப்பு இராக்கள் தினமும்
விழி தொடுத்து தன் நெற்றியை
நிலம் பதித்து விதி மாற
நிலை நிற்கிறாள் அவள்….

வரண்ட பாலை மழை கண்டு
சிரிப்பதை போல் அவள்
நெற்றி நிலம் சிரித்ததே
விழி மழையில்…

நடப்பதெல்லாம் நடக்கட்டும் நடக்கட்டும்
என்று பொறுமை செய்து
அவள் நெஞ்சில் இறுக்கி வைத்த
சுமைகளை கட்டவிழ்த்து விட்ட கறுப்பு
இராக்கள் நீண்டு கொண்டே போகின்றது
அவள் விதி மீதான பேராசையால்…

இதுவும் கடந்து போகும் என்று
அடுத்து என்ன நடக்க போகிறது
என்பதே மற்றொரு ஏக்கமாய் இருந்தது
அவள் கட்டவிழ்த்த நெஞ்சின் ஓரத்தில்….

பொறுத்திரு உன் ஏக்கத்திற்கு
பதில் உண்டு என்று அடிக்கடி
அவள் அவளுக்கே
தைரியமூட்டி கொண்டிருந்தாள்……

எதிர்காலம் உத்தரவாதமில்லை
நிகழ்காலத்தை வருத்தி
என்ன பலன் என்று
பொறுமை கொள்கிறாள்
இறை நியதியை ஏற்று
பொறுமைக்காரி கதாபாத்திரத்தில்…..

K.Fathima Risama
Nintavur.
SEUSL….
வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

விதி மீதான பேராசையால்…. காலங்கள் கடந்து போகின்றது அவளும் காலத்தைகடந்து கொண்டு தான் இருக்கிறாள் விதி ஒரு நாள் மாறும் என்று.. கறுப்பு இராக்கள் தினமும் விழி தொடுத்து தன் நெற்றியை நிலம் பதித்து…

விதி மீதான பேராசையால்…. காலங்கள் கடந்து போகின்றது அவளும் காலத்தைகடந்து கொண்டு தான் இருக்கிறாள் விதி ஒரு நாள் மாறும் என்று.. கறுப்பு இராக்கள் தினமும் விழி தொடுத்து தன் நெற்றியை நிலம் பதித்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *