கனக்கும் மனதுக்கு

  • 8

கஷ்டம் கண்டு வாடிய உனக்கு
இஷ்டம் கொண்டு
உன் மனதோடு உரையாட
கவிதையால் இவள்…..

யாருக்கும் இல்லை
என்று எண்ணி
கவலை அணிந்து
கொண்டாய் போலும்…

உன் அறைக்கு சூரியன்
வெளிச்சம் கொடுக்க
நீ உன் ஜன்னல் திரை
நீக்குவதை போல்
உன் கஷ்ட திரை நீக்குவதில்
உள்ளது உன் மனதின் வெளிச்சம்…

கரைக்கும் சக்தியும்
கரையும் சக்தியும்
நீருக்கு உண்டு
கரையும் நீரல்லாது
கரைக்கும் நீராய் இரு…

விழுவது அவமானம்
என்று நினைத்து
வெற்றியை இழக்கிறாய்
விழுந்து எழுவது தான்
வெற்றி என்பதை மறந்து ….

மண்ணில் விழுந்து
விருட்சம் எடுப்பதும்
வீணாய் போவதும்
உன் மனதுக்குள்
நீ கொடுக்கும்
பசளைக்கு இருக்கிறது
என்பதை மறவாதே…

உன் வாழ்வில்
நீ குழந்தை
தெத்தாமல் தவழாமல்
எழும்பி நடக்க
நினைப்பது எப்படி
விழுந்தால் தானே
எழு வேண்டும் என்ற
எழுச்சி தோன்றும்….

தாங்கொன்னா
சொல்லடி கேற்கின்றாயா?
மறந்து விடாதே
நீ அவர்களுக்கு பல
படி முன் உள்ளாய் என்று…..

மீண்டும் மீண்டும்
பாதம் பட
பாறை கூட பாதையாகும்
உன் பாதை உன்னிடமே
உன் வெற்றியும் உன்னிடமே….

காய்க்கும் மரத்திற்கும்
கல் அடி,
காயா மரத்திற்கும் சொல்வடி.
இது இந்த உலக நியதி…

நான் விடை பெறும்
தருணத்தில் உன்
ஆழ்மனதை தட்டி செல்கிறேன்

உன்னால் முடியும்
என்ற வீர வாக்கை
நீ உச்சரி
உன் உச்சம் இறுதியில்
உன் பெயர்
உச்சரிக்கும் உலகுக்கு….

K. Fathima Risama
Nintavur
SEUSL
வியூகம் வெளியீட்டு மையம்

கஷ்டம் கண்டு வாடிய உனக்கு இஷ்டம் கொண்டு உன் மனதோடு உரையாட கவிதையால் இவள்….. யாருக்கும் இல்லை என்று எண்ணி கவலை அணிந்து கொண்டாய் போலும்… உன் அறைக்கு சூரியன் வெளிச்சம் கொடுக்க நீ…

கஷ்டம் கண்டு வாடிய உனக்கு இஷ்டம் கொண்டு உன் மனதோடு உரையாட கவிதையால் இவள்….. யாருக்கும் இல்லை என்று எண்ணி கவலை அணிந்து கொண்டாய் போலும்… உன் அறைக்கு சூரியன் வெளிச்சம் கொடுக்க நீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *