கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சைக்குத் எழுதிய மாணவ மாணவிகளுக்கான சிந்தனைகளும் வழிகாட்டல்களும்

கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சைக்குத் எழுதிய மாணவ மாணவிகளுக்கான சிந்தனைகளும் வழிகாட்டல்களும்

  • 638

முதன் முதலில் இறைவனை போற்றிப் புகழ்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுக்கே புகழ் அனைத்தும்.

அன்பார்ந்த மாணவ மாணவிகளே! இந்த சந்திப்பின் நோக்கம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவ மாணவிகளின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதாகும்.

உங்களை ஆளாக்கி சீராக்கி இத்தரத்திற்கு நீங்கள் வருவதற்கு காரண கர்தாக்களாக இருந்த பெற்றோர்களையும் ஆசான்களையும் அவர்களின் முயற்சிகளையும் எம்மால் மறக்க முடியாது. மேலும் உங்கள் பாடசாலை முன்னேற்றத்திற்காக உழைத்த சங்கங்கள்¸ தொண்டர் நிறுவனங்கள்¸ அமைப்புக்கள் என்று பலருடைய பெயர்கள் உங்களின் வெற்றிக்குப் பின்னால் மறைந்திருக்கின்றன. வல்ல இறைவன் இவர்களின் இப்பாரிய முயற்சிக்கு பொருத்தமான கூலிகளை வழங்குவானாக!

மேலும் எமது நாட்டில் இப்பரீட்சை எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் அல்லாஹ் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக சமூகத்தில் மலர வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொண்டு விடயத்திற்கு வருகிறேன்.

சமூகத்தில் பொதுவாக ஒரு பழக்க வழக்கம் இருக்கின்றது. என்னவென்றால் உயர்தர பரீட்சை எழுதும் எனது பிள்ளை ஒரு வைத்தியராக¸ கணக்காளராக¸ பொருளியலாளராக எதிர்காலத்தில் திகழ வேண்டும் என்று பெற்றோர்கள் ஆசைப்படுவார்கள். அவர்களது எதிர்கால கனவு அவ்வாறு தான் இருக்கிறது. நாம் நினைத்த விடயம்¸ நாம் கண்ட கனவு ஓரளவு நனவாகி விட்டது. பல வைத்தியர்களை¸ பல கணக்காளர்களை¸ பொருளியலாளர்களை இத்துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களை இந்த நாடு கண்டிருக்கின்றது. ஆனால் கல்வித்துறையை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம் 735 பாடசாலைகள் இருந்தால் 735 அதிபர்கள் தேவைப்படுகின்றார்கள் இத்துரையில் மேற்படிப்புடன் (SLPS) இலங்கை அதிபர் சேவை பெற்ற நம்பிக்கையுள்ள சமூகத்தைப் பற்றி அக்கறையுள்ள அதிபர்கள் உருவாக்கப்பட்டு மாணவர்களை சீராக வழி நடாத்த வேண்டும். அல்லது எமது நாட்டின் நிர்வாகத் துறைக்கு¸ பாதுகாப்புத் துறைக்கு நம்பிக்கையானவர்கள் பொறுப்புணர்வுள்ளவர்கள் தேவைப்படுகின்றார்கள். எமது சமூகத்தின் எதிர்காலக் கனவுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். வைத்தியர்கள்¸ கணக்காளர்கள்¸ பொருளியலாளர்களால் கிடைக்கும் பயன்பாட்டை விட பாடசாலையை நிர்வாகிக்கும் அதிபர்¸ ஆசான்களின் சேவையே இன்றியமையாததாகும்.

ஒரு வைத்தியரினால் நோயுற்றவருக்கு மாத்திரம் தான் வைத்தியம் செய்ய முடியும்¸ ஒரு கணக்காளரால் கணக்கை மாத்திரம் தான் ஆய்வு செய்ய முடியும்¸ ஒரு அதிபர்¸ ஆசிரியரால் மாத்திரம் தான் ஆசிரியர்களை¸ அதிபர்களை உருவாக்க முடியும். (இவர்கள் சிறந்த ஆசிரியர் குழாமாக இருந்தால் நல்லொழுக்கம் உள்ள மாணவர் சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்¸ நல்லொழுக்கம் உள்ள மாணவ சமூகத்தால் மாத்திரமே சமூகத்தலைவர்கள் நல்லவர்களாக மக்கள் மன்றத்தில் நடமாடுவர்.

இங்கே நான் ஒட்டுமொத்த வைத்தியர்களின் சேவைகளை குறை கூற வில்லை. அவர்களின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. ஆனால் கவலை என்னவென்றால்¸ அவர்களின் பட்டப்படிப்பை நிறைவு செய்ததன் பின் அவர்களின் சுயநல வாழ்க்கை ஆரம்பமாகின்றது. அவர்களது தனி வாழ்வு ஆரம்பமாகிறது¸ உரிய நேரத்தில் வைத்தியசாலையில் வேலையை முடித்து விட்டு தனியார் சிகிச்சை நிலையங்களில் இவ்வாறு தான் வெவ்வேறு துறையில் ஈடுபடுபவர்களின் நிலைமை. எனவே திறமையான ஆசிரியர்களும்¸ அதிபர்களும் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும். தலை சிறந்த சமூக உருவாக்கத்திற்கு பொற்றோர்களை அடுத்த தானத்தில் ஆசிரியர்களையே சாரும்.

இன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கு மார்க்கப்பற்றுள்ள ஈமானிய உணர்வுள்ள அதிபர்கள்¸ ஆசிரியர்களின் தேவைப்பாடு அதிகரித்துள்ளது. எமது பாடசாலைகளின் இந்த இடைவெளிகளை நிரப்ப தகுதியற்றவர்கள் அல்லது பிற மதத்தவர்கள் அதை நிரப்பி விடுவார்கள். (ஒரு முஸ்லிமான குழந்தைக்கு ஒரு முஸ்லிமான ஆசிரியரால் மாத்திரம் தான் இஸ்லாமிய விழுமியங்களையும்¸ பண்பாட்டையும் கற்றுக் கொடுக்க முடியும். பிறமத வைத்தியர்களிடம் சென்று நோயிற்கு மாத்திரை எடுத்துவிட முடியும் ஆனால் அவரிடம் சென்று சீரான கல்வியை¸ ஒழுக்கத்தைப் பெற முடியாது.

இவ்வருடம் உயர்தரப் பரீட்சையை எதிர் கொள்பவர்களை விழித்து செல்கிறேன். எமது சிந்தனைகள் எதிர்காலத்தை நோக்கிய பயணம் பரந்ததாக¸ விரிந்ததாக இருக்க வேண்டிய காலத்தில் வாழ்கிறோம். எமது நாட்டின் நிர்வாகத் துரையில் SLAS கடமை புரிகின்ற ஒருவராக உருவாக வேண்டும். பாராளுமன்றத்திற்கு செல்பவர்கள் பட்டப்படிப்பு அனைத்தையும் கற்றுவிட்டு அங்குள்ள ஆசனங்களை தனதாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். எனவே¸ நாட்டினுடைய அமைச்சுப் பதவிகளை கைப்பற்றிக் கொள்வதைவிடவும் அமைச்சரின் ஒரு செயலாளராக செயல்பட தொழில் புரிய முயற்சி செய்யுங்கள். செயலாளர் திட்டமிடுகின்ற போது அமைச்சரால் அதை செயற்படுத்த முடியும்.

மற்றது பாதுகாப்புத் துறையிலும் முஸ்லிம்கள் உயர் அதிகாரிகளாக கடமை புரிய வேண்டிய கடப்பாடும் எமது நாட்டில் உருவாகியுள்ளது. எமது பள்ளிவாயல்களை பாடசாலைகளைப் பாதுகாப்பது பிற மதத்தைச் சார்ந்த பாதுகாப்புப் படையினர். இங்கு என்ன உத்தரவாதம்? அவர்கள் பாதுகாப்பாளர்களா? படையெடுப்பாளர்களா? சிறுபான்மையாக வாழ்கின்ற நாம் இவ்வாறான வெற்றிடங்களை எப்போது நிரப்புவோமோ அப்போது தான் எமது எதிர்காலம் வளம் பெறும்¸ நலம் பெறும்.

எமது இஸ்லாமிய இளைஞர்கள் அனைத்துத் துறைகளிலும் கால் பதிக்க வேண்டும். சாதனை படைக்க வேண்டும். சுயநலம் நாடுகின்ற வைத்தியர்கள்¸ கணக்காய்வாளர்கள் எமக்குத் தேவையில்லை. மார்க்கப்பற்றுடன் கூடிய சமூகப் பற்றாளர்கள் தான் எமது நாட்டில் எமக்குத் தேவை.

எமது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சேவை செய்யுமாறு உங்களை நான் பணிக்கவில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவோம்¸ நாட்டின் முன்னேற்றப் பாதையில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக உள்ளது. எமது முன்னோர்கள் வழங்கிய பங்களிப்பு தான் இன்றும் நாம் இங்கு தங்கியிருக்கிறோம். அவர்களைப் பற்றிப் பேசுகிறோம். நாட்டின் வளத்திற்காக முஸ்லிம்களின் உதிரம் செலவளிக்கப்பட்டுள்ளன.

எமது பாடசாலைகளில் தற்போது கடமை புரிகின்ற ஆசிரியர்களை விழித்துச் சொல்கிறேன். நீங்கள் சிறப்பாக பாடங்களை கற்பிப்பவராக புலன் பெற்றவராக இருந்தால் உங்களைப் போன்றவர்களை உருவாக்கிவிட்டு ஓய்வு பெறுங்கள் உங்கள் மரணத்திற்கு பின்பும் சமூகம் வாழ வேண்டும். உங்கள் காலம் பொற்காலமாக இருப்பதுடன் உங்கள் மறைவிற்குப் பின்னாலும் பொற்காலம் நிலைபெற வேண்டும்¸ மலர வேண்டும்.

இறுதியாக அனைத்துத் துறைகளிலும் எமது 10% வீத முஸ்லிம்கள் மிகத் திறமையாக நம்பிக்கையாக செயற்பட வேண்டும். பொருப்புக்களை சுமந்திருப்பவர்கள் நேர்மையாக செயற்படுங்கள்.

அல்லாஹ் பரீட்சை எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த சித்தியைத் தர வேண்டும். அதனூடாக சமூக சேவகர்களாக நீங்கள் மாற வேண்டும். நாளை கியாமத்தில் நடக்கவிருக்கும் இறுதிப் பரீட்சையில் வெற்றியடைந்து சுவனலோகத்தை எமது சொந்த வீடாக அமைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.

உரை : அஷ்ஷேஹ் யூசுப் ஹனீபா (முப்தி)
தொகுப்பு : அய்யூப் அப்துல் வாஜித் (அல்-இன்ஆமி)
வியூகம் வெளியீட்டு மையம்

முதன் முதலில் இறைவனை போற்றிப் புகழ்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுக்கே புகழ் அனைத்தும். அன்பார்ந்த மாணவ மாணவிகளே! இந்த சந்திப்பின் நோக்கம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவ மாணவிகளின் எதிர்காலம் எவ்வாறு அமைய…

முதன் முதலில் இறைவனை போற்றிப் புகழ்கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுக்கே புகழ் அனைத்தும். அன்பார்ந்த மாணவ மாணவிகளே! இந்த சந்திப்பின் நோக்கம் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவ மாணவிகளின் எதிர்காலம் எவ்வாறு அமைய…

72 thoughts on “கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சைக்குத் எழுதிய மாணவ மாணவிகளுக்கான சிந்தனைகளும் வழிகாட்டல்களும்

  1. Very good site you have here but I was wanting to
    know if you knew of any forums that cover the same topics discussed
    in this article? I’d really love to be a part of group where I can get
    responses from other experienced people that share the same interest.

    If you have any suggestions, please let me know. Many thanks!

  2. I like what you guys are usually up too. This sort of clever workand coverage! Keep up the amazing works guys I’ve incorporated you guys to my own blogroll.

  3. A motivating discussion is definitely worth comment. I believe that you should publish more on this issue, it might not be a taboo subject but usually people don’t discuss these topics. To the next! All the best!!

  4. Read this Article Good info and right to the point. I am not sure if this is really the best place to ask but do you people have any thoughts on where to employ some professional writers? Thank you 🙂

  5. Pretty great post. I just stumbled upon your blog and wantedto say that I have truly loved browsing your blog posts.After all I will be subscribing on your rss feed and I am hoping you write again soon!

  6. Hi just wanted to give you a quick heads up and let you know a few ofthe images aren’t loading correctly. I’m notsure why but I think its a linking issue. I’ve tried it in twodifferent browsers and both show the same outcome.

  7. hello!,I really like your writing so so much! share we communicate more about your post on AOL? I need an expert on this space to solve my problem. Maybe that’s you! Looking ahead to look you.

  8. Great post. I was checking constantly this blog and I’m impressed!Very useful information specifically the last part 🙂 I care for such information a lot.I was looking for this particular info for a long time.Thank you and best of luck.

  9. I’m not sure where you’re getting your information, but good topic.I needs to spend some time learning much more or understanding more.Thanks for wonderful information I was looking for this info for my mission.

  10. Oh my goodness! a tremendous article dude. Thank you Nevertheless I’m experiencing problem with ur rss . Don抰 know why Unable to subscribe to it. Is there anybody getting identical rss problem? Anyone who knows kindly respond. Thnkx

  11. A fascinating discussion is worth comment. I think that you should write more on this subject matter, it might not be a taboo subject but usually folks don’t talk about such topics. To the next! Cheers!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *