Lafees

பொறுமைதான் சுவனத்தின் திறவு கோல்!

  • 10

பொறுமை என்பது வாழ்வின் கஷ்டங்களை, இன்னல்களை சகித்துக் கொள்ளல் எனும் வகையில் இறைவனின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்ளல் எனும் உன்னத ஆன்மீக நிலையின் அடையாளம் என்பது ஒரு பக்கம் என்றால் அதன் அடுத்த பகுதி கஷ்டங்களையும், இன்னல்களையும் தீர்க்கும் வகையில் உணர்ச்சிவசப்படாது திட்டமிட்டு இயங்குதல் என்று அர்த்தம்.

பொறுமை என்பது கோழைத் தனம் அல்ல. அஷ் – ஷெய்க் கிழ்ர் ஹுஸைன் கூறுவார் : ‘நபிகளாரின் மக்கா வாழ்க்கை பொறுமையின் அடித்தளத்தில் அமைந்து இருந்தது. நபிகளாரின் பொறுமை என்பது கோழைத் தனத்தின் அடையாளமாக இருக்கவில்லை. அரபு சிலை வணக்கத்திற்கு மாற்றமாக ஒரு வாழ்க்கை நெறியை கொண்டு வந்து பிரசாரம் செய்யும் ஒருவர் ஒரு போதுமே கோழையாக இருந்திட முடியாது. அதன் பொருட்டு தனது சொந்த மக்களையே பகைத்துக் கொண்டவர் நபிகள் நாயகம்! நபிகளாரின் பொறுமை என்பது பிரச்சனைகளை தீர்க்கும் காலம் கவனிவதற்குரிய பொறுமையாக இருந்தது. அறிவு, திட்டமிடல் மற்றும் சூழ்நிலையைக் கணித்தல் என்பதற்குரிய பொறுமையாக இருந்தது.

அல் குர்ஆன் நபிமார்களின் வரலாறுகளை கூறும் பொழுதெல்லாம் பொறுமையை அணிகலனாக கொண்ட அவர்களின் பண்பை சிலாகிக்கிறது. ஏனெனில் உலக வாழ்வின் யதார்த்தம் என்பது இன்பமும் துன்பமுமே. இன்பத்தில் எல்லை மீறி விடாமலும், துன்பத்தில் சோர்ந்து விடாமலும் எம்மை காப்பது பொறுமை எனும் பண்பே.!

இங்கிருந்து அறிவோம் பாதையை செப்பனிடல்

Lafees
வியூகம் வெளியீட்டு மையம்

பொறுமை என்பது வாழ்வின் கஷ்டங்களை, இன்னல்களை சகித்துக் கொள்ளல் எனும் வகையில் இறைவனின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்ளல் எனும் உன்னத ஆன்மீக நிலையின் அடையாளம் என்பது ஒரு பக்கம் என்றால் அதன் அடுத்த பகுதி…

பொறுமை என்பது வாழ்வின் கஷ்டங்களை, இன்னல்களை சகித்துக் கொள்ளல் எனும் வகையில் இறைவனின் ஏற்பாட்டை பொருந்திக் கொள்ளல் எனும் உன்னத ஆன்மீக நிலையின் அடையாளம் என்பது ஒரு பக்கம் என்றால் அதன் அடுத்த பகுதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *