மீண்டும் அந்த குரலுக்காய்……

  • 98

உலகமே ஆழ்ந்து துயிலும்
இரவின் மௌனத்தை
செவிமடுத்திருக்கிறாயா?
நான் செவிமடுத்திருக்கிறேன்

நட்சத்திரங்கள் கண்சிமிட்டிப்
பேசிக்கொண்டு இருக்கும்
இரவு வேளையில்
காற்றின் ஓலத்திற்குள்
புதைந்திருக்கும்
பெருந்துயரை உணர்ந்திருக்கிறாயா?
ஆம் நான் உணர்ந்திருக்கின்றேன்
அந்த காற்றோடு
ஒரு அமைதிக்குரல்
என்னவோ மனசு
அமைதி பெற்றது அந்த குரலினால்

காலந்தோறும்
நியாயமே அற்ற முறையில்
விதியால் பிணிக்கப் பட்டிருக்கும்
மௌனமாக விசும்பிக் கொண்டிருக்கும்
பெண்களின் பெருமூச்சுக்களை
தனக்குள் பொதிந்து
வைத்திருக்கிறது போலும்
அந்த குரல்

இங்கிதமாய் என் காதில் உரையாற்றியது
இவ்வாறு அந்த குரல்
மனசு வலிக்கிறது
கண்கள் சிரிக்கிறது
அதன் வலி மறுத்து

ஓலை குடிசையில்
இளம் காற்றில்
என் தந்தையின் அன்பில்
உண்ட உணவு
சமிக்கிறது இப்போது

அவனின் சீர்கெட்ட
சீதனப்பேச்சால்
நான் ஆண்களை
குறை சொல்லவில்லை
பெண்ணிடம்
பிச்சை எடுத்து வாழும்
சீதனக்காரர்களை சொல்கிறேன்

தெருவில் இறங்கி
பிச்சை எடுத்தால்
ரோசம் கசத்துவிடும் என்று
புது முறை
செய்கிறார்கள் போலும்

துன்பம் துரத்தி
அன்பால் வாழ வந்த
பெண்ணை ச்சீ என
தெருவில் அலையவிட்டது
அவன் கேட்ட சீதனம்

வியர்வையை இரத்தமாய்
சிந்தி சிறப்பாய்
திருமணம் செய்துவிட்டோம் என
நம்பிய பெற்றோரின்
நம்பிக்கையை வீணாக்காமல் தன்
வாழ்க்கையை வீணாக்கி
தவிக்கும் பெண்கள்
இன்னும் எத்தனையோ

உணர்வுகள் மதிக்கப்பட்டு
பெண் கொடூரங்கள்
தவர்க்கப்பட்டு
உண்மையாய் வாழும் காலம்
எப்போது வருமோ தெரியவில்லை

சீ என சித்தரிக்கும்
சீதனம் பற்றி
பேசும் வார்த்தைகளைப்
பொறுமையாகச்
செவிமடுப்பதே இத்தனை
சுமையாகத் தோன்றுமென்றால்

அந்த வார்த்தைகளுக்குள்
பொதிந்திருக்கும் வலிகளையும்
கண்ணீரையும் காலங்காலமாகச்
சுமந்து வாழும்
சீதனத்தால் பலியான
பெண் இனத்துக்கு எவ்வாறு வலிக்கும்

சீதனத்தை சீர் தூக்கும்
ஆண்களுக்கு சொல்லி வை
வறுமையால் வரும் வலியை விட
உன் ச்சீ தன பேச்சால்
வரும் வலி கொடியது என்று

உணர்வுகளை மதித்து வாழும்
ஆண்கள் பண வலிமை
எதிர்பார்க்க மாட்டார்கள்
என சொல்லி விட்டு
நிசப்தம் பூண்டது அந்தக்குரல்

இன்னும், நான்
அந்த குரலுக்காய்
காத்திருக்கின்றேன்
மீண்டும்
ஒரு அனுபவத்தை பெற….

 

K. Fathima Risama
Nintavur
SEUSL
வியூகம் வெளியீட்டு மையம்

உலகமே ஆழ்ந்து துயிலும் இரவின் மௌனத்தை செவிமடுத்திருக்கிறாயா? நான் செவிமடுத்திருக்கிறேன் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டு இருக்கும் இரவு வேளையில் காற்றின் ஓலத்திற்குள் புதைந்திருக்கும் பெருந்துயரை உணர்ந்திருக்கிறாயா? ஆம் நான் உணர்ந்திருக்கின்றேன் அந்த காற்றோடு ஒரு…

உலகமே ஆழ்ந்து துயிலும் இரவின் மௌனத்தை செவிமடுத்திருக்கிறாயா? நான் செவிமடுத்திருக்கிறேன் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிப் பேசிக்கொண்டு இருக்கும் இரவு வேளையில் காற்றின் ஓலத்திற்குள் புதைந்திருக்கும் பெருந்துயரை உணர்ந்திருக்கிறாயா? ஆம் நான் உணர்ந்திருக்கின்றேன் அந்த காற்றோடு ஒரு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *