உடைந்து போன உள்ளத்திற்கு தொடர் 01

  • 8

தொடர்ந்தேச்சையான கவலைகளால் சுழன்று கொண்டிருக்கிறீர்களா?

துரோகங்களும், நிராகரிப்புக்களும் உங்களை வீழ்த்துகின்றனவா?

தாழ்வு மனப்பான்மையும், அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்ற பயமும் உங்களை ஆட்டிப்படைக்கின்றனவா?

இறந்தகால கசப்பான அனுபவங்களால் ஆர்ப்பரிக்கிறீர்களா?

உதாசீனங்களால் அமைதி இழக்கிறீர்களா?

முடிவுகளை எடுக்க முடியாது தடுமாறுகிறீர்களா?

இறைவன் மீதும் உங்கள் மீதும் நீங்கள் கொண்ட நம்பிக்கை உறுதியானதும், வலிமையானதுமாக இருந்தால் நிச்சயம் இவை அனைத்தும் தோன்றி மறையும் கானல் நீரே.

வாழ்வில் யாராலும் அடைய முடியாத இலக்கு அனைவரையும் திருப்திப்படுத்தல். உலகின் மிகப் பெரிய சிறைச்சாலை அடு்த்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற பயம்.

இந்த எண்ணங்களே ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை (Inferiority Complex) தோன்றுவதன் அடிப்படை. ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சியின் (Personal Development) முட்டுக்கட்டை. அடுத்தவரைத் திருப்திப்படு்த்துவதை நோக்கமாகவும் அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்ற பயத்தை சுமையாகவும் தூக்கிச் செல்பவர்களால் எதனையும் சாதித்திடவும் முடியாது, மகிழ்ச்சியாகவும் இருந்திடவும் முடியாது. இவர்கள் பிறர் மகிழ்ச்சியையும் இவ்வாறான சிந்தனைகளைப் புகுத்துவதன் மூலம் கெடுப்பர்.

இவ்வண்ணம் அடுத்தவர் பார்வைக்கும், பேச்சிற்கும் உங்கள் முகம் மாறும் என்றால் நீங்கள் அணிந்திருப்பது முகமூடி என்பதே உண்மை. முகமூடிகள் எப்போதும் நிரந்தரமல்ல. உங்கள் மனசாட்சிக்கும், இறைவனுக்கும் நேர்மையாக நீங்கள் செயற்படுவது தான் உங்களுக்கு நீங்கள் கொடுக்கும் அங்கீகாரம். அந்த அங்கீகாரத்தை பிறர் கண்களில் தேடாதீர்கள் கிடைக்காமலே தாெலைந்து போவீர்கள்.

தொடரும்….
றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்
வியூகம் வெளியீட்டு மையம்

தொடர்ந்தேச்சையான கவலைகளால் சுழன்று கொண்டிருக்கிறீர்களா? துரோகங்களும், நிராகரிப்புக்களும் உங்களை வீழ்த்துகின்றனவா? தாழ்வு மனப்பான்மையும், அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்ற பயமும் உங்களை ஆட்டிப்படைக்கின்றனவா? இறந்தகால கசப்பான அனுபவங்களால் ஆர்ப்பரிக்கிறீர்களா? உதாசீனங்களால் அமைதி இழக்கிறீர்களா? முடிவுகளை…

தொடர்ந்தேச்சையான கவலைகளால் சுழன்று கொண்டிருக்கிறீர்களா? துரோகங்களும், நிராகரிப்புக்களும் உங்களை வீழ்த்துகின்றனவா? தாழ்வு மனப்பான்மையும், அடுத்தவர் என்ன நினைப்பார்கள் என்ற பயமும் உங்களை ஆட்டிப்படைக்கின்றனவா? இறந்தகால கசப்பான அனுபவங்களால் ஆர்ப்பரிக்கிறீர்களா? உதாசீனங்களால் அமைதி இழக்கிறீர்களா? முடிவுகளை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *