மதிப்பிற்குரிய பெண்மை

  • 6

மரணத் தருவாயிலும் மகனுக்காய்க் கவலைப்படும் அன்பானவளவள்;
மணிமகுடம் சூடிடுனும், கணவனுக்கு மதிப்பளிக்க நினைப்பவளவள்!!

அன்னைக்குச் சிறந்த தோழியவள்!
தம்பி தங்கைக்கு இரண்டாம் அன்னையவள்!!
அப்பாவின் சம்பளம்பெறா ஆலோசகராகரவள்!!
அண்ணா அக்காவின் அன்புத்தங்கையவள்!!
குடும்பத்தினைத் தலை நிமிர்த்தும் தூணவள்!!

இலவசக் கல்வியைப் பெறவும் பல வசைகளைக் கேட்கிறாளவள்!!!
அடுப்பங்கறைக்குளடக்க முயலும் சமூகத்தில் தடைகளைத் தகர்த்தெறிந்து, துறைகளனைத்திலும் நட்சத்திரமாய் மிளிர்கிறாளவள்!!

அவதூறுகள் பல கேட்டும்,
அரக்க கண்களுடையோர் பலரைத் தாண்டியும்
தனை நிரூபிக்கும் வீரப்பெண்ணவள்!!

மாதமேழுநாள் உடலைக்கிழிக்கும் வலியைத்தாங்கும் தேவதையவள்!!
பத்துமாதம் வயிற்றில் சிசுவைத் தாங்கும் பலசாலிப் பசு அவள்

இறைவன் அவளுக்களித்த வரம் “தாய்மை”!!
“அவள்-கள் இன்றேல் இங்கெவரும் இல்லை” என்பதே உண்மை!!

மீட்டர்க்கோல் கொண்டு கடலாழத்தையளப்பதும்,
பதினாறு வரிக்குள் “பெண்மையின் மதிப்பை” அடக்குவதும் ஒன்றே!!

Ifham Aslam
வியூகம் வெளியீட்டு மையம்

மரணத் தருவாயிலும் மகனுக்காய்க் கவலைப்படும் அன்பானவளவள்; மணிமகுடம் சூடிடுனும், கணவனுக்கு மதிப்பளிக்க நினைப்பவளவள்!! அன்னைக்குச் சிறந்த தோழியவள்! தம்பி தங்கைக்கு இரண்டாம் அன்னையவள்!! அப்பாவின் சம்பளம்பெறா ஆலோசகராகரவள்!! அண்ணா அக்காவின் அன்புத்தங்கையவள்!! குடும்பத்தினைத் தலை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *