திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 29

  • 18

நேரம் நகர சுரேஷ் வீட்டினரின் உள்ளங்கள் பதறிப் போயின. “மாப்புள வீட்டினர இன்னமும் காணோம், ஒரு வேள வர மாட்டாங்களோ…” உள்ளம் அங்கலாய்க்க இடைக்கிடை கடிகாரத்தை பார்த்தான் சுந்தர்.

“வந்துட்டாங்கப்பா” வீட்டு வாயிலிலேயே நின்றிருந்த சுரேஷ் தகவலோடு உள்ளே வர, வீட்டினர் சற்று உற்சாகமாயினர். “அவங்க வந்துட்டாங்க” வாணியின் அறைக்குள் தகவல் கடத்தப்பட தன்னை மீண்டும் ஒருமுறை கண்ணாடியில் பார்த்து மெருகூட்டிக் கொண்டாள்.

“தாமதத்துக்கு மன்னிக்கனும், ரோட்டுல சரியான ட்ரபிக்” மாப்பிள்ளையின் அப்பா காரணத்தை சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார். “ஐயோ அதுக்கு என்னா? நம்மளுக்கு தெரியாமலா?” வாய் விரித்து சிரித்துக் கொண்டே வந்தவர்களை வரவேற்றான் சுந்தர்.

“வாங்க வாங்க!” மறுபுறம் ராதாவின் அழைப்பும் பெரிதாய் தானிருந்தது. வந்தவர்கள் அமர்ந்து கொள்ள முதலில் குளிர்பானம் வழங்கப்பட்டது. ஆண் தரப்பினர் தங்களுக்குள் ஏதேதோ நாட்டு நடப்புக்களைக் கதைத்துக் கொள்ள, மாப்பிள்ளை பொடியனின் உள்ளம் மட்டும் உள்ளே இருப்பவளை காண ஏங்கிக் கொண்டிருந்தது.

“சரி பொண்ண பார்ப்போமா?” மாப்பிள்ளையின் உம்மா விடயத்துக்கு வர, வாணியிருந்த அறைக்குள் மாப்பிள்ளை உட்பட எல்லோருமாகக் கூட்டிச் செல்லப்பட்டனர்.

“வணக்கம் மா” தன்மையாய் பேசிக் கொண்டு முன்னால் வந்த மாப்பிள்ளையின் தாயை இருந்த ஆசனத்தை விட்டு எழுந்து வரவேற்றாள் வாணி.

“நீங்க இரியுங்க” வந்தவர்கள் சொல்ல, நாணத்தோடு அமர்ந்து கொண்டாள். மாப்பிள்ளை வீட்டார் அவளை உச்சந் தலை தொட்டு கண்காட்சி பார்ப்பது போல் பார்க்கத் துவங்கி விட்டனர். இடைக்கிடை சின்னச் சின்ன கேள்விகளும் தொடுக்கப்பட, சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள் வாணி.

பிறகு இனிப்புப் பண்டங்கள் பறிமாறி வந்தவர்கள் திருப்தி காணும் வரை உபசாரம் அகோரமாயிருந்தது.

“சரி அப்போ நாங்க போய் வாரோம், தரகர் விஷயத்த சொல்லுவாரு” விடைபெறத் தயாராகி வெளியாக, மாப்பிள்ளை பொடியனும் எல்லோரிடமும் சரளமாக பேசி விட்டு விடை பெற்றான்.

அவர்கள் செல்லும் வரை வாயிலில் காத்த வாணி வீட்டினர் “நல்ல பொடியன் ஒன்னு, எப்புடி சரி ஓகே ஆவிட்டா சந்தோஷம்” தங்களுக்குள் கதைத்துக் கொள்ள அன்றிரவே தரகரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் சுந்தர் இவ்விடயத்தை கனவிலும் எதிர்பார்க்கவில்லை…

“என்ன அப்பா

அது அது அதுவந்து, அதுவந்து…

சொல்லுங்கப்பா அவங்களுக்கு ஓகேயாமா?

அது என்னன்டா..

ஐயோ சொல்லுங்கப்பா” சுரேஷ் தந்தையை அதட்ட, காதுகளை இருக மூடிக் கொண்டாள் வாணி..

கதை தொடரும்…
Ruwaiza Razik
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

நேரம் நகர சுரேஷ் வீட்டினரின் உள்ளங்கள் பதறிப் போயின. “மாப்புள வீட்டினர இன்னமும் காணோம், ஒரு வேள வர மாட்டாங்களோ…” உள்ளம் அங்கலாய்க்க இடைக்கிடை கடிகாரத்தை பார்த்தான் சுந்தர். “வந்துட்டாங்கப்பா” வீட்டு வாயிலிலேயே நின்றிருந்த…

நேரம் நகர சுரேஷ் வீட்டினரின் உள்ளங்கள் பதறிப் போயின. “மாப்புள வீட்டினர இன்னமும் காணோம், ஒரு வேள வர மாட்டாங்களோ…” உள்ளம் அங்கலாய்க்க இடைக்கிடை கடிகாரத்தை பார்த்தான் சுந்தர். “வந்துட்டாங்கப்பா” வீட்டு வாயிலிலேயே நின்றிருந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *