நிழலும் உன்னிடம் சரண்!

நீண்டு செல்லும் ரயிலும்
எங்கோ ஓரிடத்தில் ஓடி முடிகிறது!
ஓங்கி உயரும் தென்னையும்
என்றோ ஒரு நாள் சாய்கிறது!
ஆல் கடலில் இருந்து வரும்
அலை கூட தரையோடு மோதி
அமைதி பெறுகிறது!

நீர்க் குமிழி வாழ்வில்
வானவில்லின் வாழ்க்கை!
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
மிச்சம் மீதம் ஏதுமில்லை!

அன்பாய்ப் பழகிய உறவுகள்
துன்பமாய் மாறிடும்!
ஆணவம் கொண்டால்
அவஸ்தையாய் மாறிவிடும்!
ஆர்வம் கொண்டால்
தாகம் தீர்ந்துவிடும்!
தீராத தாகத்தில்
மோகம் மூண்டு விடும்!

மதி கெட்டுப் போனது
மானிட வாழ்க்கை!
விதி துரத்தும் சதியும் துரத்தும்!
ஏன் நாம் ஓடிக் கொண்டிருந்தால்
எம் நிழல் கூட துரத்தும்
எதிர்த்து நில் ஓரிடத்தில் நில்!
எதிர்த்த உன் நிழலும்
உன் கால்களில் சரணடையும்!

எஸ் ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS – II
பஸ்யால

Leave a Reply