எண்ணங்கள் உயர்வு சேர்க்கும்

பாம்புகளுக்கு இல்லை
மாண்புகள் என்றும்!
நதியில் குளித்தாலும்
மலையேறிக் குதித்தாலும்
பாம்புகள் பாம்புகளே!

அதன் நாவில் தோய்ந்திருக்கும்
விஷம் இறந்தாலும் தீர்வதில்லை!
இருந்தாலும் குறைவதில்லை!
பாம்பு என்றால் படையே நடுங்கும்

ஆனால் அந்த பாம்பையே
நடுங்க வைக்கும் ஆற்றல் பலரிடம்
உயரப் பறக்கும் கழுகுகளாய்!
நிலத்தில் ஓடும் கீறிகளாய்!

வல்லவனுக்கு வல்லவன்
வையகத்தில் உண்டு!
நிமிர்ந்து நிற்பது தப்பில்லை!
திமிர் பிடித்து நிற்பது தப்பே!
இது பலருக்கும் நினைவில் இல்லை!

நீ எதைப் பேசுகின்றாயோ
எதைச் செய்கின்றாயோ
அது நீ யார் என்பதை
உலகுக்கு பறைசாற்றும்!

சிலர் கலை வளர்க்கும் பாணியில்
களைகள் வளர்க்கின்றனர்!
பலர் கலை வளர்க்கும் பணியோடு
கல்விக் கலையும் வளர்க்கின்றனர்!

இதில் உயர்வு தாழ்வு எது என்பதில்
உயர் எண்ணங்கள் தான் உயர்வு சேர்க்கும்!

எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா
SLPS – II
பஸ்யால

Leave a Reply