இது பாடசாலைகளிடம் பிள்ளைகளை ஒப்படைக்கும் காலம்

  • 17

எமது சமூகம் பாடசாலைகளை தெரிவு செய்வதில் உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்புவதில் பிள்ளைகளின் கல்வியில் எதிர்காலத்தில் ஆளுமை விருத்தியில் சமூக மாற்றத்தில் எந்தளவு கரிசனை காட்டுகிறார்கள்??

பெரும்பாலும் Single parent(s) வடிவத்தில் தான் பாடசாலைக்கு அறிமுகமாகிறார்கள். உரிய கூட்டங்களுக்கு சந்திப்புக்களுக்கு வருகை தருவது மிகவுமே குறைவு. அதிலும் தாய்மார்கள்தான் அதிகம் பிரசன்னமாகின்றனர்.

வகுப்பாசிரியரோடோ பாடசாலை சமூகத்தோடோ மிகவும் அரிதான அபூர்வமானஅத்திபூத்தாற் போன்ற தொடர்பு. எத்தனையாம் வகுப்பு /பிரிவு என்பது தெரியாது. பிள்ளையின் வகுப்புக்கூட எங்கு உள்ளதென்றும் தெரியாது. கலைத்திட்டமோ பாடத்திட்டமோ பாடப்பரப்போ தெரியாது.

ஒப்பீட்டளவில் தற்போதுள்ள பெற்றோர் தலைமுறையினர் இருவரோ இருவரில் ஒருவரோ OL/AL சரி கற்றவர்கள்

எனவே அறிவு வெடித்து பிரவாகித்துப்பாயும் யுகத்தில் அனைத்தும் அறிவை தளமாக கொண்டியங்கும் யுகத்தில் பாடசாலையில் பாரஞ்சாட்டப்படும் பிள்ளைகளின் தரமான கல்வி குறித்து ஸீரியஸாகவே சிந்திக்கவேண்டியுள்ளது.

பாடசாலை என்பது அறிஞர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையல்ல அது அரச அனுசரனையில் அல்லது தனியார் நிர்வாகத்தில் அதிபர், ஆசிரியர்கள், பா.அ.ச. முத்தரப்புடன் பெற்றோரும் சமூகமும் சமாந்தரமாக இணைந்து செல்லும் சமூக நிறுவனம் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம்.

இப்படியே சிந்திக்காமல் பாடசாலைக்கும் நிர்வாகத்துக்கும் எந்த அடிப்படையும் நியாயமும் அடி நுனியும் இன்றி குற்றம் சாட்டி விமர்சனம் செய்து போனால் உங்கள் பிள்ளையின் கல்விக்கு குறைந்த பட்சம் எதனை செய்தீர்கள் என்று எதிர்காலம் வினாத்தொடுக்கும். இல்லாவிட்டால் அவர்களே கேட்பார்கள்.

M.M.A. Bisthamy
BA (pera)
PGDE (OUSL)
வியூகம் வெளியீட்டு மையம்

எமது சமூகம் பாடசாலைகளை தெரிவு செய்வதில் உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்புவதில் பிள்ளைகளின் கல்வியில் எதிர்காலத்தில் ஆளுமை விருத்தியில் சமூக மாற்றத்தில் எந்தளவு கரிசனை காட்டுகிறார்கள்?? பெரும்பாலும் Single parent(s) வடிவத்தில் தான் பாடசாலைக்கு…

எமது சமூகம் பாடசாலைகளை தெரிவு செய்வதில் உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்புவதில் பிள்ளைகளின் கல்வியில் எதிர்காலத்தில் ஆளுமை விருத்தியில் சமூக மாற்றத்தில் எந்தளவு கரிசனை காட்டுகிறார்கள்?? பெரும்பாலும் Single parent(s) வடிவத்தில் தான் பாடசாலைக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *