ஜனாதிபதித் தேர்தலில் நாம் யாரை ஆதரிப்பது?

  • 11

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுபான்மை மக்களின் உரிமைகளை தட்டிக் கழித்து வந்துள்ளது நாம் அறிந்த உண்மை. அதேநேரம் தமது ஆதரவு பேரினவாதக் கும்பலை பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் உடமைகளை சேதப்படுத்தி உயிர்களை பறித்த துர்பாக்கிய நிலையை எம்மால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நாம் மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இம்முறை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நபருக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களே இருக்கும். ஏனெனில் அரசியல் அமைப்பு சட்டத்தில் 19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நாம் கடந்த காலங்களில் அவதானிக்க கூடியதாக இருந்தது. ஆனால் நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்பட வில்லை.

கடந்த கால நிகழ்வுகளை அவதானிக்கின்றபோது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தேர்தல்களில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியாக காணப்பட்டது. எமது முஸ்லிம் மக்களின் வாக்குளுக்கு பெறுமானம் காணப்பட்டது. இதனால் வேட்பாளர்கள் எமது உரிமைகள், தேவைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தி சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார்கள். பின்னர் வாக்குறுதிகளை மீறி நடந்து எமது எதிர்பார்ப்புகளை வீணடித்து ஏமாற்றியது சோக வரலாறு.

இந்த தேர்தல் சற்று வித்தியாசமான கோணத்தில் அவதானிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
மும்முனைப் போட்டி

  1. முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சகாக்களும் கோட்டாபயவை ஜனாதிபதி வேற்பாளராக நிறுத்தி வெற்றிபெற்றே ஆகவேண்டிய நிர்பந்தத்தில்
  2. ஐக்கிய தேசிய கட்சி உட்கட்சிப் பூசலுக்கு மத்தியில் வாழ்வா சாவா என்ற பேராட்டம் யார் வேட்பாளர் என்பதில் மும்முனை போட்டி சஜித், ரணில், கரு.
  3. இலங்கை அரசியல் வரலாற்றில் ஊழலற்ற அரசியல் கலாசாரத்தை உருவாக்க JVP, இடதுசாரிகள் கட்சிகள், புத்திஜீவிகள் சங்கம், சிவில் சமூக அமைப்புகள் சேர்ந்து இம்முறை ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி உள்ளனர். அவர் அநுரகுமார திசாநாயக்க (AKD)
  4. *ஜனாபதி தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு திரிசங்கு நிலை
  5. *முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் போட்டியிடல்

இந்த நிலையில் இந்த தேர்தல் எங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்றால் இந்த தேர்தலை வெற்றி பெறும் கூட்டணியே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலை வெற்றி பெறும் என்கிற ஊகம் ஆகும். இலங்கை தேர்தல் வரலாறு இவ்வாறே உள்ளது. இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில் சிறுபான்மை முஸ்லிம்களாகிய நாம் யாரை ஆதரிப்பது என்ற கேள்வி எழுகின்றது.

இத்துடன் இந்த கட்டுரையை நண்பர்களுக்கு விடுகின்றேன் உங்களுடைய ஆக்க பூர்வமான கருத்துக்களை எழுதுங்கள்.
நாச்சியாதீவு
M.சஹ்ரின அஹமட்
வியூகம் வெளியீட்டு மையம்

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுபான்மை மக்களின் உரிமைகளை தட்டிக் கழித்து வந்துள்ளது நாம் அறிந்த உண்மை. அதேநேரம் தமது ஆதரவு பேரினவாதக் கும்பலை பயன்படுத்தி சிறுபான்மை மக்களின்…

தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எல்லா ஆட்சியாளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறுபான்மை மக்களின் உரிமைகளை தட்டிக் கழித்து வந்துள்ளது நாம் அறிந்த உண்மை. அதேநேரம் தமது ஆதரவு பேரினவாதக் கும்பலை பயன்படுத்தி சிறுபான்மை மக்களின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *