சமகால கல்வி நிலையை உற்று நோக்கி………

  • 10

காலத்துக்கு பொருத்தமானதும் பொருத்தமேயற்றதுமான நியாயப்பாடுகள் குன்றிய சிலவும் நவீன கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதை முற்போக்கான கல்வியியலாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பதையும் ஒரே எடுப்பில் மறுதலிக்க முடியாது. குறிப்பாக சிறுவர் கல்வி மற்றும் கலைத்திட்டம் இத்தகைய பன்மைத்துவ அணுகுமுறைகளை வேண்டிநிற்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்களை ஒன்றுமேயறியாத அப்பாவி பாப்பாக்களாக தகவமைக்கமுனைவது முறைகேடானது. இன்றைய சிறார்கள் முன்னைய சிறார்கள் போலன்றி மிகவுமே புத்திசாலிகளாக திறன்வாய்ந்தவர்களாக சிந்திப்பவர்களாக வினாத்தொடுப்பவர்களாக உள்ளனர் அவர்களை பிரம்பால், ஏச்சால், பேச்சால், அதட்டலால், மிரட்டலால், பயமுறுத்தலால், அதிகாரத்தால், அடக்கமுனைவது ஆபத்தானது.

இன்றைய கலைத்திட்டங்கள் கூட  அழுத்தங்களையும் அச்சத்தையும் பீதியையும் காரணங்காட்டி பயமுறுத்தி அவர்களை மென்மேலும் ஒழுங்கமைப்புக்குள் உள்வாங்க பழக்கப்படுத்த முனைகின்றனவே ஒழிய அவர்களது உள உடல் வயதைத்தாண்டிய சுமைகளிலிருந்து உளப்பயங்களிலிருந்து விடுவித்து உதவ  எத்தனிப்பதில்லை. இது நவீன கனதியான கலைத்திட்டத்தின் பேராபத்தான கூறாகும்.

இன்றைய நவீன கல்வியும் கலைத்திட்டமும் அறிவை பெருந்தொகை பணங்கொடுத்தோ இலவசமாகவோ பெற்று நுகர்கின்ற தலைமுறையை உருவாக்க அத்திவாரமிடுகின்றனரே ஒழிய அவர்களை அந்த அறிவை நுகர்வதோடு சிந்திக்கவும் ஆய்வு ஆராய்ச்சி செய்யவும் பகுப்பாய்வுக்கு உற்படுத்திவிமர்சித்து அறிவெழுச்சிக்கு வித்திட்டு அறிவுப்பிரவாகத்துக்கு பங்களிக்கவும் வழியமைப்பதேயில்லை.

நெட்டுறு  (byheart) செய்து பரீட்சைகளில் மீளமீள வாந்தியெடுத்து விடைத்தாளில் துப்பிக்கொட்டி குப்பை நிறைத்து அதிகூடிய புள்ளி பெறும் நல்லபிள்ளைகள் என்ற அடைமொழிக்குள் கலைத்திட்டம் அடகுவைக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம் பண்பாடு நாகரீகம் மனிதாபிமானம் கலாசாரம் விழுமியங்கள் பாரம்பரியம் சமயம் எதுவும் இன்று மேம்பட்டு ஓங்கிவளர கலைத்திட்டமும் பரீட்சையும் உலக  ஒழுங்கும் தொழிலுலகமும் இடம்தருவதில்லை.

இப்படியாக கலைத்திட்டத்தில் பரீட்சை முறையில் பட்டை பட்டையாக கழற்றி தோலுரிக்க வேண்டிய பல  அம்சங்கள் உள்ளன. கல்வியியலாளர்களே! இது எனது மிகவும் குறைந்த வாசிப்புக்கும் 8வருட ஆசிரிய பணிக்கும் இடையில் அவதானித்தவை. இதனைவிடவும் சிந்திக்க வேண்டிய சிந்திக்க வைக்க வேண்டிய கடப்பாடு என்னையும் விட  உங்களைப்போன்ற பெருந்தகைகளையே சாரும்.

M.M.A. Bisthamy
BA (pera)
PGDE (OUSL)
வியூகம் வெளியீட்டு மையம்

காலத்துக்கு பொருத்தமானதும் பொருத்தமேயற்றதுமான நியாயப்பாடுகள் குன்றிய சிலவும் நவீன கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதை முற்போக்கான கல்வியியலாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பதையும் ஒரே எடுப்பில் மறுதலிக்க முடியாது. குறிப்பாக சிறுவர் கல்வி மற்றும் கலைத்திட்டம் இத்தகைய பன்மைத்துவ அணுகுமுறைகளை வேண்டிநிற்பது…

காலத்துக்கு பொருத்தமானதும் பொருத்தமேயற்றதுமான நியாயப்பாடுகள் குன்றிய சிலவும் நவீன கலைத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதை முற்போக்கான கல்வியியலாய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருப்பதையும் ஒரே எடுப்பில் மறுதலிக்க முடியாது. குறிப்பாக சிறுவர் கல்வி மற்றும் கலைத்திட்டம் இத்தகைய பன்மைத்துவ அணுகுமுறைகளை வேண்டிநிற்பது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *