அச்சுறுத்தும் இனவாத சக்திகள்  

  • 14

vidivelli Administrator

தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன் மற்­று­மொரு கடை சேதத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள சம்பவம் கவலைக்குரியதாகும்.

இச் சம்பவம் தொடர்பாக அக்­கு­ரஸ்ஸ பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனினும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
போர்வை பகு­தியில் முஸ்­லிம்­களும் பெரும்­பான்மை இன சிங்­க­ள­வர்­களும் நீண்ட கால­மாக எது­வித பிரச்­சி­னை­யு­மின்றி ஒற்­று­மை­யா­கவே வாழ்­கி­றார்கள். எனினும் இப்­ப­கு­தியில் ஒற்­று­மை­யுடன் வாழும் இரு சமூ­கத்­துக்கும் இடையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்கான திட்­ட­மிட்ட சதியே இது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இத்­தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­களைத் தேடிப்­பி­டித்து சட்­டத்தின் முன் நிறுத்த வேண்­டு­மென்றே இப்­ப­குதி பௌத்த விகாரைகளின் தலைமை பிக்குகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் காலி கோட்டையில் இராணுவ முகாம் வளாகத்திலுள்ள ஸியாரத்தின் மதில்களும் இனவாதிகளால் சேதமாக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் திட்டமிட்ட இனவாத நடவடிக்கையே என அப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றன.
இவ்வாறு தென் மாகாணத்தில் முஸ்லிம்களின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
இதற்கிடையில் அண்மைக் காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்தைக் குறி வைத்து இனவாத சக்திகள் திட்டமிட்ட பிரசாரங்களை முன்கொண்டு செல்கின்றன.
குறிப்பாக சித்திரைப் பண்டிகைக் காலத்தில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என சிங்கள மக்கள் மத்தியில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் காரணமாக மத்திய மாகாணத்தில் இம் முறை முஸ்லிம்களின் வியாபாரத்தில் சரிவு ஏற்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே தெற்கிலும் முஸ்லிம்களின் வியாபாரத்தை முடக்குவதற்காகவும் அச்சுறுத்தும் நோக்கிலும் இவ்வாறானதொரு தாக்குதல் போர்வை நகரில் முன்னெடுக்கப்பட்டிருக்கக் கூடும்.
எனவேதான் பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்கள் இதன் பின்னாலுள்ள சக்திகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.  இன்றேல் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெறக் கூடும்.  அது இந்த நாட்டின் இன நல்லுறவுக்கு பெரும் குந்தகத்தையே ஏற்படுத்தும்.
இறக்காமம் மாணிக்கமடுவில் பௌத்த பிக்குகள் முஸ்லிம்களின் காணியில் விகாரை அமைப்பதற்கு நேற்றைய தினம் மேற்கொண்ட முயற்சி மிகவும் பாரதூரமான மனித உரிமை மீறலாகும்.
ஏற்கனவே சிலை வைத்த விவகார வழக்கு முடிவதற்குள் இன்று விகாரையையே நிர்மாணிப்பதற்கு பிக்குகள் முனைகிறார்கள் என்றால் அவர்களுக்குப் பின்னாலுள்ள சக்தி எது எனும் கேள்வி எழுகிறது. நிச்சயமாக இவர்களின் பின்னணியில் அரசியல் சக்திகள் இருக்கின்றன என்பது தெளிவானதாகும்.
இவ்வாறான ஆக்கிரமிப்பு மற்றும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் மௌனமாக இருக்கும் வரை இனவாதிகளின் கை ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

vidivelli Administrator தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன்…

vidivelli Administrator தென் மாகா­ணத்தைச் சேர்ந்த கொட­பிட்­டிய, போர்வை நக­ரி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந் தெரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­த­லினால் மூன்று கடைகள் தீப்­பற்றி எரிந்­துள்­ள­துடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *