காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 69

  • 6

“ஆஹ்..” என்று கத்தி கொண்டே உள்ளே வந்த விக்டர் மூலையில் நொறுங்கிப்போய் கிடந்த வோட்கா பாட்டிலை பார்த்து.

“ஐயையோ… யாரு இந்த அக்கிரமத்தை பண்ணது. நான் எவ்வளவு ஆசை ஆசையா வாங்கி வெச்ச சரக்கு”

என்று அந்த இடத்தில் போய் நின்று கத்தினான். இவர்கள் இருவரும் பேய் அடித்தது போலவே தரையில் கிடந்து அவனையே பார்த்து கொண்டிருக்க இந்த பக்கம் திரும்பிய விக்டர்

“அடப்பாவிகளா… உங்களுக்கு ரொமான்ஸ் பண்ணுறதுக்கு வேற இடமே இல்லியா… அநியாயமாக என்னோட வோட்கா பாட்டிலை உடைச்சு விளையாடி இருக்கீங்க.”

என்றதும். அந்த பேசச்சு இடைவெளியில் கேகே தனக்கும் ஜெனிக்கும் இடையில் மாட்டி இருந்த ச்சைனை எடுத்து அவளை விடுவித்தான். இருவரும் எழும்பி நின்றனர்.

“அது….. ச. சாரி… கில்கமேஷ் அதை குடிக்க போய் இருந்தான்.” என விட்டு விட்டு பேசினாள் ஜெனி. ஒன்றும் புரியாமல் அவளை பார்த்த கில்கமேஷ்.

“என்ன அது வாட்டர் தானே… அதுல என்ன இருக்கு.” என்று கேட்டான்.

“ஹ்… அது வாட்டர் இல்ல… வோட்கா… ஃபாரின் சரக்குடா.”

என்று விக்டர் கவலையுடன் சொன்னான். அவர்கள் இருவரும் அவனிடம் மன்னிப்பு கேட்டனர்..

“சரி சரி..மன்னிச்சி விட்டுர்றேன்.” என்றவன் அந்த இடத்தை விட்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.

“ரெண்டு பேரும்  வாங்க” என அழைத்து அவர்கள் இருவரையும் உட்கார வைத்தான்.

“இதுதான் உங்க நியூ. ஐடி… லீஸா அண்ட் மைக்கல். ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்து இருக்கேன். இல்லீகல்ல சோ பீ கெயார் ஃபுல்.”

“நாங்க இதவெச்சு சுதந்திரமா நடமாடலாம் இல்லே..?” என்று கேட்டான் கேகே.

“ஆஹ்… கண்டிப்பா… நீங்க போட்டிருக்குற வேஷம் கலையாமல் பார்த்துகொங்க..”என்றான்.

“நான் கேட்டதெல்லாம் எப்போ கிடைக்கும் விக்கி..” என்று ஜெனி கேட்டாள்.

“ஓஹ்… அது மேப் அண்ட்.. மத்த விஷயங்கள் எல்லாம் நாளைக்கி காலைல கிடைக்கும். இப்போ இதோ பீட்ஸா கொண்டு வந்திருக்கேன். சாப்பிட்டுட்டு தூங்குங்க.” என்றான்.

“ரொம்ப தாங்ஸ்” என்றாள் ஜெனி.

“அதெல்லாம் இருக்கட்டும்… ஹா… முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். உங்க மிஸ்ஸிங் கேஸ் நியூஸ்ல வந்திடுச்சு…”என்றான்.

“என்ன…??”

“ஹ்ம்ம்…”

“அப்படின்னா மித்ரத் பார்த்து இருப்பானே… அவன் பார்த்தா சிக்கல் தான்…”

“கரெக்ட்… பட்… இதுவும் ஒருவகையில் நல்லதுக்கு தான்… என்கிடு  இவனை தேடிக்கிட்டு ஊர் சுத்தவும் வாய்ப்பு இருக்கு.” என்றான் விக்கி.

“ஹா… அது சரிதான்.” என்றபடியே தன் பங்கை சாப்பிட்டு முடித்தான் கேகே.

“எதுவா இருந்தாலும் நாளை காலைல பேசிக்குவோம். நான் தூங்கனும். என் ரூம் எது”  ன்னு கேட்டான் கேகே.

“இது ஜெனியோட ரூம்… அத. நாம ரெண்டு பேரும் சேர்ந்து  தூங்குற ரூம்” என்று சொல்ல கேகே அவன் அறைக்கு சென்றான்.

“குட் நைட் காய்ஸ்…”

“குட் நைட்.”

அவன் உள்ளே போய் கதவை அடைத்து கொண்டதும் ஜெனி பார்த்து கொண்டே இருந்தாள். அவள் பீட்ஸா சாப்பிடும் அழகை பார்த்த விக்கி. டிடானியா சொன்னதை எண்ணி பார்த்தான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“ஆஹ்..” என்று கத்தி கொண்டே உள்ளே வந்த விக்டர் மூலையில் நொறுங்கிப்போய் கிடந்த வோட்கா பாட்டிலை பார்த்து. “ஐயையோ… யாரு இந்த அக்கிரமத்தை பண்ணது. நான் எவ்வளவு ஆசை ஆசையா வாங்கி வெச்ச சரக்கு”…

“ஆஹ்..” என்று கத்தி கொண்டே உள்ளே வந்த விக்டர் மூலையில் நொறுங்கிப்போய் கிடந்த வோட்கா பாட்டிலை பார்த்து. “ஐயையோ… யாரு இந்த அக்கிரமத்தை பண்ணது. நான் எவ்வளவு ஆசை ஆசையா வாங்கி வெச்ச சரக்கு”…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *