காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 70

  • 6

டிடானியாவை காரில் ஏற்றி சென்றபோது நடந்தவற்றை விக்டர் நினைவு கூர்ந்தான்.

“டிடானியா!,..”

“என்ன?”

“உன்கிட்ட ஒண்ணு சொல்லுறேன்… தப்பா எடுத்துக்காதே”

“என்னடா புதிர் போடுறே?”

“அதில்ல… நம்ம ஜெனி இருக்காளே…. அவளை நான் விரும்புறேன்னு நினைக்குறேன். இந்த ப்ரோப்ளம் எல்லாம் முடிஞ்சதும் அவகிட்ட இதை சொல்லலாமுன்னு இருக்கேன்.”

“என்ன?”என்று அவள் அதிர்ச்சியோட கேட்க வண்டியை சடேன் பிரேக் போட்டு நிறுத்தினான் விக்டர்.

“என்னாச்சு.. ஏன்..?”

“விக்டர்… ரொம்ப ஸாரிடா… இதை எப்படி உன்கிட்ட.”

“எதுக்காக நீ இப்படி தயங்குறே?”

“அது வந்து… இப்பவே இதை நான் சொல்லல என்னா பின்னாடி நீ தான் ரொம்ப வருத்தப்படுவே…” என்றவள் எச்சிலை விழுங்கி கொண்டு,

“ஜெனிபர் கில்கமேஷை தான் விரும்புறாள்…”என்றாள்.

“என்ன?” என்று ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தவன். அவன் மனதை அவனே சமாதானம் செய்து கொண்டு,

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறே?” என்று கேட்டான்.

மீரா என்கிட்ட இதை பற்றி சொல்லி இருக்காள். ஒருத்தருக்கு ஒருத்தர் இன்னும் வெளிப்படையாக சொல்லல என்றாலும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள் என்று அவ என்கிட்ட சொன்னாள். ஸாரி உன்னை இது ரொம்ப வருத்தப்பட வைக்கும் என்னு தெரியும். இருந்தாலும் சொல்லி தானே ஆகணும்.

என்று அவனை ஆறுதல் படுத்தும் எண்ணத்துடன் தோளில் கை வைத்தாள். அவன் புரிந்து கொண்டான். என்பதை அவளும் புரிந்து கொண்டாள். இதெல்லாம் நினைத்து விட்டு பிட்சாவை சாப்பிட்டு முடித்தார்கள் இருவரும் அவன் சொன்ன அறையில் தூங்குவதற்காக சென்றாள் ஜெனி அவனும் சென்றான்.

மறுநாள் காலையில்……

“ஜெனி…. நீ கேட்ட எல்லா விஷயமும் இதுல இருக்கு வேறே என்னென்ன வேணுமோ கேளு முடிஞ்ச அளவு  நான் ஹெல்ப் பண்ணுறேன். அண்ட் இப்போ காலேஜுக்கு போறேன் சோ, ஜாக்கிரதையா இருங்க”

என்றவன் கார் சாவியை கில்கமேஷ் கிட்ட கொடுத்து,

“வெளில என்னோட கார் இருக்கு… எங்கேயும் போகணும் னா அதுல போங்க. சீ யூ சூன்”

என்றவன் அங்கிருந்து புறப்பட்டான். அதன்பின்னர் ஜெனியும் கில்கமேஷும் சேர்ந்து மித்ரத் வீட்டுக்கு செல்லும் வழி அதோட அந்த ஏரியா பக்கம் இருக்கற  கேமரா புட்டெஜ் எல்லாம் ஆய்வு செய்தார்கள்.

***************************

செய்தியில் இவர்கள் இருவரையும் காணவில்லை என்றதும் அதை பார்த்து கொண்டிருந்த என்கிடு கையில் இருந்த ரிமோட்டால் கில்கமேஷுக்கு இருந்தான். கடும் கோபமாக காணப்பட்டான்.

“ஆத்திரப்படாதே என்கிடு, அவன் இங்க தான் எங்கேயோ சுத்திக்கிட்டு இருக்கான்னு தெரிஞ்சிடுச்சு, எப்படியும் உன்னை தேடிக்கிட்டு கொல்ல அவன் வரலாம். அதனால நீ எங்கே போறதா இருந்தாலும் ஜாக்கிரதையா இரு, அதோட அந்த பொண்ணு பார்தல்லே அவளும் அவனோட ஆளுதான் அவகிட்டயும் ஜாக்கிரதையா இரு.”

என்று என்கிடுவை உசுப்பேத்தினான்.

“அவன் மட்டும் என் கண்ணு முன்னாடி வரட்டும் அன்னிக்கி தான் அவன் சாவு.” என்றபடி சோபா முன்னாடி இருந்த கண்ணாடி மேசையில் தட்ட அது நொறுங்கி விழுந்தது.

“கில்கமேஷ்  உன்னை அழிக்க வரெண்டா…” என்று கத்த மறுபுறம் கில்கமேஷ்,

“என்கிடு.. உன்னை காப்பாத்த நான் வரெண்டா…” என்று சொல்லிக்கொண்டான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

டிடானியாவை காரில் ஏற்றி சென்றபோது நடந்தவற்றை விக்டர் நினைவு கூர்ந்தான். “டிடானியா!,..” “என்ன?” “உன்கிட்ட ஒண்ணு சொல்லுறேன்… தப்பா எடுத்துக்காதே” “என்னடா புதிர் போடுறே?” “அதில்ல… நம்ம ஜெனி இருக்காளே…. அவளை நான் விரும்புறேன்னு…

டிடானியாவை காரில் ஏற்றி சென்றபோது நடந்தவற்றை விக்டர் நினைவு கூர்ந்தான். “டிடானியா!,..” “என்ன?” “உன்கிட்ட ஒண்ணு சொல்லுறேன்… தப்பா எடுத்துக்காதே” “என்னடா புதிர் போடுறே?” “அதில்ல… நம்ம ஜெனி இருக்காளே…. அவளை நான் விரும்புறேன்னு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *