எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 3

  • 12

ஆம் அது ஒரு அடர்ந்த காடுதான். ஆனாலும் அழகு வனப்பு நிறைந்து. நிசாத்தின் கார் நிற்கவில்லை. நிசாத்தான் கரை நிற்பாட்டினான். அதே முந்தானை அணிந்த அதே முகம் மறைத்த அதே பெண் அந்த அடர்ந்த காட்டுக்குள் ஒரு மாய தோற்றம். சற்று காரை விட்டு இறங்கி பார்த்தான் ஒரு சில பெண்களோடு விறகு அடுக்கிக் கொண்டு இருந்தாள். என்ன இன்னும் அவனால் முகம் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவளின் ஒழுக்கம் அவனை இன்னும் கவர்ந்தது. அவனை அறியாமல் பார்த்து கொண்டு இருந்தான். திடீர் என ஒரு சத்தம்.

டேய் நிசாத் பாவம் பண்ணாதே உனக்கு ஹலால் ஆகாத பெண்ணை ரசிப்பது பாவம் இல்லையா? என்று கேட்டு மறைந்தது மாய சத்தமாய் அப்போது தான் உணர்ந்தான் அது அவனின் மன சாட்சியின் சத்தம் என்று

ச்சே…. ஏன் இப்படி ஆகிடன் என்று பேசி கொண்டு காரை ஓட்ட ஆரம்பித்தான். ஆனால் அந்த கார் நகரவதாய் தான் அவனுக்கு தோன்றியது. தன்னை ஒரு நிலைப் படுத்திக்கொண்டு ஆபிசை நோக்கி புறப்பட்டான்.

************************

நிசாத் வேலை முடித்து வீட்டுக்கு திரும்பினான்.  வீடு பூட்டப்பட்டு இருந்தது. வாசலில் நின்று கொண்டு சாராவுக்கு அழைப்பை ஏற்படுத்தினான்.

“ரிங் ரிங் ….. அஸ்ஸலாமு அலைக்கும் உம்மா எங்க இருக்கீங்க.”

“வா அலைக்குமுஸல்லாம் மகன் ஆஹ் நான் இன்னா வந்துட்டு இருக்கன் மகன் பக்கதத்து தெருவால.”

“நான் வாசல்ல நிற்கன் மா…”

“ஆஹ் துறப்பு ஜன்னல் அடிய இருக்கு எடுங்க மகன்.”

“ஆஹ் அதை சொல்ல தானே முதல்ல… சரி வைகன் வந்து சேருங்க”

என கோபமாக கட் பண்ணினான். அவனும் வாஷ் பண்ணி சாப்பிட்டு சோபாவில் அமர சாராவும் சித்தி அண்டியும் வந்து சேர்ந்தார்கள்.

“பாஹ்… என்ன வெயில் என்ன வெயில்…”

“ஓ ராத்தா… சூரியன் தலைக்கு மேல போல இருக்கு…”

என்று சொல்லி கொண்டு இருவரும் சோபாவில் அமர்ந்தார்கள். மேசையின் மேல் இருந்த  தண்ணீரை இருவரும் அருந்தி விட்டு வந்ததும் வராததுமாக கதை சில்லறை காசு மாதிரி கல கலத்தது. தாங்கி கொள்ள முடியாமல்.

“உம்மா எப்டி இடம் நல்லமா பெரிசா ஸீன் போடு போனிங்க என்ன விளக்கம்.”

சாராவும் சித்தியும் முகத்தை கருவாடு திருடிய பூனை மாதிரி முழித்துக்கொண்டு இருக்கையில் மெல்ல சாரா கதையினை ஆரம்பித்தார்.

“ஆஹ் ஓ மகன் பொண்ணு ஓகே… குடும்பம் ஓகே… ஆனா….”

“என்ன ஆனா மானா… மா… இல்ல பொண்ணு வாக்கா இல்லடா.. கொஞ்சம் கலர் கொறையே…”

“ஆஹ் அப்டியா. அப்போ என்ன பச்ச கலர் அடிச்சா போச்சு…”

“டேய்…..”

“ஆஹ் மேலே சொல்லுங்க… மூக்கு கொஞ்சம் சப்ப.. சய்னா காரிட மூக்கு மாதிரி.. ஆஹ் அப்போ பிளாஸ்டிக் சேஜரி பண்ணினா சரிதானே மா”

“டேய் நிசாத்து கொஞ்சம் உம்மாவ பேச விடு டா….”

“ம்ஹூம்….. சொல்லுங்க..”

“பொண்ட உம்மாக்கு நாக்கு கொஞ்சம் நீளம் டா…”

“அட.. அபோ அளந்து பார்க்கலையா மா எத்தன சென்றிமீற்றர் னு….”

சாரா முறைக்க இனி வானா என வாயை பொத்தினான். உம்மா என்ன சொல்ல வாரா என்றதை அறியாது அவன் மனது அந்த சேரி பெண்ணை அங்களாய்த்தது. ஏதோ நிசப்தம் பூண்டான்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

ஆம் அது ஒரு அடர்ந்த காடுதான். ஆனாலும் அழகு வனப்பு நிறைந்து. நிசாத்தின் கார் நிற்கவில்லை. நிசாத்தான் கரை நிற்பாட்டினான். அதே முந்தானை அணிந்த அதே முகம் மறைத்த அதே பெண் அந்த அடர்ந்த…

ஆம் அது ஒரு அடர்ந்த காடுதான். ஆனாலும் அழகு வனப்பு நிறைந்து. நிசாத்தின் கார் நிற்கவில்லை. நிசாத்தான் கரை நிற்பாட்டினான். அதே முந்தானை அணிந்த அதே முகம் மறைத்த அதே பெண் அந்த அடர்ந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *