எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 4

  • 9

“டேய்… நிசாத்… நிசாத்…”

“ஏதும் அறியாதவனாய் சிலையாக இருந்தவன் சத்தத்தில் திடுக்கிட்டு”

“ஆஹ் ஆஹ் என்னமா என்னமா…”

“ஓஹ் மகன் கனவு கடலில் பயணம் போல”

என உம்மாவும்  சித்தி அண்டியும்  உண்மை தெரியாது. நிசாத்தை கிண்டல் செய்தார்கள். அவனும் அவன்  மனக்குமுறலை வெளிப்படுத்தாது.

“ஆஹ் சொல்லுங்க மா … கேட்டுட்டுத்தான் இருக்கன் மா நீங்க சொல்லுங்க.”

“எல்லாம் சொல்லி முடிசிடன்.”

“ஆஹ் சரி மா… உங்களுக்கு எல்லாம் நூற்றுக்கு நூறு வீதம் இருக்கணுமே…”

என்று சொல்லும் போது சாராவின் வாய் முந்தி கொண்டது.

“அப்டி ஒரு பொண்ண எங்க தான் தேடி இவனுக்கு முடிச்சி வைக்க போறன் என்று தெரில்ல.”

“உம்மா நீங்க கோபிக்க  இல்ல என்றால் நான் ஒன்று சொல்லட்டாமா ?”

“ம்ம்… சொல்லு நிசாத் உம்மா கிட்ட ஏன் இப்படி கேட்க தாராளமா சொல்லு மகன்…”

உம்மா நான் ஒரு பிள்ளைய கண்டிருக்கன். ஆனா முகம் சரியா பார்க்க இல்ல. பிள்ளட நடைமுறை பார்த்தா நல்ல ஒழுக்கமான பிள்ளையா இருக்கு நான் ரெண்டு வாடி வாட்ச் பண்ணிருக்கன். வீடு பக்கத்து சேரி தெரு அந்த வீட்டு பக்கத்துல ஒரு பெரிய மரம் இருக்கு தகட்டு கேட் போட்ட ஒரு சின்ன வீடு தான் மா. ..

சாராவின் சினம் அன்று தான் வெளிப்பட்டது போல…

என்ன நிசாத் நீ சொல்ற நமட குடும்பம் என்ன நமட ஸ்டேட்டஸ்  என்ன நீ ஏதோ சொல்லற முடியாது நிசாத். ஒரு குடிசைல வளர ஒருத்தி உனக்கு பொண்டாடியா. படிப்பு என்ன தராதரம் என்ன

“உம்மா நான் தான் அன்று சொன்ன தானே படிப்பு எல்லாம் முக்கியம் இல்லனு.”

என்று சொல்லி முடிக்க முதல் சித்தி அண்டி வாய் திறந்து ,

“ஆஹ் சாரா அவனுக்கு  தான் புடிச்சி போய்ட்டுனு சொல்றான் தானே போய் பாத்துட்டு வர்வமே.”

“என்ன ராத்தா நீங்க பேசுற இவன நான் எப்படி எல்லாம் கட்டி வைக்க நினச்ச… நான் எப்படி ஒரு சேரி பொண்ண கட்டி வைக்கிற…”

“உம்மா என்கி அப்போ கல்யாணம் தேவல்ல. இனி இந்த பேச்சு வர கூடா என்று கோபமாக எழும்ப…”

“நிசாத் நில்லு உண்ட பேச்சுகாக போறன் ஆனா ஒன்று இந்த இடம் எனக்கு பிடிக்காடி நீ விட்டுடனும்.”

“உம்மா நீங்க பார்க்காம ஒன்ற தெரியாம பேச வேணா மா… எனக்கு தோணுது இந்த இடம் சரி வரும் என்று ஏன் என்று எனக்கும் அல்லாஹ்க்கும் தெரியும்…”

“பாருங்க ராத்தா இவண்ட  பேச்ச… எப்டி ???

“சரி சாரா வா பார்த்துட்டு வருவம் என்று சித்தி அண்டி அழைக்க…”

“ம்ம்… சரி போய் வாரம் என்று இருவரும் உடனே போக வெளியாகினார்கள்.”

சாரா நடக்க நடக்க ஏதும் உணராது மௌனம் காத்தாள். இருபது நிமிடங்கள் பின் சித்தி அண்டிக்கு நிசாத் சொன்ன அடையாளங்களோடு ஒரு வீட்டின் ஊசலாட்டம்.

“சாரா இந்த வீடு என்று தான் நினைக்கன். நிசாத் சொன்ன அதே அடையாளங்கள்.”

“ஆஹ் சரி போய் பார்ப்பம்”

என்று ஸலாம் சொல்ல பதில் ஸலாம் அதே நேரத்தில் மீண்டது. சற்று நேரத்தில் வெளியில் ஒரு பெண் பார்க்க அமைதியாய் பண்போடு ஆம் அவர் தான் இந்த கதையோட கதாநாயகி ருஷாவோட உம்மா சுபைதா.

“வாங்க வாங்கமா…”

என்று தெரிந்த ஆட்களைஅழைப்பது   போல அழைத்தார் சுபைதா. இவர்களும் ஒருத்தரை ஒருத்தர் கண் சைகை காட்டி உள்ளுக்கு நுழைந்தார்கள்.

“உட்காருங்க…”

என்று சொல்ல இருவறும் அமர்ந்து கொண்டார்கள். வந்ததும் வராததுமாக வெயிலில் வாடிய சாராவுக்கும்  சித்தி அண்டிக்கும் குளிர் பாணம் எடுக்கும் நோக்கத்துடன்.

“இருங்கமா வாரன்”

என்று கிச்சனுள் நுழைந்தார் சுபைதா. போனது தான் தாமதம் சாராவும் சித்தி அண்டியும் குசு குசுத்தார்கள்.

“புள்ள சாரா இந்த பொம்புளட நடைமுறை பாரத்தியா நல்ல பணிவான பேச்சு.”

“ம்ம்.. ஓஹ் ராத்தா ஆனா பொண்ணு படிப்பு இப்படி என்ன என்று தெரிலயே”

என்று சொல்ல கிச்சனில் இருந்து சுபைதா மாம்பழ ரிங்சோட வந்தார்.

“எடுங்க”

என்று எடுத்து கொடுக்க இருவரும் ரிங்சின் சுவையோடு பேச்சை தொடர்ந்தார்கள்

“நாங்க யாறு  என்று தெரியுமா?” என்று கேட்க.

“இல்லம்மா.” என்று சுபைதா பதில் சொல்ல.

“பெரிய பள்ளில மோதினா இருந்த அஹமது ஹாஜியார்ட வைப் தான் இவ சாரா…”

“ஆஹ் ஓ தெரியும் எங்கட ருஷாட வாப்பா சொல்லுவாறு அவறும் அந்த பள்ளில தான் வேல செஞ்ச அஹமது ஹாஜியரா பற்றி நல்லா சொல்லுவாறுமா…”

ஆஹ் நாங்க வந்த விசயம் என்ன என்றா. எங்கட கடைசி மகன் உங்கள்ட மகளை கண்டிருக்காறு ஆனா முகம் எல்லாம் பார்கள. பொண்ணு நல்ல நடைமுறைல தெரிஞ்சி இருக்கா அவறுக்கு. நாங்க அவருக்கு உங்கட மகள கேட்டு வந்திருக்கம். எங்கட மகன் இன்ஜினீயர் பெரிய பெரிய கம்பனி செய்ராரு. இப்போ உங்கட மகள பற்றி தெரிஞ்சிக்க விரும்புறம் சொல்லுங்க மா…

“எங்கட மகள் ருஷா”

பேரு சொல்லும் போதே சாராவின் மனதில் ஏதோ எதிர் பார்ப்பு அதிகம் ஆனது.

“அவ யூணிவேர்சிட்டி முடிச்சிடு இப்போ 2 மாசமா தான் வீட்ல இருக்கா. வேலைக்கு போட்டிருக்கு.”

என்று சொல்லும் போது  சாராவின் மனதின் பாதி பாரம் குறைந்தது. ஆனால் பொண்ணு வாக்கா என்று தெரியாதே இன்னும் அந்த மனது அடித்து கொண்டது.

“நாங்க உங்கட மகள பார்க்கணும்.”

என்று சித்தி அண்டி சொல்ல.

“நீங்க பெரிய இடம் நாங்க உங்க இடம் எப்டி மா”

என்று சொல்லும் போது, சாரா வாய் துறந்து.

“நாங்க உங்கட மகள பார்க்கணும் கூடி வாங்க”

என்று சொல்ல

“ஆஹ் அவ கிச்சன்ல… கொஞ்சம் இருங்க”

என்று கிச்சனுள் நுழைந்தார். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அழகுக்கும் குணத்துக்கும் தலைவியான ருஷா தன் நீண்ட கருமை கொண்ட கண்களால் கண்ணீர் முத்தை பதித்து நிற்கையில் தாய் சுபைதா திகைத்து போனாள். பதில் ஏதும் அறியாதவளாய்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“டேய்… நிசாத்… நிசாத்…” “ஏதும் அறியாதவனாய் சிலையாக இருந்தவன் சத்தத்தில் திடுக்கிட்டு” “ஆஹ் ஆஹ் என்னமா என்னமா…” “ஓஹ் மகன் கனவு கடலில் பயணம் போல” என உம்மாவும்  சித்தி அண்டியும்  உண்மை தெரியாது.…

“டேய்… நிசாத்… நிசாத்…” “ஏதும் அறியாதவனாய் சிலையாக இருந்தவன் சத்தத்தில் திடுக்கிட்டு” “ஆஹ் ஆஹ் என்னமா என்னமா…” “ஓஹ் மகன் கனவு கடலில் பயணம் போல” என உம்மாவும்  சித்தி அண்டியும்  உண்மை தெரியாது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *