அரச ஊழியர்களே! நீங்கள் அரசியல்வாதிகளின் அடிமையல்ல

  • 10

ஜனாதிபதி தேர்தலுடன் சில அரசியல் கட்சிகளின் நோக்கங்களுக்காக எதை வேணுமானாலும் செய்ய துடிக்கும் தொழிற்சங்க பங்காளிகள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குமிடையில் தொழில் ரீதியான வேறுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசியல் வலைப்பின்னலில் ஒன்றிணைந்துள்ளார்கள்.

பிரச்சினைகளை இவர்களுக்கு வடிவமைக்கவும் தெரியும். முடிக்கவும் தெரியும். அது ஆசிரியராக, வைத்தியராக, ரயில் ஊழியனாக இருக்கட்டும். கிடைக்கும் சொகுசு குறைவாயினும் மக்களுக்கு பணியாற்றுவதை தானே சேவை என்கிறோம். சொகுசு கிடைக்காவிட்டால் பணிபுரிய மாட்டோம் என்று கூறினால் அதனை சேவை என்று கூற முடியாது. அது பிசினெஸ் ஆகும்.

ஆசிரியர்களே!
வைத்தியர்களே!
மற்றும் ஊழியர்களே!
நீங்கள் சேவை செய்கிறீர்களா? வியாபாரம் செய்கிறீர்களா? முடிவெடுங்கள்.

அரசியல் வாதிகளின் கைபொம்மைகளாக தொழில்சங்க தலைவர்களும், அவர்களின் அடிமைகளாக மற்றவர்களும் இருக்க, நாடு எப்படி முன்னேறும்?

திடீரென்று இதயம் நின்றால் வைத்தியன் காப்பான் என்று வைத்தியசாலை சென்றால் அவன் வேலை நிறுத்தம், உயிராய் போனவன் பிணமாய் வரணும். எதிர்காலத்தை வளமாக்கணும் என்று ஆசையுடன் பள்ளி செல்லும் பிள்ளைக்கு, கற்றுக்கொடுக்க மாட்டேன் என்று ஆடம் பிடிக்கும் ஆசிரிய செல்வங்கள்.

பயணம் போக முடியவில்லை, கடிதம் வரவில்லை, மின்சாரம் இல்லை, பல்கலைக்கழகம் இல்லை மழை பெய்தால் வெள்ளம், வெய்யில் இறைத்தால் வரட்சி.

அடுத்தவனுக்கு கை நீட்டி, அவன் விட்ட பிழை என்பதை பார்க்க முன்னர் நான் நாட்டுக்காய் என்ன செய்தேன்? என்ன பிழை செய்து கொண்டிருக்கின்றேன்? என்பதை பார்ப்போர் எவரும் இல்லை.

இருக்கும் அரசாங்கத்துக்கு ஏசிவிட்டு இன்னுமொரு அரசியல்வாதியை ஆட்சிக்கு ஏற்றுவார்கள், ஆள் மாறினாலும், ஆட்சி மாறாது. எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். அரசியல்-தொழிற்சங்க அஜெண்டாவை நிறைவேற்றும் அரச ஊழியனாக இருப்பதை இட்டு வெட்கப்பட வேண்டும்.

சேவையை இறைவனுக்காக செய்வோம். அதற்கு இந்த உலகத்தை சம்பளமாய் தந்தாலும் போதாது. அதன் கூலியை இறைவனே வழங்குவான்.

நன்றி.
Nazreen Nawfal

ஜனாதிபதி தேர்தலுடன் சில அரசியல் கட்சிகளின் நோக்கங்களுக்காக எதை வேணுமானாலும் செய்ய துடிக்கும் தொழிற்சங்க பங்காளிகள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குமிடையில் தொழில் ரீதியான வேறுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசியல் வலைப்பின்னலில் ஒன்றிணைந்துள்ளார்கள். பிரச்சினைகளை இவர்களுக்கு…

ஜனாதிபதி தேர்தலுடன் சில அரசியல் கட்சிகளின் நோக்கங்களுக்காக எதை வேணுமானாலும் செய்ய துடிக்கும் தொழிற்சங்க பங்காளிகள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்குமிடையில் தொழில் ரீதியான வேறுபாடு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசியல் வலைப்பின்னலில் ஒன்றிணைந்துள்ளார்கள். பிரச்சினைகளை இவர்களுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *