காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 71

  • 7

டிடானியாவுக்கு ராபர்ட் கிட்ட இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது. அதை அவசர அவசரமாக ஆர்வத்துடன் பார்த்தால்,

ஹாய், டிடானியா… நான் இத்தாலி வந்ததும் உனக்கு தான் முதல்ல மெயில் பண்ணுறேன். கீழே இருக்கிறது என்னோட ஃபோன் நம்பர். நோட் பன்னிக்கே. அதோட நானும் என்னோட அம்மா அப்பாவும் சேர்ந்து எங்க வேலையை ஆரம்பிச்சிட்டோம். இதுவரை ரெண்டு பேரை கண்டக்ட் பண்ணி விஷயத்தை சொல்லி இருக்கோம், மொத்தம் 17 பேரு இந்த ஆராய்ச்சியை செய்யக்கூடியவங்க உலகம் பூரா இருக்காங்க. அதோட மீராவும் ஆர்தரும் கூட எங்க கூடத்தான் இருக்காங்க. ஜெனி, கேகே, விக்டர் எல்லோரையும் கேட்டதா சொல்லு,

அதோட…. அதோட….

வரும்போது எதையோ விட்டுட்டு வந்த மாதிரி இருக்கு. என்னன்னு சரியா தெரியல்ல. உனக்கு தெரிஞ்சா எனக்கு கண்டிப்பா சொல்லு.

டேக் கெயார். சீ யூ..

ராபர்ட்.’

என்பதாக அவனுடைய செய்தி காணப்பட்டது.. மெல்லியதாக ஒரு புன்னகை செய்தவளாய் அவனுடைய கண்டெக்ட் நம்பரை எல்லோருக்கும் சென்ட் பண்ணி விட்டு அடுத்த விரிவுரைக்காக ஹாலுக்குள் நுழைந்தாள் டிடானியா.

***********

“நான் சொன்னதெல்லாம் நியாபகம் இருக்குல்லே. அந்த கில்கமேஷை நீ தான் கொல்லனும். அதுக்காக தான் நீ உருவாக்கப்பட்டே இப்போ அவன் எப்போ எந்த நேரமும் உன்னை தாக்க வரலாம். அதோட அந்த பொண்ணு ஜெனியை சாதாரணமாக நினைக்காமல் அவகிட்டயும் ஜாக்கிரதையாக இரு. உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. நான் மூணு நாளைக்கு இங்க இருக்க மாட்டேன்.

ஆஸ்திரேலியா போறேன். அதுவரை என் ஆளுங்க கண்காணிப்பில் நீ எங்கே வேணும் என்னாலும் போகலாம். சரியா.” என்று மித்ரத் என்கிடுவிடம் சொல்லி கொண்டிருந்தான்.

“சார், உங்க லக்கேஜ் எல்லாம் வண்டியில் ஏற்றிட்டேன். இப்போ கிளம்பினா சரியா இருக்கும்.” என்று ஒருத்தன் வந்து சொன்னான்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஒரு விஞ்ஞானியை சந்திக்கவே அவன் இம்முறை புறப்படுகிறான். புறப்படும் போது அங்கு நின்ற தனது ஆட்களுக்கு கண்களால் ஜாடை செய்தபடியே புறப்பட்டான். அதன் அர்த்தம் எப்போதும் அவன் மீது ஒரு கண் இருக்கட்டும் என்பது தான்.

*****************

மித்ரத் வீடு தொடக்கம் விக்டர் வீடுவரை உள்ள எல்லா கேமராக்களினதும் லைவ் காஸ்ட்டை விக்டருடைய லேப்டாப்பில் செயற்படுத்தி இருபத்து நான்கு மணி நேரமும் அவர்களை கண்காணிக்கும் ஏற்பாடொன்றை ஏற்படுத்தி கொடுத்து விட்டே விக்டர் சென்றிருந்தான். எப்போது பார்த்தாலும் அந்த லேப்டாப்பை பார்த்து கொண்டே இருப்பான் கில்கமேஷ்.மித்ரத் அவனுடைய காரில் எங்கோ புறப்படுவதை சி சி டிவி கேமராவில் பார்த்து கொண்டிருந்த கில்கமேஷ் எழும்பினான்.

“இது தான் சரியான நேரம் வா போகலாம்.”

என்று ஜெனியை அழைத்தான். காபி குடித்து கொண்டே அவன் அருகில் வந்து அமர்ந்தவள்,

“என்ன… எங்க போகப்போறே??.” என்று திருப்பி கேட்கவும்

“நான் பார்த்தேன் மித்ரத்தை, அவன் வீட்டை விட்டு வெளியே எங்கோ போனான்.” என்றான்.

“இஸ் இட்…. என்கிடுவும் கூட போனானா. நீ பார்த்தாயா?” என்று கேட்டாள் அவள்.

“இல்ல அவன் மட்டும் தனியா தான் போறான். இப்போ என்கிடு வீட்டில் தனியா தான் இருப்பான். வா போகலாம்” என்று அழைத்தான் கில்கமேஷ்.

அவனை முறைத்து பார்த்த ஜெனி.

“எதுக்கு அவன் கையால அடிவாங்கி சாகவா வரப்போரே. நானே போய்க்கிறேன். நல்ல பிள்ளையாட்டம் இங்கேயே இருந்து மறுபடியும் அந்த மித்ரத்தை பார்த்தால் இன்போர்ம் பண்ணு.” என்று விட்டு கார் சாவியை எடுக்க

மறுபடியும் கில்கமேஷ் ,

“ஹேய்… இங்க பாரு…”

என்று லேப்டாப்பை காட்ட அதிலே என்கிடு இருவருடன் வீட்டை விட்டு வெளியேறுவது தெரிந்தது.

“இவன் எங்க போக போறான்? சரி வா அவனை பின்தொடருவோம்.” என்று ஜெனி சொல்ல உற்சாகமாய் ஓடிப்போய் காரை ஸ்டார்ட் பண்ணினான் கில்கமேஷ்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

டிடானியாவுக்கு ராபர்ட் கிட்ட இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது. அதை அவசர அவசரமாக ஆர்வத்துடன் பார்த்தால், ஹாய், டிடானியா… நான் இத்தாலி வந்ததும் உனக்கு தான் முதல்ல மெயில் பண்ணுறேன். கீழே இருக்கிறது…

டிடானியாவுக்கு ராபர்ட் கிட்ட இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது. அதை அவசர அவசரமாக ஆர்வத்துடன் பார்த்தால், ஹாய், டிடானியா… நான் இத்தாலி வந்ததும் உனக்கு தான் முதல்ல மெயில் பண்ணுறேன். கீழே இருக்கிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *