காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 72

  • 9

கில்கமேஷ் காரை செலுத்த பின்னாடி சீட்டில் இருந்து கொண்டு லேப்டாப்பில் என்கிடுவின் கார் எந்த பக்கமாக போகிறது என்பதை பார்த்து கொண்டிருந்த ஜெனி,

“கில்கமேஷ், ரெடியா இரு அவன் வர்ற வண்டி இந்தபக்கமா தான் வரப்போகுது.”

எனும்போதே வளைவொன்றில் இருந்து இவர்களுக்கு நேரெதிராக என்கிடு வந்த கார் வந்து கொண்டிருந்தது. ஜெனி லேப்டாப்பை மடித்து பக்கத்தில் போட்டு விட்டு,

“சீக்கிரம் வண்டிய திருப்பு…”

என்று சொல்ல கில்கமேஷும் வண்டியை திருப்பி என்கிடுவை பின்தொடர்ந்தனர். என்கிடு, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சந்தை பகுதி ஒன்றில் இறங்கினான். அவன் பின்னாடியே ஒருவன் இறங்கி அவனுடன் நடந்தான்.

“எதுக்காக இங்க வந்து இருக்கான்?”

சரி நீ கார்லயே வெய்ட் பண்ணு, நான் போய் எப்படியாவது அவன்கிட்ட பேசமுடியுதான்னு பார்க்கிறேன். இந்த கமியுணிக்கேஷன் டிவைசை காதில் மாட்டிக்க நாம ரெண்டு பேரும் பேசிக்க உதவும்.” என்று அவன் காதில் அதை பொருத்தி விட்டு காரை விட்டு இறங்கினாள் ஜெனி.

என்கிடு ஒவ்வொரு பழக்கடை மரக்கறி கடையாக அருகில் சென்று ஏதாவது ஒரு பழத்தை எடுத்து சுற்றிலும் பார்த்துவிட்டு நல்லதாக இருந்தால் அங்கேயே சாப்பிட்டும், கொஞ்சம் ஏதேனும் குறை இருந்தாலும் கீழே போட்டு மிதித்து விட்டு மறுகடைக்கு நகர்ந்தான்.

“ஏய், உனக்கு அறிவு இருக்கா, ஒண்ணு கையில் எடுக்கிறத்தை வாங்கிட்டு போ. இல்லேன்னா இருந்த இடத்திலேயே வெச்சிட்டு போ. எதுக்காக இப்படி போட்டு நாசமாக்குற. இது என்ன உன்னோட கடை என்னு நினைச்சிக்கிட்டாயா?” என்று கோபமாக கேட்டான் கடைக்காரன் .

அவன் கத்தியதும் அவனை கோபத்துடன் பார்த்த என்கிடு அந்த பக்கம் இருந்த எல்லா தர்ப்பூசனிகளையும் அடித்து நொறுக்க பின்னாடி வந்த மித்ரத்தின் ஆள் அதற்கான மொத்த பணத்தினையும் கடைக்காரனுக்கு கொடுத்தான்.

“ஹேய்.. அங்க என்ன நடக்குது?” என கில்கமேஷ் கேட்டான்.

“இங்க உன்னோட பிரண்டு ரொம்பத்தான் அழிச்சாட்டியம் பண்ணுறான். எல்லா கடையில் இருக்குற பழங்கள் காய்கறிகள் எல்லாம் நாசமாக்குறான். ஏன் கேகே அவன் இப்படிதானா?”

என்று கேட்டு கொண்டே என்கிடுவை பின்தொடர்ந்தாள் ஜெனி.

“ஆமா… அவனுக்கு சாப்பாடு எப்போதும் இயற்கையாகவும் அதற்கு கொஞ்சம் கூட பழுது இல்லாம ரொம்பவும் தூய்மையா இருக்கணும், அவனுக்காக எங்க அம்மா ஒரு தோட்டமே வெச்சி இருந்தாங்க. தினமும் அதுல இருந்து தான் எதையாச்சும் அவன் சாப்பிடுவான்.” என்று பழைய விடயங்களில் சற்று மூழ்கிப்போனான் கில்கமேஷ். அந்த கதையை கேட்டுக்கொண்டே வந்து அந்த சனநெரிசலில் என்கிடுவை தவற விட்டாள் ஜெனி.

“ஐயையோ… லூசு.. உன்னால தான் எங்க போனான்னே தெரியலையே?” என்று அங்கும் இங்கும் தேட,

“என்னாச்சு என்ன?” என்று பதற்றதுடன் கேட்டான் கில்கமேஷ்.

“இந்த கூட்டத்தில் அவனை எங்க போய் தேடுவேன், உன்னோட கதையை கேட்டுட்டு வந்து கொஞ்சம் முன்னாடிதான் போய்ட்டு இருந்த என்கிடுவை தொலைச்சிட்டேன். சரி இங்கே தேடிப்பார்க்குறேன்.” என்றவள் அங்கும் இங்கும் நுழைந்து என்கிடுவை தேட ஆரம்பித்தாள்.

அப்போது திடீரென திரும்பும் போது யாரோ அவள் மீது பலமாக மோதி விட்டனர். நெற்றியில் பலமாக அடிப்பட்டதால் மயக்கமாக வரவே

“ஆஹ்…. உனக்கு அறிவில்லையா?”

என்று கேட்டுக்கொண்டே திரும்பினால் அது என்கிடு தான் அவள் அப்படியே மயங்கி என்கிடுமேல் விழுந்தாள்.

ஜெனி ஆஹ் என்றத்தையும், யாருக்கோ திட்டியத்தையும் வைத்து  அவளுக்கு ஏதோ ஆகிவிட்டதை உணர்ந்த கில்கமேஷ். டிவைசை கழற்றி காரில் போட்டுவிட்டு காரை விட்டு இறங்கி சந்தைக்குள் நுழைந்தான்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

கில்கமேஷ் காரை செலுத்த பின்னாடி சீட்டில் இருந்து கொண்டு லேப்டாப்பில் என்கிடுவின் கார் எந்த பக்கமாக போகிறது என்பதை பார்த்து கொண்டிருந்த ஜெனி, “கில்கமேஷ், ரெடியா இரு அவன் வர்ற வண்டி இந்தபக்கமா தான்…

கில்கமேஷ் காரை செலுத்த பின்னாடி சீட்டில் இருந்து கொண்டு லேப்டாப்பில் என்கிடுவின் கார் எந்த பக்கமாக போகிறது என்பதை பார்த்து கொண்டிருந்த ஜெனி, “கில்கமேஷ், ரெடியா இரு அவன் வர்ற வண்டி இந்தபக்கமா தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *