எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 5

  • 10

“மகள் ஏன் அலுற அல்லாஹ்வா பார்த்து உன் குணம் உன் படிப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு வாழ்க்கை அனுப்பிகான் ருஷா வந்து முகத்த காட்டு பிள்ள.”

என்ன மா நீங்க சொல்ற நமட நில தம்பிட படிப்பு நாமா வாப்பா இல்லாத நிலைல இருக்கம் மா இந்த டைம் ல நான் உங்கள விட்டிடு எப்டி மா போவன். நான் உழைச்சு உங்கள பார்துகனும் தம்பி இப்போ மெத்ஸ் படிக்கான் அவன்ட செலவு  இப்படி இருக்கும் போது எப்டி மா நான் வெட்டிங் பற்றி திங் பண்ற.

“அப்டில ருஷா உனக்கு அனுப்பின அல்லாஹ் இது எல்லாம் அமச்சி தான் மா அனுப்பிப்பான். நீ கொஞ்சம் வந்து முகத்த காட்டு பிள்ள நான் வந்து ரொம்ப நேரம் ஆகுது அவக ஏதும் நினைப்பாக”

என்று சொல்லும் போது சித்தி அண்டியின் குரல்,

“சுபைதா மேக்கப் எல்லாம் தேவ இல்ல கூடி வாங்க பிள்ள”

என்று சொல்லி சிரித்து கொண்டார்கள்.

“ஆஹ் வாரம் மா”

என்று கிச்சனில் இருந்து ருஷா வெளி ஆக சித்தி அண்டியும் சாராவும்  செய்த சிலை மாதிரி என்ன சொல்வது என்று அறியாது திகைத்து நிற்க ஸலாம் சொல்லி ருஷா வர அவளின்  ஸலாம் சத்தத்தில் நினைவு நிலைக்கு வந்தார்கள் இருவரும். ருஷாவின்  ஸலாத்திற்கு பதில் உரைத்து மாஷா அல்லாஹ் என்று இருவரும் சொல்ல சுபைதாவின்  மனம் குளிர்ந்தது.

“இருங்க ருஷா”

ம் ம்… அமைதியாய் இருந்தாள்.

“என்ன வயசு பிள்ள.”

“இருபத்தி மூன்று அண்டி.”

அப்போ தான் அவள் பற்களின் அழகை கூட அவளின் பேச்சால் சாரா  அறிந்தார். அவள் நிறம் அழகு மட்டும் அல்ல. அவள் முகத்தில் கூட ஒரு பரக்கத் தெரிந்தது.

அப்போது தான் நிசாத் சொன்னதை சாரா நினைவில் இருத்தி கொண்டார். “இந்த இடம் சரியா வரும் மா”

“ஆஹ் ருஷா என்ன வேலைக்கு போட்ட பிள்ள.”

“டீச்சிங் டீ ஓ இப்படி போட்டு இருக்கன் அல்லாஹ் தரணும் நாங்களும் வாபாட மௌத்துக்கு  பிறகு ரொம்ப கஷ்ட படுறம் அப்டின்னு  கண் கலங்கினாள்”

“ஆஹ் அதுக்கு என்ன பிள்ளை எங்கட மகன் நிசாத் பார்த்துப்பாரு.”

என்று சாரா சொல்ல சித்தி அண்டியம் இது சாராவா என்று திகைத்து போனார்.

“பிள்ள சாரா”

“ஆஹ் ஓஹ் ராத்தா நமட நிசாத்கு நல்ல பொருத்தம் லா?”

ஏதும் உணராது வாயடைத்து போன சித்தி அண்டி .

“ஆஹ் ம் ம் ஓஹ் சாரா”

என்று சொல்ல சுபைதாவின் மனம் குளிர்ந்தது மனதால் இறைவனை புகழ்ந்தார். ஆஹ் நாங்க பிறகு கோள் பண்றம். பிள்ள உங்கட நம்பரை தாங்க என்று வாங்கி இருவரும் விடை பெற்றார்கள்.

**************

ருஷாவின் மனதில் கூட ஒரு வகை ஆனந்தம் தான் எதிர் பார்த்த அந்த இளவரசன் நிசாத் தானோ என்று ஒரு ஏதிர் பார்ப்பு. இதை அல்லாஹ்விடம் சொல்ல வேண்டும் என்று இரண்டு ரகாத் தொழ சென்றாள்.

தாய் சுபைதாவுக்கும் அளவில்லா சந்தோசம் தன்னுடைய கணவர் ஆச பட்ட மாதிரி மகளுக்கு ஒரு வாழ்கை வந்து இருக்கு என்று தன் கணவனின் எதிர் பார்ப்பை நினைத்து இந்த தருணம் தன் கணவர்  தங்களோடு இல்லை என வருந்தி கொண்டாள் சுபைதா.

******************

“சித்தி ராத்தா நான் என்னவோ என்று நினைச்சி போனன் ஆனா நான் எதிர் பார்த்தத விட அல்லாஹ் எனக்கு  ஒரு தேவதை மருமகள தந்திருக்கான்.”

“ஓஹ் சாரா..  இன்னும் ஒன்னு கவனிச்சியா அந்த பிள்ள எப்டி முக்காடு போட்டிடு இருந்தா இந்த உலகத்துல முக்காடு மதிக்காம பேஷன் காட்டுற பிள்ளைகளுக்க இந்த பிள்ளட ஒழுக்கம் பார்த்தியா ? சாரா.”

“ஆஹ் சரியா சொல்லூரிங்க ராத்தா. அல்லாஹ் நல்ல படியா இந்த கல்யாணத்த நடத்தி வைக்கணும் ஆமீன்.”

“ஆஹ் ராத்தா நிசாத் கிட்ட ஒன்றும் சொல்ல வேணாம் ஒரு விளையாட்டு சீன் ஒன்று போட்டு பார்ப்பமே.”

“சரியா சொன்னடி பிள்ள சாரா.”

சொல்லி முடிய வீடும் வந்தது காலடியில். ஆழ்ந்த எதிர் பார்போடு நிசாத் வாசல் மண்டப வாயிலில் இறப்பர் சாயமனையில் உட்கார்ந்து இருந்தான். தாயின் வருகை கண்டு திகைத்து வந்ததும் வராததுமாய்,

“உம்மா எப்டி பார்த்தீங்களா? ஓகே ஆகிடா பொண்ணு”

எப்டி நான் சொன்ன மாதிரி தானே, ஏதும் பேசமல் உள்ளே நுழைந்தார் தாய் சாரா.

“அண்டி என்ன நீங்க சொல்லுங்க?”

நடிப்பின் உச்சம் தொட சோக முகம் காட்டி உள்ளே நுழைந்தார் சித்தி அண்டி. தன் நினைப்பு அழிந்ததோ என்று அழுகை அடக்கி தன் தாயை தொடர்ந்தான் நிசாத்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“மகள் ஏன் அலுற அல்லாஹ்வா பார்த்து உன் குணம் உன் படிப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு வாழ்க்கை அனுப்பிகான் ருஷா வந்து முகத்த காட்டு பிள்ள.” என்ன மா நீங்க சொல்ற நமட நில…

“மகள் ஏன் அலுற அல்லாஹ்வா பார்த்து உன் குணம் உன் படிப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு வாழ்க்கை அனுப்பிகான் ருஷா வந்து முகத்த காட்டு பிள்ள.” என்ன மா நீங்க சொல்ற நமட நில…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *