எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 6

  • 7

“உம்மா… உம்மா… உங்களை தான் கூப்பிடுறன் கேட்க இல்லயா?”

பதில் சொல்லாது முகம் கழுவி விட்டு வந்த சாரா

“என்ன சொல்லு இப்போ.”

“உம்மா போன விஷயம் என்ன?”

“நீ என்ன நினைக்க நிசாத், நான்… நான்…”

“இடம் சரியா வந்திருக்கும் நான் பார்த்த அந்த முகம் தெரியாத தேவதைய நீங்க பார்த்து எல்லாம் சரி செய்துட்டுதான் வந்திருப்பீங்க.”

என்று நிசாத் சொல்ல சாரா பேச்சு ஏதும் இன்றி சித்தி அண்டியை பார்க்க, சித்தி அண்டி கண் சமிக்கை காட்ட, அதை எதிர் பாராத விதமாக நிசாத்தும் கண்டு தாயின் விளையாட்டை உணர்ந்தான்.

எங்கிட்டையேவா என்று மனதில் எண்ணி தாய்க்கு மாற்றமாக விளையாட ஆரம்பித்தான் நிசாத்.

“என்னமா சவுண்ட காணல பொண்ண பிடிகலயா? உங்களுக்கு பிடிக்காட்டி எனக்கு என்ன முடிக்க போற நான் தானே”

என்று சொல்ல, தாயின் விளையாட்டு வேடம் அவ்வளவு தான் கலைந்து விட்டது.

“டேய் நிசாத் என்ன டா நீ பேசுற என்ன நீ மீறிடுவியா? என்று கேட்க,

“ஹா ஹா ஹா என்று சிரித்த படி அப்போ ஏம்மா ரெண்டு பேரும் இப்படி ஒரு ராமா செட் பணினிங்க. கொஞ்சம் அவுட் ஆகாம விளையாடிக்கலாம் தானே.”

“அடேய் உனக்கு எப்படி டா தெரியும்.”

“ஆஹ் கொன்சம் கண் எக்சென் எல்லாம் பார்த்து கொடுங்க மா.”

“ஆஹ் ஆஹ் டேய் பார்த்துட்டியா?”

“அதலாம் அப்போவோ பார்த்தாச்சு சரி நடந்த விளக்கத்த சொல்லுங்க.”

“என்ன விளக்கம் அதான் நாளைக்கு பொண்ணு பார்க்க போகலாம்.”

“மோம் தங்கியூ சோ மச்.. என் ஏன்ஜெல் எப்டி மா இருந்தா…”

“ம் ம்… ஓவர் ஆஹ் வழியாத நாளைக்கு நீயே பார்த்துக்க பா”

என்று சித்தி அண்டி கிண்டல் பண்ண நிசாத் வெக்க கடலில் மிதந்து கொண்டான்.

“சாரா இப்போ நேரம் மஹ்ரி ஆகிடு நானும் வீட்ட போறன். நாளைக்கு போற டைம்ம சொல்லு நாளைக்கு வாரன்.”

“இன்ஷா அல்லாஹ் நாளைக்கு அஸர் தொழுதுதிட்டு போவோம் ராத்தா.”

“மார்க்க படி பார்க்க போனா. பொண்ண பார்க்க நிசாத் வரணும். அதோட என்ட மகளும் மருமகனும் நானும் நீங்களும் நீங்க வரும் போது உங்கட மச்சானையும் கூடிடு வாங்க. இவ்ளோ பேரும் போய் பேசிட்டு வர்வமே.”

“ம் ம் …. சரி சாரா அப்போ நான் போய்ட்டு வரன் பிள்ள. ஆஹ் சரி ராத்தா.”

மஹ்ரிப்  அதான் சொல்ல தாய் சாரா மிகுந்த சந்தோசத்துடன் தொழ சென்றார். நிசாத்தும் பள்ளியை நோக்கி தன் எதிர்கால மனைவியின் நினைவலையில் தன் பயணத்தை தொடர்ந்தான். மஹ்ரிப் தொழுத்து விட்டு தன் வாழ்க்கை இறைவனின் பாதையில் செல்ல ஒரு சில நிமிடம் சுஜூதில் இருந்தான். இஷா அதான் கேட்டு ஜமாஅத் ஆக இஷாவையும் தொழுது விட்டு மீண்டும் வீட்டை நோக்கி நடந்தான். வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் சாரா மகனை சாப்பிட அழைத்தார்.

“மகன் நிசாத் சாப்பிட வாங்க.”

“நான் சாப்பாடு மேசைல வெச்சி மூடிருக்கன். நீங்க சாப்பிட்டுடு தூங்குங்க மகன்.”

“ஆஹ் சரி மா நீங்க சாப்பிட்டிங்களா?.”

“ஓஹ் மகன் சாப்டுடன். நான் டேப்லெட் போட்டு தூங்குரன். பகல் வெயில்ல போன தானே தல வலி இன்னமும் லேசாகல நிசாத்.”

“அல்லாஹ்.. சரிம்மா நீங்க தூங்குங்க. நான் சாப்பிடுடு எல்லாம் சரி பண்ணிட்டு நானும் தூங்குரன் மா. நாளைக்கு ஒரு புரொஜெக்ட் டொகுமெண்ட்ஸ் வேல இருக்கு மா அத முடிச்சிட்டு ஆஃபீஸ்க்கு எட்டரைக்குக்கு எல்லாம் போகணும் பொரீங்கர்ஸ் வாராக அந்த வேலையும் முடிக்கனும் கொஞ்சம் நேரத்தோட எழுப்பி விடுங்க மா.”

“ஆஹ் சரி நிசாத் நாளைக்கு பொண்ணு வீட்டுக்கு போற வேலையும் இருக்கு. என்னரம் வருவிங்க நிசாத்?”

“ஆஹ் இன்ஷா அல்லாஹ் மீட்டிங் பன்னெண்டு மணிக்கு முடிஞ்சிடும். அப்ரோம் பொரிங்கர்ஸ்க்கு அக்கோமடேசன் வேலைய முடிச்சிட்டு நான் தொழுத்துட்டு மூன்று மணிக்கு எல்லாம் வீட்ல நிற்பன்மா.”

“ஆஹ் சரி மகன் அப்போ நான் தூங்குரன்.”

“ஆஹ் சரிம்மா…”

நிசாத்தும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றான். ஆனால் அவனால் தூங்க முடியவில்லை. அவனின் முகம் தெரியா தேவதையின் ஊசலாட்டம் அவனின் தூக்கத்தை தூரமாக்கியது. இரவு நீண்டு கொண்டு போவதாய் மட்டும் அறிந்தான்.நேரம் பதினொன்றை தாண்டியது. தூக்கம் வரவில்லை. ஆனால் ஆஃபீஸ் வேலை கண் முன் நிலை கொள்ள அவனை அறியாது  தூக்கம் அவனை அரவணைத்தது.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

“உம்மா… உம்மா… உங்களை தான் கூப்பிடுறன் கேட்க இல்லயா?” பதில் சொல்லாது முகம் கழுவி விட்டு வந்த சாரா “என்ன சொல்லு இப்போ.” “உம்மா போன விஷயம் என்ன?” “நீ என்ன நினைக்க நிசாத்,…

“உம்மா… உம்மா… உங்களை தான் கூப்பிடுறன் கேட்க இல்லயா?” பதில் சொல்லாது முகம் கழுவி விட்டு வந்த சாரா “என்ன சொல்லு இப்போ.” “உம்மா போன விஷயம் என்ன?” “நீ என்ன நினைக்க நிசாத்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *