நினைத்துப் பார்க்க வேண்டாம் எங்களை!

  • 9

இன்று முதியோர் தினம்
என்று கூவித் திரியும்
மானிடர்களே எங்களை திரும்பி
பார்க்க வேண்டாம்!

நாங்கள் இறக்கும் முன்பு
ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளாேம்
அரக்கனாய் நீங்கள் உருவெடுத்துப்
போனதால் அன்று!

எங்களுக்கு நீங்கள் கூறும்
வாழ்த்து எங்களை அரவணைத்துப்
போவதில்லை நாங்கள் சீரழிந்து
கிடக்கும் இந்த இருட்டு
அறையில்!

பார்த்துப் பழகாத புது
முகங்கள் பல யுகங்கள்
கடந்து வாழ்ந்து போன
நினைவுகளும்தான் ஆருதலாய் உள்ளது
இன்றுவரை எங்களுக்கு!

வயிற்றுப் பசினை ஆற்ற
ருசியான உணவுகளிருந்தும் மன
வேதனைகளை மறைத்து வாழ
வேண்டுமாயிற்று மற்றவர் பார்த்து
என்னை பாிதாபம் பார்த்து
விடக்கூடாது என்று!

ஏனெனில்!
என் உறவுகள் பரிதாபம்
பார்த்தே பாலடைந்து போய்
உள்ளேன் பாசமாய் பேசிட
யாருமில்லையே என்று
புலம்பியபடி!

எங்களை நீங்கள் வாழ்த்த
வேண்டாம் எங்களால் வாழ்க்கை
தொலைந்து விடும் எனக்
கூறிப் போன என்
உறவுகள் முகம் காண
உதவிடுங்கள் எங்களுக்கு!

நாங்கள் இங்கு பசிக்காக
ஒன்றும் வரைவில்லை என்
உறவுகளில் ஆசைக்காய் என்
முதுமையின் வலிகளை மறைத்து
வந்தேன் அவர்களை மிதித்து
வாழ்ந்திடாது இருங்கள்!

எங்களை தயவு செய்து
வாழ்த்திட வேண்டாம் எங்களால்
வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை
சபிக்காது இருந்தாலே போது
எங்களுக்கு!

பொத்துவில் அஜ்மல்கான்
வியூகம் வெளியீட்டு மையம்

இன்று முதியோர் தினம் என்று கூவித் திரியும் மானிடர்களே எங்களை திரும்பி பார்க்க வேண்டாம்! நாங்கள் இறக்கும் முன்பு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளாேம் அரக்கனாய் நீங்கள் உருவெடுத்துப் போனதால் அன்று! எங்களுக்கு நீங்கள் கூறும்…

இன்று முதியோர் தினம் என்று கூவித் திரியும் மானிடர்களே எங்களை திரும்பி பார்க்க வேண்டாம்! நாங்கள் இறக்கும் முன்பு ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளாேம் அரக்கனாய் நீங்கள் உருவெடுத்துப் போனதால் அன்று! எங்களுக்கு நீங்கள் கூறும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *