சாமானியம்
- by admin
- 8
இரு சக்கர இதயம்,
இன்றியமையாப் பயணம்
இன்னிசையொன்று உதயமாகி,
இளைய ராகம் பாடும் தூரம்
பருத்ததென்று பதராய் எண்ணி,
பழையதொன்றுக்காய் பாத்திரம் வாங்கி,
நிறுத்தாத நேர முள்ளொன்றைத் துரத்தி,
தீர்க்கப்படா விடையொன்றாய் இறுதியில்
– நாம்
இறுக்கிக் கொண்டிருக்கும்
இரையும் தேவைகள்,
புத்திர பாசம் தொலைக்கும்
புதிரான தேடல்கள்,
புதனென்றாலும், புதையலென்றாலும்,
விறைக்கும் நீலிப் பாசங்கள்
பார்த்தாயிற்று, பாழாயிற்று,
பாரிய பகுதிகள் பழுதுமாயிற்று,
பார் துறக்கும் வெட்க ரேகைககளை அடிவருடி
பிதற்றும் சாமானியர்கள்,
– நாம்…
Afham Ameer Ali
Kattankudy
வியூகம் வெளியீட்டு மையம்
இரு சக்கர இதயம், இன்றியமையாப் பயணம் இன்னிசையொன்று உதயமாகி, இளைய ராகம் பாடும் தூரம் பருத்ததென்று பதராய் எண்ணி, பழையதொன்றுக்காய் பாத்திரம் வாங்கி, நிறுத்தாத நேர முள்ளொன்றைத் துரத்தி, தீர்க்கப்படா விடையொன்றாய் இறுதியில் –…