காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 73

  • 8

அவன் காரை விட்டு இறங்கி கொஞ்சதூரம் போனதும் தான் தனக்கு முன்னாடி மயக்கத்தில் இருக்கும் ஜெனியை என்கிடுவும் மித்ரத்தின் ஆளும் சேர்ந்து கொண்டு அவர்களுடைய காரில் ஏற்றுவதை கண்டான். அவ்வளவு தான்,”ஷிட்” கில்கமேஷுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.

“என்னாச்சு ஜெனிக்கு.. அவன் கிட்ட மாட்டி கிட்டாளா? சே இருக்காது.” என்று எண்ணி கொண்டே அவர்களை மறுபடியும் வண்டியில் பின்தொடர்ந்தான். போகிறபோதே விக்டருக்கு ஃபோன் பண்ணினான்.

“ஹலோ விக்டர்.. ஜெனி ஒரு பிரச்சினையில் மாட்டிக்கிட்டா.” என்றதும்  விரிவுரை மண்டபத்தில் இருந்து எழுந்து வெளியே வந்தான் விக்கி.

“என்ன !!!என்ன சொல்றே என்னாச்சு…?”

கில்கமேஷ் நடந்தவற்றை சொல்ல…

“ஐயோ…அவ மாட்டிக்கிட்டாளா? இல்ல என்ன நடந்தது என்னு தெரியலையே… நீ இப்போ எங்க இருக்கே..” என்று விக்டர் கேட்டான்.

“அவன் அவளை தூக்கிட்டு வீட்டுக்கு போற ரூட்டில் தான் போறான். நான் அவனை பின் தொடருறேன்.” என்றான் கேகே..

“நீ மொதல்ல வீட்டுக்கு வா… நானும் வரேன். அங்க போய் அனாவசியமாக மாட்டிக்க வேணாம்.”என்றான் விக்டர்.

“ஆனா ஜெனி…”

“சொல்றேன்லே அவளுக்கு எதுவும் ஆகாது சீக்கிரம் வீட்டுக்கு வா” என்றவன் ஃபோனை கட் பண்ணிவிட்டு வருகிற வழியில் டிடானியாவையும் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு வந்தான். அங்கு லேப்டாப்பை எடுத்து அதை ஆப்ரேட் செய்து கொண்டிருந்தான் கில்கமேஷ்.

“எப்படி இப்படி ஆச்சு?” என்று டிடானியா கேட்டுக்கொண்டே உள்ளே வந்தாள்.

“என்னை காரிலேயே இருக்க சொல்லிட்டு அவ தான் என்கிடுவை பின்தொடர்ந்து சந்தைக்குள்ள போனாள். திடீரென பார்த்தால் என்கிடு அவளை அவன் காரில் ஏற்றிக்கொண்டு போனான். அவ மயக்கமா இருந்தாள்.” என்றான்.

“நீ ஏன் அவளை பின்தொடரல்ல.” என்று கேட்டாள் டிடானியா.

“நான் தான் அவனை போகவேண்டாம் என்னு சொன்னேன். ஒரு வேளை இது கில்கமேஷை பிடிக்குறதுக்காக நடத்தப்பட்ட சூழ்ச்சியாக கூட இருக்கலாம்.” என்றான்.

“ஒருவேளை அவங்க ஜெனியை ஏதும் பண்ணிட்டா?”என்று பயத்துடன் கேட்டான் கேகே.

“மொதல்ல ஒரு விஷயத்தை புரிஞ்சிக்க, ஜெனியை வெச்சி தான் உன்னை பிடிக்கணும் என்னா அவளை எதுவும் பண்ண மாட்டாங்க, அடுத்தது ஜெனி நம்ம எல்லாரையும் விட புத்திசாலி எந்த மாதிரி நேரத்தில் எந்தமாதிரி நடந்துக்கணும் என்னு அவளுக்கு நல்லாவே தெரியும்.” என்றான்.

“ஆமா கில்கமேஷ் நான் பார்த்த வரைக்கும் ஜெனி தான் இந்த டீம்லயே புத்திசாதுர்யம் கூடியவள். அவளுக்கு ஒன்னும் ஆகாது.” என்று டிடானியா ஆறுதல் சொன்னாள்.

“ஆமா! அந்த டிவைஸ் எங்க… அது மூலமா அவளை காண்டக்ட் பண்ணலாமே…” என்று விக்டர் சொல்ல கில்கமேஷ்

“அது..அதை நான் கார்லயே போட்டுட்டேன்.” என்று சொல்லிக்கொண்டே அதை எடுக்க சென்றான்.

***********************

மித்ரத்தின் வீட்டில் என்கிடுவுக்கு வழங்கப்பட்ட அறையில் அவனுடைய கட்டிலில் மயக்கத்தில் இருந்த ஜெனி கண் விழித்தாள். அப்போது என்கிடு அருகில் இருக்க மித்ரத்தின் ஆள் ஒருத்தன் அவளை வளைத்து வளைத்து போட்டோ எடுத்து கொண்டிருந்தான். ஒருகணம் என்ன நடக்கிறது என்பதை அறியாமல் திடுக்கிட்டு எழுந்தவள் கோபத்தில்.

“ஹேய்!..”

 

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அவன் காரை விட்டு இறங்கி கொஞ்சதூரம் போனதும் தான் தனக்கு முன்னாடி மயக்கத்தில் இருக்கும் ஜெனியை என்கிடுவும் மித்ரத்தின் ஆளும் சேர்ந்து கொண்டு அவர்களுடைய காரில் ஏற்றுவதை கண்டான். அவ்வளவு தான்,”ஷிட்” கில்கமேஷுக்கு கையும்…

அவன் காரை விட்டு இறங்கி கொஞ்சதூரம் போனதும் தான் தனக்கு முன்னாடி மயக்கத்தில் இருக்கும் ஜெனியை என்கிடுவும் மித்ரத்தின் ஆளும் சேர்ந்து கொண்டு அவர்களுடைய காரில் ஏற்றுவதை கண்டான். அவ்வளவு தான்,”ஷிட்” கில்கமேஷுக்கு கையும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *