காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் ​தொடர் 74

  • 6

“ஹேய், என்ன பண்ணுறே?” என்று அதிரடியாக கட்டிலில் இருந்து பாயும் போது காதிலே மாட்டி இருந்த அந்த சிறிய இயந்திரம் எங்கோ கொண்டுபோய் விழுந்தது. அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த ஆள் எடுத்த போட்டோ எல்லாவற்றையும் மித்ரத்துக்கு அனுப்பி விட்டு மறுபடி ஃபோன் செய்து பேசினான்.

ஆமா, சேர்… இது அந்த பொண்ணு கிடையாது. இவ ஹாண்ட் பேக்கில் இருந்த ஐ டியை நான் முழுசா செக் பண்ணிட்டேன். பெயர் லீஸா, இந்த ஊரு பொண்ணுதான், மார்க்கட்ல என்கிடு சார் மேல மோதி மயங்கிட்டா அவர்தான் இங்க கூட்டிட்டு வந்தாரு.

என்று சொல்லி கொண்டிருந்தான். அவன் ஃபோனை என்கிடுகிட்ட கொடுக்க சொல்லி இருக்க வேண்டும், அந்த ஆள் ஃபோனை என்கிடு கிட்ட கொடுத்தான்.

“எதுக்காக இப்படி வேண்டாத ஆளுங்களை வீட்டுக்குள் கொண்டுவந்த என்கிடு.”

“அவ என்னால தான் மயக்கம் போட்டு விழுந்தா, அவளை பார்த்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு அவ சரியானதும் அவளை விட்டுர்றேன்.” என்றான் இவன்.

“சரி, எப்படியும் நான் வர மூணு நாள் ஆகும். அதுவரை எவ்வளவு ஜாக்கிரதையா இருக்கணும் என்னு தெரியும் தானே!”

“இன்னும் மூணு நாள் ஆகுமா நீங்க இங்க வர்றதுக்கு, சரி… ம்ம்… நான் பார்த்துக்கிறேன்.” என்று விட்டு ஃபோனை கட் பண்ணினான். இப்போது தான் என்ன நடக்கிறது என்பதை கொஞ்சமாக யூகித்து கொள்ள முடிந்தது.

ஆக, நாம ஒன்னும் மாட்டிக்கல்ல, மூணு நாளைகி மித்ரத் இங்க வரவே மாட்டான். இந்த சந்தர்ப்பத்தை நன்றாகவே பயன்படுத்தி கொள்ளனும்.

என்று எண்ணிக்கொண்டாள்.

“ஏய் பொண்ணு, உனக்கு இப்போ ஒன்னும் இல்லியே… மயக்கம் எல்லாம் சரி ஆகிடுச்சா.” என்று கேட்டான் என்கிடு.

“ஆமா, இப்போ ஒண்ணும் இல்ல.” என்று சொன்னவள் உடனே நாக்கை கடிந்து கொண்டாள்.

“அடச்சே, ஒன்னுமில்லை என்னு சொல்லிட்டேன். போக சொல்லிடுவானே!” என்று எண்ணிக்கொண்டு இருக்க அவள் நினைத்தது போலவே,

“அப்போ இன்னும் ஏன் நிக்குறே, அந்த பக்கம் கதவு இருக்கு அப்படியே போய்டு.” என்றான்.

*************************

டிடானியாவும், விக்டரும் சேர்ந்து அந்த டிவைசை கொண்டு ஜெனியிடம் பேச முயற்சி செய்தனர்.

“ஹலோ.. ஜெனி.நாங்க பேசுறது கேக்குதா?”

“என்ன ஒரு ரெஸ்பான்சும் இல்ல!”

“ஒருவேளை அவ இன்னும் மயக்கத்தில் இருக்கிறாளோ!”

“அப்படியும் இருக்கலாம்.

இப்போ என்ன செய்வது?”

“நான் போய் பார்த்துட்டு வரவா?” என்று கில்கமேஷ் விக்டரை பார்த்து கேட்க அவன் இவனை பார்த்து முறைத்தான்.

“அவளா கான்டெக்ட் பண்ணும் வரை வெய்ட் பண்ணுவோம். இன்றைக்குள்ள அவ நம்ம கிட்ட பேசலேன்னா அப்பறம் ரெஸ்கியு மெஷினை ஸ்டார்ட் பண்ணுவோம்.”என்றான் விக்டர்..

*************************

என்கிடு போக சொல்லி விட்டதால் வேறு வழியின்றி ஹாண்ட் பேக்கை தூக்கி மாட்டிக்கொண்டு மெல்ல மெல்ல வாசற்கதவை நோக்கி நகர்ந்தவளுக்கு திடீரென ஏதோ நியாபகத்துக்கு வர

“ஆஹ்.”என்று அலறிக்கொண்டு மறுபடி கீழே விழுந்தாள்.

மீண்டும் வருவான்…….
Sanfara.A.L.F
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

“ஹேய், என்ன பண்ணுறே?” என்று அதிரடியாக கட்டிலில் இருந்து பாயும் போது காதிலே மாட்டி இருந்த அந்த சிறிய இயந்திரம் எங்கோ கொண்டுபோய் விழுந்தது. அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த ஆள் எடுத்த…

“ஹேய், என்ன பண்ணுறே?” என்று அதிரடியாக கட்டிலில் இருந்து பாயும் போது காதிலே மாட்டி இருந்த அந்த சிறிய இயந்திரம் எங்கோ கொண்டுபோய் விழுந்தது. அவள் பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த ஆள் எடுத்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *