எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 7

  • 10

சுபஹ் அதான் சத்தத்தோடு தாய் சாரா நிசாத்தை எழுப்பி விட்டு சாராவும் தொழ செல்ல நிசாத்தும் தொழ சென்றான். சுபஹ் தொழுது விட்டு நிசாத் வீட்டிற்கு வந்து தாயின் தேனீர் பாணத்தோடு தன்னுடைய மீட்டிங் புரொஜெக்டை லெப்டோபில் ரெடி ஆகி கொண்டு இருந்தான். தாய் சாரா குர்ஆனை ஓதி விட்டு குட்டி தூக்கத்தில் ஆழ்ந்தார். ஏழு மணி ஆகியது நிசாத்துக்கும் தனது ஆஃபீஸ் வேலையும் முடிந்தது. எல்லாவற்றையும் தயார் செய்து விட்டு நிசாத் குளிக்க செல்லும் போது தாயை அரட்டி விட்டு சென்றான்.

“உம்மா… உம்மா.. டைம் ஏழு மணி ம்ம்மா…. பிரேக்பாஸ்ட் என்ன மா..”

“ஆஹ் நிசாத் தூக்கம் போய்ட்டு மகன் எட்டுக்கு தானே ஆஃபீஸ் போற ரெடி பண்ணிறன் மகன்.”

“ஆஹ் சரிம்மா… நான் வாஷ் ஆகிடு வாரன்.”

“ஆஹ்….”

என்று சொல்லிய படி சாரா கிச்சனுக்குள் சென்றார். மகனுக்கு நேரம் போகின்றது என்று மிகவும் வேகமாக புளிக்க போட்ட மா பேஸ்டை எடுத்து தோசை சுட்டு எடுத்து மகனுக்கும் தனக்கும் சாப்பிட தயார் செய்து வைத்தார். நிசாத் குளித்து விட்டு ஆஃபீஸ்க்கு ரெடி ஆகி வரும் போது தாய் சாராவும் சாப்பாட்டை மேசையில் வைத்துக்கொண்டு இருந்தார். நிசாத் கதிரையில் அமர தாய் அன்போடு உணவை பரிமாறினார்.

“உம்மா இருங்க நீங்களும் சாப்பிடுங்க…”

“இல்ல நிசாத் நீ சாப்பிடு நான் கொஞ்சம் லேட் ஆகி சாப்பிடுறன்.”

“இப்போ டைம் எட்டு மணி ஆகுது. இப்போ சாப்பிட்டா சரி தானே மா?”

என்று நிசாத் சொல்ல மகனின் அன்பான பேச்சுக்கு இணங்கி தாய் தனக்கு எடுத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட ஆரம்பித்தார்.சாப்பிடும் போது சாரா,

“நிசாத், உங்கட ராத்தாக்கு கோள் பண்ணி சொல்லணும். இப்போ கோள் பண்ணுங்க.”

“ஆஹ் இன்னா பண்றன்.”

ரிங் ரிங்….

“அஸ்ஸலாமு அலைக்கும் நிசாத், என்ன இப்போ தானா எங்கட நினைப்பு வந்த…”

பதில் ஸலாத்தோடு

“அல்லாஹ் …. அப்படி இல்லை ராத்தா. உங்கட நினைப்பு இல்லாம இருக்குமா, எப்போவும் உங்கட மச்சான்ட மருமகன் அத்தீக்ட நினைப்பு தான்.”

“ஆஹ் கேட்டா மட்டும் சொல்லிக்குவ தம்பி.”

“ஹா ஹா …என்று நிசாத் சிரிக்க.”

“தா …?  நிசாத் போன என்று சாரா பறித்து.”

“மகள் பாத்திமா இன்றைக்கு அஸர்க்கு நிசாத்ட கல்யாண விசயமா போக இருக்கு நீயும் மச்சானும் வா பிள்ள…”

“என்னமா திடீர்னு இது முதல் நல்ல பொண்ணு அமையலனு பொண்ணு பார்த்துடு தானே இருந்த இப்போ திடீர்னு கூப்டுறீங்க.”

“இல்ல பிள்ள நான் நேத்து பார்த்து வந்த என்று நடந்த எல்லாம் சொல்லி முடிக்க நிசாத்துக்கு ஆஃபீஸுக்கு நேரம் ஆகியது.”

“உம்மா நான் சின்ன போன்ல கோள் பண்ணி தாரன்”

என்று சின்ன போனில் கோள் பண்ணி கொடுத்து விட்டு சாப்பிட்ட கையையும் கழுவி விட்டு ஆஃபீஸ்க்கு காரில் மின்னல் வேகத்தில் சென்றான்.

தாய் சாரா மகளுடன். நடந்த எல்லாம் சொல்ல பாத்திமாவுக்கும் இது ஒரு திடீர் முடிவு என்று புரிந்தது. தனது கோபத்தை விட்டு விட்டு,

“ஆஹ் சரிம்மா நான் அவர்கிட்ட சொல்றன். மூத்த நானாக்கிட்ட பேசிடிங்களா?”

“இல்ல மகள் இனி தான் சொல்லணும்.”

“அவக நாட்டுல இல்ல. வர ஏலாடியும் சொல்ல தானே மா வேணும்.”

“கல்யாணத்துக்கு வரட்டுமே. அவர்க்கும் மதினிக்கும் இப்போ கோள் பண்ணி சொல்லுங்க.”

“ஓஹ் மகள் சொல்லத்தான். சரி பாத்திமா வந்துரு பிள்ள நீயும் மருமகனும். அப்போ நான் வைக்கன்.”

“ஆஹ் சரிம்மா என்று கோளை கட் பண்ணினாள் பாத்திமா.”

சாரா தன்னுடைய பெரிய போனை எடுத்து இப்போ இங்க எட்டரை ஆகுது மகனும் மருமகளும் ஆஃபீஸ் போக ரெடி ஆகுற டைம் மிஸ்கோள் போடுவம். வெர்க் ஓப்ஹ் ஆகி பண்ணடும் என்று எண்ணி, மிஸ் கோள் ஒன்று போட்டு விட்டு கிச்சன் வேலையாய் சென்றார் சாரா.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்


 

சுபஹ் அதான் சத்தத்தோடு தாய் சாரா நிசாத்தை எழுப்பி விட்டு சாராவும் தொழ செல்ல நிசாத்தும் தொழ சென்றான். சுபஹ் தொழுது விட்டு நிசாத் வீட்டிற்கு வந்து தாயின் தேனீர் பாணத்தோடு தன்னுடைய மீட்டிங்…

சுபஹ் அதான் சத்தத்தோடு தாய் சாரா நிசாத்தை எழுப்பி விட்டு சாராவும் தொழ செல்ல நிசாத்தும் தொழ சென்றான். சுபஹ் தொழுது விட்டு நிசாத் வீட்டிற்கு வந்து தாயின் தேனீர் பாணத்தோடு தன்னுடைய மீட்டிங்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *