எதிர் பார்ப்பின் விழித்தோன்றல்கள் பகுதி 8

  • 11

சாரா கிச்சனில் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு நேரத்தை பார்த்தாள் நேரம் பத்து மணியை எட்டி கொண்டு இருந்தது. என்ன இன்னும் மூத்த மகன் கோள் பண்ணல என்று எண்ணி கொண்டு இருக்கும் போது, சாராவின் மூத்த மகன் சகிரிடம் இருந்து போன் மணி ஒலித்தது.

“ஹலோ … அஸ்ஸலாமு அலைக்கும் மகன்”

“வ அலைக்குமுஸ்ஸலாம் உம்மா சுகமா இருக்கிங்களா?”

“அல்ஹம்துலில்லாஹ் மகன். நல்ல சுகம் வாப்பா. நீங்க சுகமா? எங்க மகன் மருமகள்?”

“அல்ஹம்துலில்லாஹ் மா. அவ ஆஃபீஸ்ல மா. நானும் ஆபீஸ்ல தான் மா.”

ஆஹ் என்னனு சொன்னா மகன். நமட நிசாத்துக்கு பொண்ணு பார்த்து திரிஞ்ச தானே ஏதும் சரி வரல மகன். ஆனா நிசாத் இப்படி ஒரு பிள்ளயே கண்ட என்று சொன்ன எனக்கும் முதல் கோபமா தான் இருந்திச்சி, ஆனா போய் பார்த்த பிறகு தான் விளங்கிச்சு பிள்ள நல்லம். நல்ல குணம் படிப்பு அழகு மார்க்கம் அல்ஹம்துலில்லாஹ் மகன். அவளவு பரக்கத் மகன்.

“ஆஹ் மாஷா அல்லாஹ் அப்போ என்ன மா போய் பார்த்து எல்லாம் சரி செஞ்சிட்டு வார தானே மா”

“ஓஹ் மகன் அத சொல்ல தான் கோள் பண்ணினன்.”

“ஆஹ் சரிம்மா அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் சரியா வரும். போய்ட்டு வந்து சொல்லுங்கமா.”

“ஆஹ் சரி மகன் மருமகள்டயும் விசயத்த சொல்லுங்க மகன் அப்ப நான் வைக்கன்.”

“ஆஹ் சரி மா”

என்று கோளை கட் பண்ணினான். சாராவும் பொண் பார்க்க போக தயார் வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நேரத்தை நகர்த்தி கொண்டு இருந்தார்.. லுகர் அதான் சொல்ல தொழுது விட்து பகல் உணவையும் சாப்பிட்டு விட்டு ருஷாவின் வீட்டுக்கு செல்ல சமூக மரபையும் பின் பற்ற வேணும் தானே என்று வழக்காரை மனதில் இருத்தி கொண்டு, பக்கத்து தெரு மூலையில் உள்ள கடைக்கு சென்று பழங்கள் என்பவற்றை ஆரம்பத்திற்கு வாங்கி செல்லலாம் என்று எண்ணி  இனி என்ன அல்ஹம்துலில்லாஹ் என்று எட்டி நடை போட்டு வர திடீர் என,

பீப் பீப்…. என்ன நிசாத்ட கார் ஹோர்ன் சத்தமா இருக்கு என்று திரும்பி பார்க்க, ம்ஹும் .. மகன் தான் என்று ஊர்ச்சீத படுத்திக் கொண்டார்.

மகனும் காரை நிறுத்தி தாயையும் சாமான்களையும் ஏற்றி ஐந்து நிமிடங்களும் இல்லை அதற்கும் குறைவு இருவரும் வீட்டை அடைந்தார்கள்.

நிசாத் வாஷ் ஆகிட்டு வா நான் சாப்பாட எடுத்து வைகன் வந்து சாப்பிட்டுடு எடு மகன், எனக்கு பார்சல் பண்ற வேலை இருக்கு.”

என்று சொல்லி கொண்டு சாமான்களையும் காரில் இருந்து இறக்கி வீட்டுக்குள் கொண்டு சென்றார் சாரா.

“ம் …..சரிம்மா”

என்று நிசாத்தும் மாடிக்கு தனது ரூமை நோக்கி சென்றான். தாய் சாரா ஏழு வகை பழங்களை மிகவும் அழகாக பார்ஸல் செய்து வைக்க, மகள் பாத்திமாவும் அவளின் கணவரும் பிள்ளையும் வந்து ஏறினர்.

“இப்போ தான் உங்களை நினைச்ச ஆஹ் வாங்க மகள் மருமகன், வாடா என்ட சிங்க குட்டி அத்தீக்”

எல்லாரும் சந்தோஷத்துடன், இருக்கையில் மகளும் உம்மாவும் கொண்டு போற சாமான்களை சரி செய்தனர். அத்தீக் வாப்பாவுடன் விளையாட நிசாத்தும் சாப்பிட்டு விட்டு வந்தவன் சின்ன மகனையும் ராத்தா மச்சானையும் கண்ட சந்தோச கடலில் மிதந்தான்.

அப்போது தான் நிசாத்தின் மச்சான் பாரூக் கிண்டலாய்,

“என்ன மச்சினன் சொல்லாம எல்லாம் பொண்ண பார்த்து இருக்கீங்க போல.”

“என்ன மச்சான் இப்படி பேசுறீங்க. அப்படி பொண்ணு எல்லாம் பார்க்கல. இப்படி கண்டன் உம்மாகிட சொன்னன் மச்சான்.”

“நிசாத் சும்மா சொன்னன் பா.”

என்று பேசி இருக்கும் போது அஸர்  அதான் சொல்ல பாரூக்கும் நிசாத்தும் தொழ செல்ல.

“பாத்திமா அவக தொழுதுட்டு வார வேல நாமளும் தொழுதிடு ரெடி ஆகுவோம் பிள்ள.”

“சரி”

என்று பாத்திமா சொல்லி விட்டு, மகளும் சாராவும் அஸர் தொழ சென்றார்கள்.

சற்று நேரத்தின் பின் தொழுகையை முடித்து விட்டு நிசாத்தும் பாரூக்கும் வரும் போது பாத்திமா, தாய் சாரா, சித்தி அண்டி, சித்தி அண்டிட கணவர் எல்லாம் அவர்களின் வருகையை ஏதிர் பார்த்தவர்களாக இருந்தார்கள்.

“என்ன எல்லாரும் ரெடி போல …என்று பாரூக் கேட்க..”

எல்லாரும் சிரிப்புடன்,

“சின்ன மருமகள பார்க்க போக அவலோவோ எதிர் பார்ப்பு”

என்று சாரா சொல்ல எல்லோரும் சந்தோசத்தோடு காரில் சாமானை ஏற்றி விட்டு காரில் சாரா, சித்தி அண்டி, பாத்திமா அவளின் மகன் அத்தீகோடும் புறப்பட, பாரூக்கும் சித்தி அண்டியின் கணவரும் மோடர்பைக்களில் காரினை பின் தொடர்ந்து தேவதையின் வாசல் நாடிய பயணத்தை மேற்கொண்டார்கள்.

தொடரும்….
K.Fathima Risama
Nintavur.
SEUSL.
வியூகம் வெளியீட்டு மையம்

சாரா கிச்சனில் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு நேரத்தை பார்த்தாள் நேரம் பத்து மணியை எட்டி கொண்டு இருந்தது. என்ன இன்னும் மூத்த மகன் கோள் பண்ணல என்று எண்ணி கொண்டு இருக்கும் போது,…

சாரா கிச்சனில் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு நேரத்தை பார்த்தாள் நேரம் பத்து மணியை எட்டி கொண்டு இருந்தது. என்ன இன்னும் மூத்த மகன் கோள் பண்ணல என்று எண்ணி கொண்டு இருக்கும் போது,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *