ஆசானே விழித்தெழு!!

  • 7

ஆசானே! நீ செதுக்கி வைத்த சிலையல்ல. சிற்பத்தையே செதுக்கியெழுப்பும் உளி! உன் வார்த்தைகள் வெறும் கதையல்ல. மாணவ உள்ளங்களில் புதையுண்ட விதை!

சிந்தியுங்கள் நாம் யாரை உருவாக்கியிருக்கிறோம்…? (B)புளு வேய்ல் ஆட்டம் காண்பித்து உயிருடன் விளையாடும் தொழிநுட்பவியலாளனையா? உயிர் காக்கும் கடமை மறந்து உடலுறுப்பை சூறையாடி பேரம்பேசும் வைத்தியனையா?

பட்டதாரிகள் வீதம் இன்று அதிகரித்துச் செல்வதிலென்னவோ பெருமைதான். பண்பாடில்லாத கல்வியின் அதிகரிப்பில் என்ன பயன்…? நாம் கற்பித்த சமூகவியலும், சூழலியலும், ஆன்மீகவியலும் அவர்களின் உள்ளத்தில் விதைத்ததுதான் என்ன?

நம் கைதட்டலைப் பெற்ற பிஞ்சுதான் இன்று வைன் ஷாப்பின் கதவுகளைத் தட்டுகிறான். அறநெறியுடன் நம்முன் காட்சியளித்தவன் இன்று அடக்குமுறையை கையாளும் தீவிரவாதியாகிறான். அன்பிற்கு அடிமைப்பட்டு ஆசானின் கைப்பிடித்து நடந்த மாணவன் இன்று பள்ளிக்குள்ளேயே போதைக்கு அடிமைப்பட்டு சிறைச்சாலை நடந்து சீரழிந்து போகிறான்.

ஆசான்களே! உங்கள் உள்ளத்தில் கைவைத்து கேட்டுப்பாருங்கள். நாம் செய்த தவறுதான் என்ன?
ஒழுக்கத்துடனான கல்வியை கற்பிக்க மறந்ததா? ஒழுங்கான தலைமைத்துவ முன்மாதிரியாய்
வாழ்ந்து காட்டாததா? நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவ பொக்கிசங்கள் பொரம்போக்கு நிலமாக மாறுவதும் பொன் நிறை வளமாக ஆகுவதும் நமது கைகளிலே!

கட்சிகள் கைமாறட்டும். கல்வியில் புதுச்சட்டங்கள் உருவாகட்டும். நம் சேவையில் அர்ப்பணிப்புடன் இருப்போம்! ஒழுக்கத்துடனான கல்வியுடன் சிறந்த தலைமுறையைப் படைப்போம்! என் கருத்துகளுக்கு உயிரோட்டம் இருக்கிறதென நம்புகிறேன். ஒவ்வோர் ஆசானும் இதை உணர்வோடு சிந்தித்தால்…..!!!!

Firosa Muzammil
Beruwala
வியூகம் வெளியீட்டு மையம்

ஆசானே! நீ செதுக்கி வைத்த சிலையல்ல. சிற்பத்தையே செதுக்கியெழுப்பும் உளி! உன் வார்த்தைகள் வெறும் கதையல்ல. மாணவ உள்ளங்களில் புதையுண்ட விதை! சிந்தியுங்கள் நாம் யாரை உருவாக்கியிருக்கிறோம்…? (B)புளு வேய்ல் ஆட்டம் காண்பித்து உயிருடன்…

ஆசானே! நீ செதுக்கி வைத்த சிலையல்ல. சிற்பத்தையே செதுக்கியெழுப்பும் உளி! உன் வார்த்தைகள் வெறும் கதையல்ல. மாணவ உள்ளங்களில் புதையுண்ட விதை! சிந்தியுங்கள் நாம் யாரை உருவாக்கியிருக்கிறோம்…? (B)புளு வேய்ல் ஆட்டம் காண்பித்து உயிருடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *